உங்கள் வாழ்க்கை கூண்டிற்குள்ளா? கூண்டிற்கு வெளியிலா???
Thu Dec 17, 2015 8:25 am
உலகத்தில் மிகவும் கொடூரமானது "அடிமை" தனம். வேதத்தை படித்து பாருங்கள் இயேசு கிறிஸ்து மனிதனை படைத்தது அடிமையாக இருக்க இல்லை இந்த உலகத்தை ஆள மட்டுமே என்பது தான் உண்மை.
இஸ்ரவேல் மக்கள் பார்வோன் ராஜாவிடம் அடிமைத்தனத்தில் இருந்து அனேக பாடுகளையும், கொடுமைகளையும் அனுபவித்தனர்! இயேசு கிறிஸ்து அவர்களை அப்படியே விட்டு விடவில்லை மோசே என்னும் மனிதர் மூலம் இஸ்ரவேல் மக்களை மீட்டார் விடுதலை தந்தார்!
எந்த மனிதனும் அடிமைத்தனத்தில் இருக்க இயேசு சிறிதெனினும் விரும்புவதில்லை என்பது உண்மையே. ஆனால்? நாம் இன்று வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது? பாவத்திற்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அழிவின் பாதை!
கூண்டில் அடைபட்ட சிங்கத்தை பாருங்கள்,
அது தன் தன்மையை இழந்து அமைதியாக இருக்கும், அதன் வீரத்திற்கு ஈடு இணை இல்லாதவர்கள் கூட அதன் அருகில் நின்று சிரிப்பதும்,அடிப்பதும், தங்கள் கட்டளைகளுக்கு அவைகளை கீழ்ப்படிய வைப்பதும் பார்க்க பரிதாபமாக இருக்கும்,
தினமும் உணவு கிடைக்கும் இருந்தும் என்ன பயன்? ஒரு நாள் தனக்கு விடுதலை கிடைத்திராதா என்ற ஏக்கத்தை பார்க்க முடியும், அதே போல தான் நம் வாழ்க்கையும் நாம் இயேசுவை விட்டு தூரம் செல்லும்போது பாவம் நம்மை நெருங்குகிறது!! நாம் பாவத்திற்கு அடிமையாக சிக்கும்பொழுது நம் தன்மையை இழந்து வாழ்கையை தொலைத்து நிர்கதியாக இருக்கிறோம்,
அதே!!! காட்டில் கம்பீரமாக இருக்கும் சிங்கத்தை பாருங்கள். எவரும் அதனிடம் நெருங்குவதில்லை! அதை கண்டு நடுங்கி தூரம் ஓடும் மற்ற உயிரினங்களை பார்க்க முடியும் அதன் சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது, நாம் இயேசுவோடு இருக்கும் போது கம்பீரத்தோடும், பாதுகாப்போடும் இருக்கு முடியும் என்பது உண்மையே!!! இன்றே நீங்கள் முடிவு செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை கூண்டிற்குள்ளா? கூண்டிற்கு வெளியிலா???
-இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.யோவான் 8:34...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum