திருப்தியாக்கும் கர்த்தர்
Fri Feb 12, 2016 9:38 am
வேதத்தில் தேவனை ருசித்த ஒவ்வொரு பாத்திரங்களும் அவரைப்பற்றி அறிந்தது என்னெவெனில் திருப்தியாக்கும் கர்த்தர்;”.
ஆம் சங்கீதக்காரன் இப்படியாக சொல்கிறான் கர்த்தர்; என் மேய்ப்பனாயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்
சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் ஆனால் கர்த்தரை தேடுவோருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. சங் 34:10
கன்மலையின் தேனினால் என்னை திருப்தியாக்குகிறார்
ஆம் அருமையானவர்களே, நம் தேவன் திருப்தியாக்கும் கர்த்தர் என்பதனை அறிந்திருக்கிறோம் என்பது உண்மையே. ஆனால் நாம் இன்று அவருக்குள் திருப்தி அடைந்திருக்கின்றோமா? அல்லது இன்னும் ஏதோ ஒரு வெற்றி டத்துடனும் குறைவுடனும் அதிருப்தியுடனும் அவரை சேவித்துக் கொண்டிருக்கிறோமா?
அதிருப்தியானால் தவறு அவரிடம் இருக்க முடியாது. நிச்சயமாகவே நம்மிடம் தான் இருக்கும்.
அதிருப்திக்கு முதல் காரணம்
திருப்திடையாத நான்கு காரியங்கள் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது. பாதளம், மலட்டுகாப்பம், தண்ணீரினால் திருப்தியடையாத நிலம், போதுமென்று சொல்லாத அக்கினி (நீதி 30:15). இந்த தண்ணீரும் அக்கினியும் அளவுடன் இருந்தால், பலவிதங்களில் பயன்படும். அளவுக்கு மீறும் போது அதுவே அழிவுக்கும் காரணமாகி விடுகிறது. அது போலத்தான் இந்த உலகமும் உலகத்;திலுள்ளவைகளும்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நான் உலகத் தானல்லாதது போல நீங்களும் உலகத்தானல்ல என்றார். உலகத்திலிருந்து நம்மை பிரிக்க முடியாது தான். நாம் இந்த உலகத்திலிருந்தாலும் இந்த உலகத்திலிருந்து நாம் பிரிந்திருக்க முடியும். எப்படியெனில் நாம் பயன்படுத்தும் அளவு நேஉநளளவைல (தேவையான அளவு) என்று ஒன்று உண்டு. அதாவது தேவன் நமக்கென்று ஆசீர்வதித்துள்ள உலகத்திலுள்ளவைகளை நாம் தேவையான அளவு பயன்படுத்தும் போது நமக்கு பாதிப்பு இல்லை. அங்கே தான் திருப்தியும் காணமுடியும்.
ஆனால் அது தேவையான அளவை மீறும் போது நெஉநளளவைல யைத் தாண்டும் போது அது எல்லை மீறி ஆபத்தைக் கொண்டு வருவது மாத்திரமல்ல, தேவனிடமிருந்து நமக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதத்தையும் எல்லையையும் மீறச்செய்து விடுகிறது.
நமது ஆசையாவும் உலத்தின் மீது போகப்போக “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை செல்வப்பிரியன் செல்வத்தினால் திருப்தியாவதில்லை என்ற வசனத்தின் படி திருப்தி என்பதே இல்லாமல் ஆகிவிடும். தேவனுடைய கட்டுப்பாட்டிலிருந்து நம்மை பிரித்தெடுத்து விடும். உலகம் என்று சொல்லும் போது கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஐPவனத்தின் பெருமை இவையாவும் பிதாவினாலுண்டானவைகள் அல்ல”
தேவையை மீறி கண்கள் இச்சிப்பதையும் மாம்சம் இச்சிப்பதையும் அடைய நினைக்கும் போது நமது எதிர்பார்ப்புகளுக்கு அளவே இல்லாமல் தேவனிடத்தில் திருப்தி பெற இயலாமல் செய்து விடுகிறது. நமது ஐPவனத்திற்கு தேவையான அளவின்படி வாழாமல் நம் பெருமைக்காக ஜீவனம் செய்யும் போது உசநனவை உயசன ல் கடன்தான் மிஞ்சும். உலகத்திலிருந்து நம்மை பிரிக்க முடியாது தான்.
ஆனால் நாம் உலகத்திலிருந்தாலும் இந்த உலகத்திலிருந்து பிரிந்து நம்மால் வாழமுடியும். எப்போதென்றால் தேவைக்குள் நம்மை உள்ளாக்கி கொள்ளும் போது நமக்கேற்படும் ஆசை இச்சை இயல்பானது. ஆனால் அவைகளுக்கெல்லாம் இணங்காமல் நம் சுயத்தை கட்டுப்படுத்தி ஆளும் போது நாம் எப்போதும் கிறிஸ்துவினுடையவர்களாய் அவரில் திருப்தியுடன் வாழ முடியும்.
கிறிஸ்துவினுடையவர்கள் மாம்சத்தையும் அதின் ஆசை. இச்சைகளையும் சிலுவையிலறைந்திருக்கிறார்கள். (கலா5) சிலுவையில் நாம் அறையபடாதபடி போதுமானவர் என்று அவரை வாயினாலே ஆராதனை செய்வோமேயன்றி உண்மையில் தேவனை நாம் போதுமானவராய் ருசித்திட முடியாது.
2. அடுத்ததாக பிறரோடு ஒப்பிடுவது
ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவரவருக்கென்று தேவன் குறித்த ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். நமக்கென்று தேவன் நியமித்துள்ள ஆசிர்வாதங்களை நாம் நோக்காமல் பிறருடையதை பார்த்து நாம் ஒப்பிடும் போது அதிருப்தி உண்டாகிறது. இதனை இயேசுகிறிஸ்து போதித்த 2 உவமைகளிலிருந்து பார்க்கப்போகிறோம்.
மத்தேயு 20: 1-16
அதிகாலையில் புறப்பட்ட வீட்டெஜமானன் தன்னுடைய திராட்சைதோட்டத்திற்கு வேலையாட்களை நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி தோட்டத்திற்கு அனுப்பினான். மூன்றாம் மணி வேளையிலும். ஆறாம், ஒன்பதாம் மணி வேளையிலும, பதினோராம் மணிவேளையிலும் சும்மா நிற்கிறவர்களைக் கண்டு “ஒருவரும் எங்களுக்கு வேலையில்லை” என்று சொன்ன அவர்ளையும் நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்று வேலையில் அமர்த்துகிறான்;. முடிவில் எல்லோருக்கும் சமமாய் ஒரு பணம் கூலி கொடுத்தான்.
அதனைக் கண்ட அதிகாலையிலிருந்து வேலை பார்த்தவர்கள் அதிருப்தியடைந்தார்கள். பகல் முழுவதும் உழைத்த நமக்கும் பதினோராம் மணி வேளையில் வந்தவர்க்கும் ஒரே கூலியா? என்று ஒப்பிட்டு பார்த்ததினால் அதிருப்தி வந்தது.
முதலில் வந்தவர்களுக்கு சொன்னபடி கூலி கொடுத்தது உண்மைதான். ஆனால் அந்த எஜமானன் ஏன் பதினோராம் மணி வேளையில் வந்தவர்க்கும் அதே அளவு கூலி கொடுக்க வேண்டும்,? என்ற கேள்வி ஒருவேளை உங்கள் இருதயத்தில் எழக்கூடும்;.
தேவன் நீதியுள்ளவர். அவரில் பட்சபாதம் இல்லை.
அதிகாலையில் வேலையில் சேர்ந்தவர்கள் தன்னுடைய கூலியை மட்டுமே மையமாக கொண்டு வேலை செய்திருப்பார்கள். ஆனால் பதினோராம் மணி வேளை வரைக்கும் காத்திருந்தவர்களுக்கு நன்கு தெரியும். இதற்கு மேல் நியாயமாய் வேலை செய்தாலும் மிக குறைந்த ஊதியம்தான் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் பண அளவை பார்க்காதபடி வாயப்புக்காக காத்திருந்தனர். எனவே தான் வாய்ப்பு வந்த பின்னர் அவர்கள் காத்திருந்த நேரத்தின் பலனையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டனர். 1 மணி நேரம் வேலைக்கே எஜமான் 1 பணம் கொடுத்த அவருடைய கிருபையையும் அன்பினையும் நன்றாய் அறிந்திருப்பார்கள். ஆகவே மறுபடியும் அதே எஜமானனிடமே தஞ்சம் அடைந்திருப்பார்கள்.
அப்படி என்றால் முதலில் வந்தவர்களுக்கு ஏன் பேசினபடியே ஒருபணம் கொடுக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாக கொடுத்திருக்கலாமே?
தேவன் எதைச் செய்தாலும் ஒரு காரணம் இருக்கும். காரணமில்லாமல் எதையுமே செய்யமாட்டார். அப்படி என்றால் என்ன காரணமாக இருந்திருக்கக் கூடும்?
அவர்களில் தேவைக்கேற்ப கொடுக்காதபடிக்கு அதிகம் கொடுத்திருப்பாரென்றால் அது அவர்களுக்கு சோம்பேறித் தனத்தை கொண்டு வந்திருக்ககூடும். மேலும் இனிமேல் தேவை ஏற்பட்டால் மறுபடியும் வந்து கொள்ளலாம் என்ற மெத்தனமும் அவர்களிடம் இருந்திருக்க கூடும். எனவே தான் அவர்களுக்கு (பேசின கூலி) தேவையானதை மாத்திரம் கொடுத்தார்.
கெட்டகுமாரன் -லூக்கா 15:11-32;
மூத்த குமாரன் தன்னை இளையகுமாரனோடு ஒப்பிட்டுப் பார்த்தபடியினால் தான் அவ்வளவு நாட்களாகவும் திருப்தியுடன் தகப்பன் வீட்டில் வாழ்ந்த அவனுக்கு தகப்பனுடைய வீடு அதிருப்தியை வரவழைத்தது. சரி மூத்தகுமாரனுடைய கோபம் நியாயமானதுதானே. இவ்வளவு நாளும் உண்மையாய் தகப்பனுக்கு கூடவே இருந்த பிள்ளையல்லவா? பாவத்தில் ஆஸ்தியை அழித்துப் போட்டவனுக்கு ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கத் தோன்றும்
ஆம்………. இளையகுமாரன் கேட்டவுடன் சொத்தையே கொடுத்து அனுப்பினவர் மூத்தகுமாரனுக்கு தன் சிநேகிதரோடே சந்தோஷமாயிருக்கும்படிக்கு ஒரு ஆட்டுக்குட்டியும் கொடுக்கவில்லை.
இளைய குமாரன் சொத்தை அழித்துப் போட்டாலும் மீண்டும் தன்னிடமாய் திரும்பி வந்துவிடுவான் என்று அவருக்குத் தெரியும். அதனால் தான் அவனை அனுப்பிவிட்டு வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் மூத்தகுமாரன் கொஞ்சம் அளவு கூட்டி கொடுத்து விட்டால் போதும் தகப்பனிடம் திரும்பி வர மாட்டான். எனவே தேவைக்கேற்ப அன்றுள்ள படியை மாத்திரம் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏன்? நன்றாய் உழைக்கும் எனக்கு தேவனுக்காய் ஓடும் எனக்கு தேவன் வீட்டிலேயே அவருடைய பிரசன்னத்தினாலே வாழும் எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் குறைவான நிலையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று ஒப்பீடு செய்து கொண்டு சோர்வாய் அதிருப்தியுடனே தேவனை சேவித்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஒரு பழமொழி சொல்வார்கள்
ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைப்பான் என்று. ஆம் பிரியமானவர்களே இருதயத்தை பார்க்கிற தேவனுக்குத்தான் நம்மைபற்றி தெரியும். கொஞ்சம் கூட ஆசீர்வதிக்கப்பட்;டுவிட்டால் எப்படியெல்லாம் மாறிவிடுவோ மென்று. எனவே தான் நமக்கு தேவையான அளவு கொடுத்து எப்போதும் அவரையே நோக்கிக் கொண்டிருக்கும் படிக்கு வைத்துள்ளார்.
அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். இதனைக்காட்டிலும் நம் ஆத்துமாவை பாதாளத்தில் விடாதபடிக்கு நரகத்திலிருந்து காப்பது அதிமுக்கியமானதன்றோ?
அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாக மாறிவிடும். நமக்கு எது அளவு என்று நம் தேவனுக்கு மாத்திரமே நன்றாக தெரியும்.
எனவே முதலாவது தேவன்மேல் பூரண நம்பிக்கை கொள்வோம். எதைச் செய்தாலும் நன்மைக்கென்றே செய்திடுவார். அவர் என் வாழ்வில் என்னென்ன செய்தாலும் அதில் நியாயமான காரணம் இருக்கும் என்று கர்த்தரை விசுவாசிப்போம். இரண்டாவது தேவன் நமக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதத்தின் அளவை வேறொருவராலும் கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது. எனவே பிறரோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்ளாதபடி நமக்கு கொடுக் கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களுக்காய் தேவனுக்கு நன்றி சொல்வோம்
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்
கர்த்தர் தாமே நம்மை திருப்தியாக்கி நடத்துவாராக ஆமென்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum