தக்காளி பேஸ்ட்
Wed Feb 03, 2016 10:47 am
சமையலில் அதிகமாக தக்காளி உபயோகிக்கிறோம். தக்காளியில் உள்ள சத்துக்கள் புற்றுநோயையும் தடை செய்ய உதவுகிறது என உணவு வல்லுனர் கூறுகின்றனர்.
தக்காளி பேஸ்ட் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
தக்காளி……………………….. 1 கிலோ
வெங்காயம்…………………. 1
காரட்………………………….. 1
இஞ்சி…………………………. 1 அங்குலத்துண்டு
பூண்டு………………………… 6-8 பற்கள்
பிரிஞ்சி இலை…………….. 1
செய்முறை
தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். காரட்டைக் கழுவி துருவவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, குறைந்த தணலில் வேகவிடவும். தண்ணீர் ஊற்றக்கூடாது. மைக்ரோவேவ் அவனில் செய்தால், 10-12 நிமிடங்கள் உயர்ந்த தணலில் வேகவைக்கலாம். நன்கு வெந்த தக்காளியை மிக்சியில் அரைத்து, சிறிய டப்பாக்களில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியின் பிரீசரில் வைத்து, தேவையானபோது உபயோகிக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum