முடியாது என்கிற மனப்பான்மை
Mon Jan 18, 2016 8:20 am
பனிக்காலத்தில் மலையில் சறுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஓர் இளைஞர் பெயர் கொடுத்திருந்தார். அது அவருக்கு முதல் அனுபவம். அந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்ய அவர் மனைவி ஆவலாகக் காத்திருந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னர் தான் வீடியோ கேமராவில் பேட்டரி தீர்ந்திருந்தது தெரிய வந்தது. அங்குமிங்கும் ஓடினார்.
தூரத்தில், பனிமலையைப் படமெடுத்து முடித்து ஒருவர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரிடம் கேமராவை இரவல் கேட்டார் இந்தப் பெண். அவர் தர மறுத்தார். தன் கணவரின் முதல் பனிச்சறுக்கல் அனுபவம் பற்றி அந்தப் பெண் விளக்கியதும், அரை மனதுடன், தானே அதை பதிவு செய்வதாகச் சொன்னார் அவர்.
மறுநாள் காலை தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கெண்டிருந்த அந்தப் பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் அதிர்ச்சி. “முதல் முதலாய் பனிச்சறுக்கலில் ஓர் இளைஞர்” என்ற தலைப்பில் அந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் மகிழ்ச்சி, மிரட்சி, ஆச்சரியம், அலறல், உற்சாகம், எல்லாமே அந்தக் காட்சியில் அத்தனை அழகாய்ப் பதிவாகியிருந்தது.
தான் யாரிடம் கேமரா இரவல் கேட்டோமோ அவர்தான் அந்த முன்னணி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
தன்னுடைய கேமராவில் பேட்டரி தீர்ந்து விட்டது என்பதற்காக கொஞ்சம் புலம்பி விட்டு அத்துடன் அவர் விட்டிருந்தால், அவருடைய கணவர் ஒரே நாளில் பிரபலமாகியிருக்க முடியாது.
அடுத்த கட்டம் நோக்கி நகர முடியாது என்கிற மனப்பான்மையை உடைத்தெறிந்துவிட்டு முடிந்தவரை முயற்சி செய்வதால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum