இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் "பொங்கல் பண்டிகையை" கொண்டாடலாமா......?
Mon Jan 18, 2016 4:18 pm
மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் "பொங்கல் பண்டிகையை" கொண்டாடலாமா......?
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள முதற்ப்பலனாகிய அறுப்பின் பண்டிகை - கர்த்தரால் கிடைக்கபெற்றவற்றில் முதல் பலனை கர்த்தருக்கே செலுத்துவதாகும்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் இந்த பண்டிகை,
இயேசு கிறிஸ்து முதன்மையானவராக மரணத்தினின்று உயிரோடு எழுந்ததை குறிக்கின்றது..
இது மீட்பின் திட்டமாகும்.
ஆனால் இந்த பொங்கலுக்கும் சுண்டலுக்கும் வரிசையில் நிற்கும் கூட்டத்தார் அறுப்பின் பண்டிகையும் பொங்கல் பண்டிகையும் ஒன்று என கூறி கிளப்பிவிட்டுள்ளனர்..
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் பொங்கல்...
கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பது மாட்டுப்பொங்கல்...
வேதம் சொல்லுகிறது...
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி,
அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
உபாகமம் 4 :19
இப்படிபட்ட அருவருப்பை பற்றி எசேக்கியல் தீர்க்கதரிசிக்கு உண்டான தரிசனம் ...
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார், இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
எசேக்கியல் 8 :15,16.
தங்களைப் 'பெரிய கிறிஸ்தவ தலைவர்கள்' என்று சொல்லிக்கொள்கிற சிலரும் கொண்டாடுகிறார்கள்....???
அவர்கள் இந்த பண்டிகைக்கு " தமிழர்த் திருநாள் " என்று பெயரிட்டு கொண்டாடிக்கொள்கின்றனர்.
வசன அறிவில்லாதவர்களும், குறுக்கு வழியில் மக்களிடம் பிரபல்யம் அடைய நினைப்பவர்களுமே இப்படி செய்கிறார்கள்.
நன்றாய் கவனியுங்கள்...
ஆரோன் தேவனால் அழைக்கப்பட்ட மனிதன் தான்... அவர் செய்த காரியம் தெரியுமா...?
மோசே சீனாய் மலையில் விக்கிரகத்தை சேவிக்க வேண்டாம் என்று கட்டளைப் பெற்ற அதே வேளையில்...
மலைக்கு கீழே பொன்னால் ஒரு கன்றுக்குட்டி செய்து வணங்கி... தான் செய்த விக்கிரக ஆராதனைக்கு " கர்த்தருக்குப் பண்டிகை என்று... "
(யாத். 32:5 )அலங்காரமான ஒரு நாமத்தை சூட்டினான்...
செய்கிற தவறுகளை "தேவவசனத்தின் பெயரால் பூசி மொழுகும் ஊழியங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் விசுவாசிகளே!!!!
- Ruban Sam -
Permissions in this forum:
You cannot reply to topics in this forum