சிக்கன் சேமியா பிரியாணி
Wed Apr 16, 2014 6:23 pm
தேவையான பொருட்கள்:
சேமியா - முக்கால் கிலோ
சிக்கன் முக்கால் கிலோ
தயிர்- 100 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -முக்கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சை - 1
பச்சை மிளகாய் - 4
மல்லி,புதினா - தலா ஒரு கைபிடியளவு
தேங்காய்ப்பால் - அரைதேங்காயில்
எண்ணெய் -100 மில்லி
நெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு
சேமியாவை இப்படி இளஞ்சிவப்பாக வறுத்து கொள்ளவும்.வறுத்து இறக்கும் பொழுது 2 டீஸ்பூன் நெய் விட்டு மணத்திற்கு பிரட்டி எடுக்கவும்.
சிக்கனை கழுவி சுத்தம் செய்து தயிர்,அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் முழுவதும் வதக்கி சிவந்ததும் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்,அடுப்பை மீடியமாக வைக்கவும்.பின்பு நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போடவும்.எண்ணெய் தெளிந்து தக்காளி வதங்கியதும் தயிரில் ஊறிய சிக்கனை போடவும்.மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் விட வேண்டாம்.சிக்கனிலேயே தண்ணீர் விடும்.
வெந்த பின்பு அரைத்தேங்காயில் பால் எடுத்து பாலுடன் சேமியாவிற்கு மொத்தம் ஒன்றரை அளவு தேங்காய்ப்பாலும் தண்ணீரும் கலந்து வெந்த சிக்கனில் விடவும்.கோகனெட் மில்க் பவுடர் என்றால் 3 டேபிள்ஸ்பூன் கலந்து விடவும்.நன்கு கொதிவரவிடவேண்டும்.
கொதிவந்த பின்பு வறுத்த சேமியாவை தட்டவும்.பிரட்டி விடவும்.எலுமிச்சையை பிழிந்து விடவும்,சேமியாவை பிரட்டி பாத்திரத்தை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
சேமியா வெந்து மேலெழும்பி வரும் .சிக்கன் சேமியாவை நன்கு ஒரு சேர பிரட்டி அடுப்பை அணைத்து சிக்கென்ற மூடியால் மூடி விடவும்.சேமியா புழுங்கி பத்து நிமிடத்தில் ரெடியாகிவிடும்.திறந்து சுடச்சுட பரிமாறவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum