அறியாமை என்கிற போர்வை
Wed Oct 28, 2015 9:51 am
ஒரு குளத்தின் ஓரமாக ஒரு ஒற்றையடிப்பாதை.அந்தப்பாதையில் ஒருவர் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது,குளத்தின் கரையில் அமர்ந்தபடி ஒருவன் ஏதோ செய்துகொண்டிருந்தான்.வழிப்போக்கர் கவனமாகப் பார்த்தார்-அவன் என்ன செய்கிறான் என்று.அவன் ஒரு பூனையை குளத்து நீரில் அமுக்குவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தான்.இதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தான்.
அதைப்பார்த்த வழிப்போக்கர் "ஏனப்பா? பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி எடுக்கிறீயே! பூனை செத்துடாதா?" என்று கேட்டார்.
அதுக்கு பூனைக்காரன் வழிப்போக்கனைப் பார்த்து "யோவ்.. இது என் பூனை.நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்." என்றான்.
வழிப்போக்கரும் நடப்பது நடக்கட்டும் என்று தன் வழியே போய்விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து,அவர் அதே வழியில் திரும்பி வந்தார்.திரும்பி வரும்போது பூனைக்காரன் குளக்கரையில் அழுதுகொண்டிருப்பதைக்கண்டார்.பூனை செத்துப்போய்க் கிடந்தது.
உடனே இவர் பூனைக்காரனின் அருகில் சென்று "நான் அப்போதே சொன்னனே! கேட்டிருந்தால் பூனை செத்திருக்காதேடா?" என்று கூற,
அதற்கு அந்தப் பூனைக்காரன் சொன்னான் "அட,.. நான் பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி குளிப்பாட்டினாதால பூனை சாகல ஐயா.குளிப்பாட்டினதுக்கப்புறம் பூனை ஈரமா இருக்கேன்னுட்டு அத புளிஞ்சேன்.அப்பதான் செத்துப்போச்சு."
நாட்டுல பலர் அறியாமை என்கிற போர்வை-ல இப்படி தான் இருக்காங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum