தக்காளி சேமியா..ஈசிய செய்யலாம்..
Sat Aug 10, 2013 8:19 am
தேவையானவை :
சேமியா - 3 கப்
தக்காளி - 4 - 5
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
முந்திரி - ஒரு கைப்பிடி
சாம்பார் தூள் / மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
செய்முறை :
சேமியாவை ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் வறுக்கவும்.
3 கப் நீரைக் கொதிக்க வைத்து சேமியாவில் ஊற்றி, உப்பு போட்டு வேக விடவும்.
பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு தாளிக்கவும். முந்திரி சேர்த்து வறுக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தூள் வாசம் போக வதக்கவும். தேவையெனில் சிறிது நீர் விட்டு எண்ணெய் பிரிய கொதிக்க விடவும்.
பின் வேக வைத்த சேமியா சேர்த்து 3 நிமிடம் பிரட்டவும்.
சுவையான தக்காளி சேமியா தயார்.
நான் பெங்களூர் தக்காளி பயன்படுத்தியதால் நீர் விட்டு குழைந்து வர சிரமமாக இருந்தது. அதனால் பாதி தக்காளியை துண்டுகளாகவும் பாதியை அரைத்தும் சேர்த்தேன். இருந்தாலும் சிறிது நீர் விட்டே மசாலா வாசம் போக பிரட்ட வேண்டி இருந்தது. நாட்டு தக்காளி பயன்படுத்தினால் அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீரும் தேவைப்படாது.
- Vanitha Vilvaar
நன்றி :
arusuvai
Permissions in this forum:
You cannot reply to topics in this forum