“திரித்துவத்தில் ஒருவர் இயேசு கிறிஸ்து”
Thu Feb 21, 2013 8:37 pm
இயேசு
கிறிஸ்து நித்தியமானவர். “அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அவர்
தேனாயிருந்தார்.” (யோவான்: 1:1). உலக சிருஷ்டிப்புக்கு முன்னமே இருந்தார்.
எனவே, “லோகாஸ்” என்று அழைக்கப்படுகிறார்.
“லோகாஸ்” - என்பதின் அர்த்தம்:
“லோகாஸ்” - இது ஒரு கிரேக்க பதம். இதன் அர்த்தம்: “உள்ளான சிந்தை”. இதை தி.க.கட்சியினர் இதை “பகுத்தறிவு” என்பர்.
ஸ்தோயிக்கர் என்ற தத்துவஞானிகள்: “மனதில் உள்ள ஒரு எண்ணம்” “பேசுகிற ஒரு வார்த்தை” “சிந்தையை வெளிப்படுத்துதல்” “சொல்” ஆகிய இவற்றிற்கெல்லாம் “லோகாஸ்” என்ற பதத்தை உபயோகப்படுத்தினர்.
கிரேக்க பதம்: 'லோகாஸ்' - Logos - க்கு எபிரேய பதம்: 'டாபர் ' - Dabar
Dabar Yahweh - “டாபர் யாவே” என்றால் “கர்த்தருடைய வார்த்தை” என்று பொருள்.
Dabar Yahweh - “டாபர் யாவே” பற்றி மூன்று வித கருத்து :
1. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை குறிக்கும்.
2. செயலாக்கும் வார்த்தையை குறிக்கும்.
3. செயலாற்றும் ஆற்றலுடைய வல்லமையை குறிக்கும்.
யோவான்: 1:1 - “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”
யோவான்: 1:14 - “அந்த வார்த்தை மாம்சமாகி,
கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்
பண்ணினார்; அவருடைய மகிமையை கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய
மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.”
வெளிப்படுத்தல்: 19:13 - “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே”
'வார்த்தை' என்பது “வெளிப்பாட்டின் வழி” “தொடர்பு கொள்வதற்கான வழி” தேவன் தம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகளைக் கையாண்டார். அவருடைய வெளிப்பாட்டின் உச்சக்கட்டம் “இயேசுகிறிஸ்து”.
எபிரேயர்: 1:1 - “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்; இவரை சர்வத்திற்கும் சுதந்திரவாளியாய் நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்”
யோவான்
இந்த “வார்த்தை” ஆளத்துவம் உடையது என்று கூறுகிறார். இந்த வார்த்தை தேவன்
என்று கூறுகிறார். பவுல் இவரை (இயேசுவை) சிருஷ்டிகளின் முதற்பேறானவர்
என்றழைக்கிறார்.
சிருஷ்டிப்பில்
கிறிஸ்துவுக்கு பங்கு இருந்தது. பிதாவாகிய தேவன் வார்த்தையாலே உலக அண்ட
சராசரத்தை உண்டாக்கினார். வேத வாக்கியங்களெல்லாம் கிறிஸ்துவை
சிருஷ்டிக்கிறவராகவும் , பாதுகாப்பவராகவும், சிருஷ்டிப்பின்
காரணகர்த்தாவுமாக கூறுகின்றன.
தேவன் மனிதனைப் படைக்கும் முன்பு, (IN GOD - HEAD) தேவனில் ஒரு ஆலோசனை நடத்தப்பட்டது. ஆதி: 1:26 - “நாம், நமது சாயலின்படி...” ஆதியாகமம்: 1 ல் தேவனுக்கு பயன்படுத்தப்பட்ட பன்மைப் பெயர் கிறிஸ்து சிருஷ்டிப்பின் வேலையில் பங்கு பெற்றார் என்பதை காட்டுகிறது.
நீதிமொழிகள்:
8:30 - “ நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய
மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்”
பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்தின் இரண்டாம் நபர் பல முறை தோன்றிய போதிலும் அவர் கிறிஸ்து என்று ஒரு போதும் அழைக்கப்படவில்லை. ஆனால், “குமாரன்” , “யெகோவாவின் தூதன்” என்னும்
பெயர்களால் அவர் குறிப்பிடப்பட்டார். சங்கீதம்: 2:7 - ல் யெகோவா அவரை,
அவருடைய குமாரனாக குறிப்பிடுகிறார். “தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்”.
கீழ்காணும் வசனங்களில் “யெகோவா” என்று குறிப்பிடப்படுபவர் “இயேசுவே”:
கர்த்தருடைய
தூதன் என்னும் நிலைமையில் ஆகாருக்கு தாிசனமாகி சாராளிடத்தில் திரும்பி
போகும்படி சொன்னதுடன் அவளின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும் என்றும் கூறினார்.
(ஆதியாகமம்: 16:7-14).
அதே தூதன் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுவதை தடுத்து நிறுத்தினான் (ஆதியாகமம்: 22:11-18).
அதே கர்த்தருடைய தூதன் லாபான் யாக்கோபுடன் அநீதியாய் நடந்து கொண்டபோது யாக்கோபை ஆசீர்வதிப்பதாக சொன்னான். (ஆதியாகமம்: 31:11,13).
அதேதூதன் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார். (ஆதியாகமம்: 3:2-5).
இஸ்ரவேல்
ஜனங்கள் எகிப்தை விட்டு பிரயாணம் பண்ணினபோது கர்த்தருடைய தூதன்
அவர்களுக்கு முன் சென்றார். (யாத்திராகமம்: 14:19, 23:20, 32:34).
வனாந்தரத்தில் இஸ்ரவேலை பின் தொடர்ந்த கன்மலை கிறிஸ்துவே என்று பவுல் கூறுகிறார். (1கொரிந்தியர்: 10:4).
பிலேயாம் இஸ்ரவேலை சபிக்க வந்த போது கர்த்தருடைய தூதன் அவர்களை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(எண்ணாகமம்: 22:22-35).
கிதியோன்
களத்தில் போரடிக்கையில் கர்த்தருடைய தூதன் தரிசனமாகி இஸ்ரவேலை
மீதியானியரின் கையிலிருந்து விடுவிக்க அழைப்பு கொடுத்தார். மனோவாவிற்கும்
அவன் மனைவிக்கும் தரிசனமாகி சிம்சோனின் பிறப்பைப் பற்றி
அறிவித்தான்.(நியாயாதிபதிகள்: 13:2-25).
தாவீது ஜனத்தொகை கணக்கிட்டபோது தண்டனை கொடுக்க அனுப்பப்பட்டவன் கர்த்தருடைய தூதன்.(1நாளாகமம்: 21:1-27).
எலியா யேசபேலுக்கு அஞ்சி ஓடியபோது சூரைச்செடியின் கீழ்படுத்திருந்தபோது போஜனம் கொடுத்தார் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:5-7).
எலியாவுடன் ஓரேபில் பேசினவர் கர்த்தருடைய தூதன்.(1இராஜாக்கள்: 19:9-19).
சகாியா: 1:11, 3:1 - ஆகிய வசனங்களில் கர்த்தருடைய தூதனைப்பற்றி வாசிக்கிறோம்.
மேலே கண்ட வேதவசனங்களின்படி, “யெகோவா” என்பதும் “கர்த்தருடைய தூதன்” என்பதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கும். இயேசுவே யெகோவா. யெகோவாவே இயேசு.
யெகொவா
என்பது தனி நபரை குறிப்பதல்ல. அது ஒரு கூட்டுப் பெயர். அதற்குள் தேவனுடைய
மூன்று ஆளத்துவங்கள் இருக்கிறது. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன்,
பரிசுத்தாவியாகிய தேவன் ஆகிய மூன்று ஆளத்துவங்கள் சோ்ந்த நிலைக்கு தான்
“யெகோவா” என்று பெயர்.
குமாரன் என்பவர் வேலைக்காரன் அல்ல.
குமாரன் என்றால் குமாரன்தான். வேதபுரட்டர்களுக்கு வேண்டுமானால் அவர்களுடைய
பிள்ளைகளை வேலைக்காரர்களாக அடிமைகளாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு
கவலையில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் ஆண்டவர் இயேசுவை எந்த
விதத்திலும் தவறாக சித்தரித்துக்காட்ட நாம் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.
வேதத்தின் மூலபாஷைக்கு விளக்கம் தெரியாத சில மூளையற்றவர்கள், வேத வசனத்தை
ஒழுங்காக வாசித்து தியானம் செய்து ஆராயாத அறிவிலிகள், தவறான வாழ்க்கை
வாழ்ந்து வழி மாறி போனவர்கள், யாருக்கோ எதற்க்கோ அடிமைப்பட்டு வேத வசனத்தை
கலப்பாக போதித்து, வஞ்சிக்க நினைக்கும் கள்ள உபதேசகர்களின் கள்ள
உபதேசங்களுக்கு விலகி ஜீவிக்க, நமது ஆத்துமாவை காத்துக் கொள்ளவே இந்த
விழிப்புணர்வு பதிவு.
சில வேத புரட்டர்கள் கிறிஸ்துவின் நாமத்தை
குலைச்சலாக்கும்படி, அவரது நாமத்தை மட்டுப்படுத்தும்படி இக்கடைசி நாட்களில்
சில வஞ்சகர்கள் எழும்புவார்கள் என்று 2யோவான் நிரூபத்தில் வாசிக்கிறோம்.
எனவே, தேவபிள்ளைகள் கவனமாக இருந்து, வேதத்தை நன்கு வாசித்து நித்திய ஜீவனை
சுதந்தரிக்க தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“சிலுவையைப்பற்றிய
உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற
நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது” (1கொரிந்தியர்: 1:18).
Read more: http://nesarin.blogspot.com/#ixzz2LXZfH9wa

Permissions in this forum:
You cannot reply to topics in this forum