கர்த்தர் தரும் உன்னத ஆசீர்வாதங்கள்
Wed Feb 10, 2016 1:21 pm
உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும்... உன்னை ஆசீர்வதிப்பார்’. (ஆதி.49:25)
இந்த வசனத்தில், தகப்பனாகிய யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்பை ஆசீர்வதிக்கும் பொழுது, உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்கள் என குறிப்பிடுகிறார். இது பரலோக ஆசீர்வாதங்கள் அல்லது உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களுக்கு அடையாளமாயிருக்கிறது.
குறிப்பாக, இனி வரும் நாட்களில் தேவனை நம்புகிற ஒவ்வொரு தேவ பிள்ளைகளுடைய ஆவிக்குரிய நிலைமை உயர்த்தப்படும். அபிஷேகத்தின் வல்லமை அளவில்லாமல் பெருகும். அதே வேளையில், தம்முடைய ஜனத்திற்கு ஆத்தும பாரத்தையும், வல்லமையையும், கிருபையையும் கர்த்தர் அளவில்லாமல் கொடுப்பார்.
உங்கள் வீடுகளில் இதுவரைக்கும் ரட்சிக்கப்படாதவர்கள் ரட்சிப்பைக் காண்பார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் ஜெப ஆவி அளவில்லாமல் ஊற்றப்படும். இதுவரை இல்லாத அளவிற்கு கர்த்தருக்கும், கர்த்தருடைய ஊழியத்திற்கும் தேவபிள்ளைகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வாலிபர்களுக்குள்ளே ஆண்டவர் மாபெரும் அசைவையும், எழுப்புதலையும் ஊற்றுவார்.
கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டுகிற யாராயிருந்தாலும், அவர்கள் ஒருவேளை படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், கர்த்தரும் அவர்களுக்காக வைராக்கியம் பாராட்டி கனப்படுத்துவார். அதே வேளையில் சத்துரு தனக்கு கொஞ்ச நாட்கள் உண்டென்று அறிந்து, தேவ மனிதர்களுக்கும், சபைகளுக்கும் விரோதமாக பலவிதமான தந்திரங்களைக் கொண்டு வந்து, குழப்ப முற்படுவான். என்றாலும், ஏற்கனவே நம் பாரதம் எழுப்புதல் அலையை கண்டபடியால், அவனுடைய கிரியைகள் முற்றிலும் அழிக்கப்படும்.
அன்பானவர்களே! யோசேப்பிற்கு அருளின உன்னத ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் அளவில்லாமல் பெருகுவதுதான் தேவனுடைய சித்தம்.
‘அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்’. (எபே.1:3)
கடந்த நாட்களில் பலதரப்பட்ட போராட்டங்களினாலும், இழப்புகளினாலும், மனசோர்வுகளினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கடந்ததை மறந்து உன்னதத்தின் ஆசீர்வாதங்களுக்கு உங்களை அர்ப்பணியுங்கள்.
ரட்சிப்பு, மனம் திரும்புதல், தேவனுடைய சித்தத்தை அறிகிற அறிவு, பரிசுத்தமுள்ள வாழ்வு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இவையனைத்தையும் உள்ளடக்கியதே உன்னதத்தின் ஆசீர்வாதங்கள். இவைகளை உங்களுக்கு அருள ஆண்டவர் ஆயத்தம். நீங்களும் உங்களுடைய இருதயத்தை கிழித்து தேவன் பக்கமாக திரும்புங்கள். உலகத்திற்காக வாழ்ந்தது போதும். ஒருவேளை இன்று கர்த்தர் வருவாரானால் அவரை நாம் சந்திக்க வேண்டுமல்லவா?.
வருகிற நாட்கள் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும், செழிப்பையும், வளமான வாழ்வையும் பெற்றுக் கொள்ளுகிற நாட்களாக இருக்கும். தேவன் ஒருவரை ஆசீர்வதிக்கும் பொழுது, ஆன்மிக வாழ்வை மட்டும் கொடுத்து, உலகத்தில் அவர்களை கைவிடமாட்டார்.
அநேக தேவ பிள்ளைகள் திருப்தியற்ற பொருளாதாரம், பற்றாக்குறைவு, பெலவீனக்குறைவு, தேவன் அருளும் ஞானக்குறைவு இப்படி அனைத்திலும் குறை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் தேவனுடைய வசனத்தின் மேல் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இல்லை. வசனத்தை வாசிப்பது வேறு. அதை பிரசங்கிப்பது வேறு. அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்வது முற்றிலும் வேறு. அதைவிட அவ்வசனத்தின்படி வாழ்வதுதான் அற்புதங்களை அனுபவிக்கும் நுழைவாயிலாகும்.
இவ்வுலகத்தில் என்னென்ன ஆசீர்வாதங்கள் உண்டோ அவைகள் உங்கள் வீட்டில் உண்டு. ஞானமற்ற உங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டவர் ஞானத்தைக் கொடுப்பார். கடந்த நாட்களில் பட்டபாடுகளுக்கு இந்நாட்களில் பிரதிபலனை காண்பீர்கள். தரித்திரத்தின் ஆவியை முற்றிலுமாய் துரத்தி, ஐசுவரியத்தின் ஆசீர்வாதத்தால் கர்த்தர் என்னை நிரப்புகிறார் என நாள்தோறும் அறிக்கை செய்யுங்கள்.
உங்கள் பெலவீனத்தை மாற்றுகிற பரிசுத்த ஆவியானவரின் கரங்களில் அனுதினமும் உங்களை அர்ப்பணியுங்கள். ஒவ்வொரு நாளுக்குரிய பெலனால் கர்த்தர் உங்களை நிரப்புவார்.
‘ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்’ (1 கொரி.1:27) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது போல ஞானமில்லாமல் இருக்கிற உங்களுக்கு தம்முடைய ஞானத்தை தந்து, சம்பாதிப்பதற்கு ஏற்ற பெலனையும் தருவார்.
இத்தனை ஆசீர்வாதங்களையும் கொடுப்பதற்கு ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அதே வேளையில் இதை அனுபவிக்க நாம் பாத்திரவான்களாக இருக்க வேண்டுமல்லவா?
ஆகவே யோசேப்பை போல கனி தரும் செடியாக வளர உங்களை அர்ப்பணியுங்கள். ‘யோசேப்பு’ என்ற பெயருக்கு ‘பெருக்கம்’ என பொருள்.
பரிசுத்தம், உண்மை, அர்ப்பணிப்பு, விலைக் கிரயம், விடாமுயற்சி, விசுவாசம், நம்பிக்கை, அன்பு இவையனைத்திலும் பெருக உங்களைவிட்டுக் கொடுங்கள்.
கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் உங்களில் நிறை வேறி இருக்கிறதை காண்பீர்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum