காளான் தக்காளி சூப்
Wed Aug 28, 2013 8:46 am
தேவையான பொருட்கள்:
காளான் - 50 கிராம்,
தக்காளி - 100 கிராம்,
துவரம் பருப்பு - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 5,
மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்,
மஞ்சள் பொடி - சிறிதளவு,
கிராம்பு - 1,
சோம்பு - தாளிப்பதற்கு தேவையான அளவு,
வாசனைப் பட்டை,
பிரிஞ்சி இலை,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* காளானை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும்.
* தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* துவரம் பருப்பை வேக வைக்கும்போதே ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் பொடி செய்த மிளகு, சீரகம் போட்டு கட்டிபோட்டு விடவும்.
* இத்துடன் சுத்தம் செய்யப்பட்ட சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட காளான், தக்காளி ஆகியவற்றைப் போட்டு, சின்ன வெங்காயத்தை உரித்து முழுசாகப் போடவும்.
• அடுத்து பச்சை மிளகாய், மஞ்சள்பொடியையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக வேக விடவும்.
* நன்றாக வெந்த பின், வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வாசனைப்பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வேக வைத்த கலவையை சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும். இறக்கியவுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் தக்காளி சூப் கமகமக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum