கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர்
Wed Dec 16, 2015 12:15 am
கிறிஸ்து பிதாவுக்குச் சமமானவரா?
எபி 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார்.
பொதுவாக யார் கீழ்படியவேண்டும். படைக்கப்பட்ட சிருஷ்டிகள் எல்லாமே படைத்தவருக்கு கீழ்படியவேண்டும். இது தான் பரலோக சட்டம். அது தேவதூதர்களாய் இருந்தாலும், மனிதனாய் இருந்தாலும் கீழ்படியவேண்டும். ஆனால் ஒரே ஒருவர் மாத்திரம் கீழ்படியமாட்டார், அது யார்? தேவன் தான்.
அதாவது கீழ்படிதல் என்பது அடுத்தவருக்கு அடிபணிதல், அடுத்தவரின் சொல்லைக்கேட்டல் அடங்கி நடத்தல் என்று பொருள், இது தேவனால் முடியாதது, அவர் யாருக்கும் அடிபணியமுடியாது, அடுத்தவருக்கு கீழ்படியமுடியாது. ஏன்? அவர் தேவன், சர்வத்தையும் கீழ்படுத்துகிறவர்.
ஆனால் இங்கு வசனம் கூறுகிறது “அவர் குமாரனாயிருந்தும் கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார்”, என்று
இப்படி சிந்திப்போம், ஒருவேளை கிறிஸ்து ஒரு தேவதூதனாய் இருக்கிறார் என்றால் அவர் இந்த உலகத்தில் பிரவேசிப்பதற்கு முன்பாக பிதாவுக்கு முழுமையாக கீழ்படிந்திருப்பார்.
இயேசு தூதன் கிடையாது ஆனால் அவர் பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள சிருஷ்டி என்று வைத்துக்கொண்டாலும் அவர் பிதாவுக்குக் கீழ்படிந்தாக வேண்டுமே..... கீழ்படிதலை மற்ற எல்லா சிருஷ்டிகளைக் காட்டிலும் இவரே அதிகம் தெரிந்து வைத்திருப்பார். இப்படிப்பட்டவர் எதற்காகக் கீழ்படிதலைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
அவருக்கு கீழ்படிதல் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருந்திருக்காது.
அது மாத்திரமல்ல இந்த இடத்தில் “அவர் குமாரனாயிருந்தும் ” கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார் என்று வசனம் வருகிறது....... அப்படியென்றால் என்ன அர்த்தம்?
ஆக கீழ்படியவே முடியாதவர், கூடாதவர், கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார் என்பதை உணர்த்துவதே எபிரேய ஆசிரியரின் நோக்கம்.
ஆக கீழ்படியக் கூடாதவர்தான் இயேசு, ஆனால் நமக்காக கீழ்படிதலை கற்றுக்கொண்டார். அவர் பிதாவுக்குச் சமமானவர்.... குமாரன் என்ற பெயரால் அறியப்பட்ட இயேசுகிறிஸ்துவே......
இயேசு எங்கே எப்படி கீழ்படிந்தார் ? ஆதாரம் இருக்கிறதா?
இதற்கான பதிலை யெகொவாசாட்சியினர், வேதமாணாக்கர்கள், இன்னும் ஒரு சில பிரிவினர் நன்றாக விளக்குவார்கள், அதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். என்ன சொல்லுகிறார்கள்?
"யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
யோவான் 14:28 ... என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்".
இன்னும் பல வசனங்கள், பூமியில் வந்த இயேசு எப்படி கீழ்படிந்தார் எனபதை நிரூபிக்கிறது,
ஆனால் பாவம் கிறிஸ்து கீழ்படிந்தார் என்ற காட்சியை மாத்திரம் பார்த்த யெகோவா சாட்சியினர் ஒட்டுமொத்த வேதமும் கிறிஸ்துவை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை பார்ப்பதில் தவறிவிட்டனர். மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்லுவது "கிறிஸ்து தன் வாயாலே பிதாவை பெரியவர் என்று சொல்லியிருக்கிறாரே" என்பதே...
ஒரு பழமொழி ஞாபத்திற்கு வருகிறது,
"நிறைகுடம் தழும்பாது நமக்குத்தெரியும், அதே சமயம் காலி குடமும் தழும்பாது"
இப்படிப்பட்ட அரை குறை குடம் தழும்பும் என்பதில் சந்தேகமில்லை.....
எதுவரைக்கும் கீழ்படிந்திருப்பார், இந்த உலகத்தில் பிரவேசித்த நாள் முதல் வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பு முடித்து, தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு முடியும் வரை பிதாவுக்குக் கீழ்படிந்திருப்பார்.
ஆனால் பாவம் இயேசு கீழ்படிந்திருப்பது அவர் எடுத்துக்கொண்ட பொறுப்பை முடிக்கத்தான் என்பது தெரியாமல் சிலர் அவரை ஒரு படைக்கப்பட்டவராக பார்பது வேதனை........
கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் தேவன் .... என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை......

Re: கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர்
Wed Dec 16, 2015 12:15 am
இயேசு ஒரு படைக்கப்பட்ட தூதனா?
(யோபு 4:18 அவர் தம்முடைய பணிவிடை காரரிடத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை, தம்முடைய தூதரின் மேலும் புத்தியீனத்தை சுமத்துகிறாரே)
இந்த வசனத்தில் தேவன், யார் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டார் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மீட்பின் திட்டத்தை அவர் ஒரு தூதனை நம்பி கொடுத்திருப்பாரா? சாத்தான் சோதிக்கும் போது கிறிஸ்து இருந்த இடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் தோற்றுப்போக வாய்ப்பிருக்கிறது.
அது எப்படிப்பட்ட தேவ தூதனாயிருந்தாலும் பாவம் செய்ய முடியும், இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால் இதே வேலையை ஒரு மனிதனிடம் தான் ஒப்புக்கொடுக்க முடியுமா? கேட்கவே வேண்டாம் ....
ஆக தன்னுடைய பிள்ளைகளைக் காக்க அவருக்குச் சமமான ஒருவர் மேல் தான் நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பை ஒப்படைக்க முடியும். அந்த ஒருவர் கிறிஸ்து இயேசுவே..... அவர் தேவதூதன் அல்ல படைக்கப்பட்டவர் அல்ல...
பிதாவுக்குச் சமமானவர் ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum