காணிக்கை, தசம பாகம் – இவற்றில் ஏற்படும் குழப்பங்கள்
Tue Feb 02, 2016 2:28 pm
தசம பாகம், காணிக்கை என்ற இரு காரியங்களும் வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டு, வேதத்தில் உள்ள பலரும் அவற்றை அளித்துள்ளதாக வாசிக்க முடிகிறது. ஆனால் இவ்விரண்டிலும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பல சந்தேகங்கள் நீடிக்கிறது.
சில மாதங்களுக்கு முன் பழைய விசுவாசியான நண்பர் ஒருவர், தசமபாகம் யாருக்கு, எப்போது, எப்படி அளிக்க வேண்டும் என்று தனக்கு தெரியாது என்று கூறினார். ஆச்சரியமடைந்த நான், அவற்றை குறித்து விளக்கினேன். அவரை போல, இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது என்பது தெரியவந்தது.
இன்று பொதுவாக சபைகளில் பல ஆராதனைகள் நடைபெறுவதால், இது போன்ற அடிப்படை காரியங்களை குறித்து பேச, போதகர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே நமது இணையதள வாசகர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த செய்தியை வெளியிடுகிறோம். இந்த செய்தியை உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களும் பயன் பெறுவார்கள் என்று விசுவாசிக்கிறோம்.
தசம பாகம்:
தசம பாகம் என்பதை ஆதியாகமம் புத்தகத்தில் இருந்தே காண முடிகிறது. விசுவாசிகளின் பிதாவாகிய ஆபிரகாம், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு, எல்லாவற்றிலும் தசமபாகம் அளித்தார் என்று (ஆதியாகமம்:14.18-20) வாசிக்கிறோம். அதன்பிறகு இஸ்ரவேல் மக்கள் தசமபாகத்தை அளிக்க வேண்டிய முறையை குறித்து, மோசேயின் மூலம் தேவன் கட்டளை அளிக்கிறார்.
இந்த தசம பாகம் என்பது நமது வருமானத்தில் பத்தில் ஒன்று என்பது நமக்கு தெரியும். பண்டைய காலத்தில் விவசாயம், ஆடு, மாடுகள் வளர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்ததாலும், பண்டமாற்று முறை நிலுவையில் இருந்ததாலும், முன்கால கிறிஸ்தவர்கள் தசம பாகத்தை பொருட்களாக அளித்து வந்தனர். ஆனால் இன்று பொதுவாக தினக்கூலி முதல் மாத சம்பளம் வரை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அதில் பத்தில் ஒரு பங்கை எடுத்து வைத்து தேவனுக்கு அளிக்கலாம். (எடுத்துக்காட்டு தினக்கூலி ரூ.100 என்றால் – ரூ.10 தசம பாகம்).
தேவனுடைய ஊழியர்களுக்கு அளிப்பது தேவனுக்கு அளிப்பதற்கு சமம் என்று வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். எனவே நாம் எந்த சபையை சேர்ந்திருக்கிறோமோ? அந்த சபையின் ஊழியருக்கு தான் அதை அளிக்க வேண்டும்.
நாம் செல்லும் சபையின் ஊழியருக்கும், சபையிலும் எந்த குறையும் இல்லை என்பதால், நான் மிஷினரிகளுக்கும், மிகவும் கஷ்டப்படும் மற்ற சபையின் ஊழியர்களுக்கும், எனது தசமபாகத்தை அளிக்கிறேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். அது ஒரு தவறான பழக்கமாகும். ஏனெனில் நீங்கள் செல்லும் சபையின் ஊழியக்காரர், தேவ சமூகத்தில் உங்கள் குடும்பத்திற்கான பொறுப்பாளர் ஆவார். உங்களுக்காக ஜெபிக்க, தேவ ஆலோசனை அளிக்க, வேதனையில் தாங்க, அவரை தேவன் நியமித்துள்ளார்.
மேலும் தசமபாகத்தின் ஒரு பகுதியை நமது சபை ஊழியருக்கு அளித்துவிட்டு, பாதியை மற்ற ஊழியருக்கு அளிப்பதும் தவறு தான். சிலர் தசம பாகத்தில் பாதியை ஊழியருக்கு அளித்துவிட்டு, மீதியை காணிக்கையாக அளிக்க எடுத்து வைப்பார்கள். அதுவும் தவறு தான். நாம் தசமபாகம் எப்போதும் முழுமையாக தான் அளிக்க வேண்டும். காணிக்கை என்பது தசமபாகத்தில் உட்பட்டது அல்ல.
காணிக்கை:
தசமபாகத்தை அளித்த பிறகு, நமக்கு செலவிற்காக வைத்துள்ள பணத்தில் இருந்து எடுத்து அளிப்பது தான் காணிக்கை. ஏனெனில் காணிக்கை என்பது உற்சாகத்தோடு அளிக்க வேண்டியது என்று தேவன், மோசேக்கு கூறுவதை வேதத்தில் வாசிக்கிறோம். அது கட்டாயமாக வாங்க கூடாது. ஆனால் தசமபாகம் கட்டாயம் அளிக்க வேண்டியது.
நம் வீட்டிற்கு ஊழியர்கள் யாராவது வந்துவிட்டால், அவருக்கு கட்டாயம் காணிக்கை அளிக்க வேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் கிறிஸ்தவர்களிடையே உள்ளது. ஆனால் அப்படி வேதத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு மத்தேயு:10.42 மற்றும் மாற்கு:9.41 ஆகிய வசனங்களை காட்டுவார்கள். ஆனால் அங்கே இயேசு காணிக்கையை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் நம் சபை ஊழியருக்கு தசம பாகம் கட்டாயம் அளிக்க வேண்டும். இந்த காணிக்கையை நீங்கள், வேறு சபை ஊழியர்களுக்கோ, மிஷனரி ஊழியங்களுக்கோ, மற்ற ஊழியங்களுக்கோ கூட அளிக்கலாம். சாலையில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு கூட சுவிஷேசமாக இயேசு உன்னை நேசிக்கிறார் என்று கூறிவிட்டு, 10 ரூபாய் அளித்தால் கூட அது காணிக்கையாக, தேவன் அங்கீகரிப்பார். ஏனெனில் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.
எனவே காணிக்கை, தசமபாகம் இரண்டும் ஒன்றல்ல. இன்று பலருக்கும் இது தெரியாமல், வாரந்தோறும் சபைக்கு சென்று, காணிக்கை எடுக்க வரும் போது, அதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ரூ.10 அல்லது ரூ.20 போட்டால், தேவன் ஆசீர்வதிப்பார் என்று நினைக்கிறார்கள். இதை தேவன் ஆசீர்வதிக்கவே செய்கிறார். ஆனால் அது தசமபாகம் அளிக்கும் போது கிடைக்கும் ஆசீர்வாதம் போல இருக்காது.
மேலும் நாம் எந்த சபை ஊழியக்காரரிடம் தசமபாகம் அளிக்கிறோமோ, அந்த சபையில் தான் இராபோஜனம் எடுக்க வேண்டும். நாம் செல்லும் எல்லா சபைகளிலும் இராபோஜனம் எடுக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் இராபோஜனம் எடுக்கும் சபையின் அங்கமாக நீங்கள் சேருகிறீர்கள். அவர்கள் நமது பெலவீனங்களை தாங்கும் உடன் சகோதரர்களாக, இராபோஜனத்தின் போது மாறுகிறார்கள்.
இதை நான் கூற காரணம், சிலர் எந்த சபைக்கு சென்றாலும், அங்கே இராபோஜனம் இருந்தால் எடுத்து விடுவார்கள். கர்த்தருடைய சரீரம் தானே என்றும் விளக்கம் அளிப்பார்கள். ஆனால் அது ஒரு தவறான முறை ஆகும். ஏனெனில் அந்த சபையின் பெலவீனங்களும், உங்களை தாக்க வாய்ப்புள்ளது.
காணிக்கை, தசமபாகம் அளிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள்:
தசமபாகம் அளிப்பதால் நமது வருமானத்தில் வரும் சகல சாபங்களும் நீக்கப்படுகிறது. அதாவது நாம் வேலை செய்யும் நிறுவனமோ, நபரோ அளிக்கும் பணம் தவறான முறையில் சம்பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த சாபம் நம்மை பின்தொடரும். நாம் அதில் தேவனுக்குரிய தசமபாகத்தை அளிக்கும் போது, அந்த சாபம் நீக்கப்படுகிறது. நாமும் அந்த பணத்தை உண்மையாக உழைத்து சம்பாதித்திருக்க வேண்டும். நாம் தவறான முறையில் சம்பாதித்துவிட்டு, தசமபாகம் அளித்தால் சாபங்கள் நீங்காது. எனவே அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலும் தசமபாகம் அளிக்கும் போது, ஊழியர்கள் ஜெபிப்பது பெற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் தேவனால் அது அங்கீகரிக்கப்படுகிறது. நாம் அளிக்கும் தசமபாகம் மூலம் ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்படுவதால், தேவனால் நிறைவான ஆசீர்வாதத்தை பெற முடிகிறது. நமக்கு ஏற்படும் குறைவுகள் நீக்கப்படுகிறது.
காணிக்கையை பொறுத்த வரை அது சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் அது முழு மனதோடு அளிக்கப்பட வேண்டும். துக்கத்தோடு காணிக்கையை அளிப்பதால் அதற்கு பலனில்லாமல் போகும்.
காணிக்கை மற்றும் தசமபாகம் ஆகியவை பணத்திற்கு மட்டுமல்ல. நாம் செலவிடும் நேரத்திலும் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் சரியாக 2.40 மணிநேரம் தேவ சமூகத்தில் நாம் செலவிட வேண்டும். இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர், இதில் உண்மையில்லாமல் இருக்கிறார்கள்.
இதற்காக தான் முன்னோர்கள் காலையில் 1 மணிநேரமும், இரவில் 1 மணிநேரமும் குடும்ப ஜெபம் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். இதை தவிர வேதம் வாசித்து தியானிப்பது, தனி ஜெபம் ஆகியவற்றை செய்தாலே, தசமபாகத்தையும் தாண்டும் நேரத்தை தேவனுக்கு அளிக்க முடியும். சபைக் கூட்டங்கள், விசேஷக் கூட்டங்களை, தேவனுக்கு காணிக்கையாக வழங்கப்படும் நேரமாக கொள்ளலாம்.
மேற்கூறிய காரியங்கள் அடிப்படையானவை என்றாலும், இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்கும் தெரியாமல், தங்களுக்கு தெரியும் வகையில் செய்து வருகிறார்கள். இந்த செய்தியின் மூலம் ஆவிக்குரிய அடிப்படை காரியங்களை அநேகருக்கும் அறிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum