ஏன் தேவனுக்கு காணிக்கை கொடுக்கிறோம்? ஏன் தேவனுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும்?
Wed Feb 03, 2016 11:45 pm
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து ,உங்கள் மடியிலே போடுவார்கள் நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். லூக்கா 6:38
மனிதனுடைய இயல்பு என்னவென்றால் கொடுப்பதை காட்டிலும் வாங்குவதாகவும். ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் கொடுக்கிறவர். அவர் எப்படி கொடுக்கிறவராய் இருக்கிறாரோ அது போல் நாமும் கொடுக்கிறவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இன்று அநேகர் தாம் முதலில் கொடுக்கிறோம் என்று நினைக்கின்றார்கள். ஏன் நாம் தேவனுக்கு கொடுக்கவேண்டும் என்பதை அறியமால் இருக்கிறார்கள்.
வேதத்தில் ஆதியாகமம் 4 ஆம் அதிகாரத்தில் தான் தேவனுக்கு என்று காணிக்கை கொடுப்பதை பார்க்கிறோம். காயினும், ஆபேலும் தேவனுக்கு கொடுக்கிறார்கள். சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளை காணிக்கையாக கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையனவைகளிலும் சிலவற்றை கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்.( ஆதியாகமம் 4:3-4).
இங்கு தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று கற்று கொடுத்தது யார்?
நிச்சயமாய் ஆதமும் ஏவாளும் தான் அவர்களுக்கு கற்றுகொடுத்திருக்க வேண்டும். ஆதமும் ஏவாளும் எப்படி தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டார்கள். பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன் கொடுக்கிற தேவன். தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல் அவரையே நமக்காக ஒப்புகொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?(ரோமர் 8:32).அவருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்படி தேவனே முதலில் கொடுத்தார்.தேவன் மனிதனை சிருஷ்டித்து அவனுக்கு ஜீவ சுவாசத்தை கொடுத்தார். தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மன்னினலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2:7).
மனிதனுக்கு பூமியில் வாழ தேவையான அனைத்தையும் கொடுத்தார்.பூமியிலுள்ள சகல மிருக ஜீவன்களுக்கும், ஆகாயத்தில் உள்ள சகல பறவைகளுக்கும், பூமியின் மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாக கொடுத்தேன் என்றார்; அது அப்படியேஆயிற்று. (ஆதி 1:30) தேவனுக்கு நாம் கொடுக்கும் போது அவர் நமக்கு அதிகமாக கொடுப்பது நிச்சயம். எனவே பிரியமானவர்களே, நாம் தேவனுக்கு கொடுப்பது அவர் நமக்கு மீண்டும் கொடுப்பார் என்ற எண்ணத்துடன் அல்ல. அவர் முதலில் நமக்கு கொடுத்திருக்கிறார்.வாரியிறைத்தும் விருத்திடைவார் உண்டு; அதிகமாய் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. (நீதி 11:24)
இன்றைக்கும் பல தேவனுடைய பிள்ளைகளின் வாழ்கையில் தேவனுக்கு என்று கொடுக்கும் பழக்கம் இல்லை. அவர்களிடத்தில் நீங்கள் ஏன் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில். அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில்அவர்களுடைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடிவதில்லை என்பதாகும்.
தேவனுக்கு என்று கொடுக்க விசுவாசம் உங்களுக்கு தேவை. அப்பொழுது தான் உங்களுடைய தேவைகள் சந்திக்கபடவேண்டிய நிலையிலும் தேவனுக்கு என்று கொடுக்க முடியும். நீங்கள் தேவனுக்கு என்று விசுவாசத்தில் கொடுக்கும் போது தேவன் உங்கள் மேல் பிரியமாய் இருக்கிறார். உங்கள் தேவைகளை சந்திக்க தேவனால் கூடும். தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைகிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.(2 கொரிந்தியர் 9:6).
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதை பெருகப்பன்னி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்க செய்வார்.(2 கொரிந்தியர் 9:10). தேவன் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதை தேவனுக்காக கொடுங்கள். தேவனுடைய ராஜ்யத்திற்கு விதையுங்கள். தேவன் நிச்சயமாய் அதை பெருகசெய்து பெரிய அறுவடையை உங்களுக்கு கொடுப்பார். உங்களுடைய தேவைகள் நிச்சயமாய் சந்திக்கபடும். தேவனுக்கு என்று நீங்கள் கொடுப்பது விதைப்பதாகும். நீங்கள் விதைக்கும் விதைக்கு நூறு மடங்கு பலன் உண்டு.
தேவனுக்கு என்று நீங்கள் கொடுக்கும் விதை எதுவாகவும் இருக்கலாஉங்களுடைய விதை நேரமாக இருக்கலாம்.தேவ சமூகத்தில் நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய விதை தாளந்துகளாக இருக்கலாம். தேவைக்காக உங்கள் அறிவையும் தளந்துகளையும் செலவிடுங்கள். உங்களுடைய விதை பணமாக இருக்கலாம். தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷ வேலைக்காக கொடுங்கள்.
மோசம்போகதிருங்கள், தேவன் தம்மை பரியாசம்பன்னவொடார் மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். - கலாத்தியர் 6:7
http://tamilchristianweb.blogspot.com/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum