கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது
Sun May 25, 2014 10:21 pm
குடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்..
கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி கேட்டாள்.
கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன் வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’யதார்த்தமாய் சொன்னாள் அந்த பெண்.
என்னடி சொல்ற? தோழி புரியாமல் கேட்டாள்.
"இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம்,
அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்..
என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்"!.
தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் அந்த பெண்ணின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் அவள் தோழி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum