ரோமர் சாலையில் இயேசு கிறிஸ்து
Thu Mar 13, 2014 12:54 am
ரோமர் சாலையில் இயேசு கிறிஸ்து
குட்டி தம்பி தங்கை நாம் இப்பொழுது ரோமர் சாலையில் பயணித்து இயேசு கிறிஸ்துவை சந்திப்போமா?
ரோமர் சாலை வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள ரோமர் புத்தகத்தில் உள்ளது. உங்களுடைய வேதத்தை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரா? அங்கு சென்று இயேசு கிறிஸ்துவை சந்தித்து அன்பு , பாவமன்னிப்பு போன்றப் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். சரி,நாம் இப்பொழுது புறப்படுவோம்!
பேருந்து நிறுத்தம் 1: ரோமர் 3:23
எல்லோரும் பாவம் செய்து , தேவ மகிமையற்றவர்களாகி
வாசித்த பகுதி என்ன கூறுகிறது தெரியுமா? நாம் ஆண்டவரிடம் செல்லுவதற்கு நம்முடைய பாவம் ஒரு கிருமி போல நம்மை தேவனிடமிருந்து பிரித்து அவரோடு இருப்பதை தடை செய்கிறது. கிருமி ஒரு மனிதனை அநேக நாள் உயிரோடு இருக்கவிடாது . அவர்கள் ஏதாவது வியாதி வந்து இறந்து விடுவார்கள் அல்லவா? அது போல நாமும் தேவனோடு அநேக நாள் இருக்க முடியாமல் பாவம் என்ற கிருமி நம்மை அழித்து விடுகிறது. அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவை எப்படி சந்திப்பது! என்று யோசிக்கிறீர்களா? அதற்கு ஒரு வழி இருக்கிறது? வாருங்கள் தொடர்ந்து செல்லலாம்....
பேருந்து நிறுத்தம் 2: ரோமர் 5:8
[size=16]நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். [/size]
இந்த இடத்தில் பாவம் என்ற கிருமியை அழிக்க தேவன் தனது மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக மரிக்கச் செய்தார் எனக் காண்கிறோம். அதன் மூலம் தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது அல்லவா? இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார். அவருடைய இரத்தம் நம்முடைய பாவத்தை நீக்குகிறது. கிருமி அழிய வேண்டும் என்றால் மருந்து சாப்பிட வேண்டும் அல்லவா? அது போல நம்முடைய பாவ கிருமி அழிய பரிசுத்த இரத்தம் வேண்டும். தேவன் ஒருவரே பரிசுத்தர். அவர் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் சிந்தி நம்மை பாவம் இல்லாதவர்களாய் மாற்றுகிறார்.
அப்படியென்றால் , நாம் மரிக்காமல் தேவனை காண ஓர் வழி உண்டு. அதுவே இயேசு கிறிஸ்துவின் பாடு மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் . சரி, இந்த மருந்து வேறு என்ன தருகிறது என்று பார்போம் . ....
பேருந்து நிறுத்தம் 3: ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்.; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.
அப்படியென்றால், பாவமாகிய கிருமி மரணத்தை நமக்கு உண்டாக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் அந்த பாவக்கிருமியை கொன்றுவிட்டது என்று நாம் கண்டோம் . அதனால், நாம் நித்திய வாழ்க்கை என்ற பரிசைப் பெற்று உள்ளோம். நாம் இனி பாவத்தில் மரிப்பதில்லை! நாம் பாவத்தில் மரிக்காமல், இயேசுவோடு இருப்பதே நித்திய வாழ்வு. அது நமக்கு நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம் போன்ற பரிசுகளை நமக்கு தருகிறது.
கடைசி நிறுத்தம் ரோமர் 10:9,10,13
சரி இயேசு கிறிஸ்துவை காணும் வழி தெரிந்து விட்டது. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வாசியுங்கள். ரோமர் 10:9,10,13 -கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரிதோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால், இரட்சிக்கப்படுவாய்.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்....ஆதலால், கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
இப்பொழுது, நீங்கள் ஆண்டவிரிடம் சென்று ஜெபியுங்கள் , உங்களை அவரோடு வாழ தடை செய்யும் பாவம் அல்லது தவறான காரியம் என்னவோ, அதை வாயினால் தேவனிடம் சொல்லி, உங்கள் மனதிலே தேவன் என்னை மன்னித்துவிட்டார் என்று விசுவாசித்தால்/நம்பினால் நீங்கள் விடுதலை பெறுவீர்கள் .இயேசு கிறிஸ்துவோடு அநேக நாள் வாழலாம். இனி நீங்கள் கிருமியோடு மரிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தமை நம்மை இரட்சித்து தேவனிடம் சேர்க்கிறது. தேவனே நம்மை அவரிடம் சேர்த்துக்கொள்ள தன்னுடைய குமாரனை (மகன்) தந்து நம்மை நேசித்தார்.இது நமக்கு கிடைத்த விலையேறப் பெற்ற பரிசு.
நீங்கள் இந்த ரோமர் சாலையில் சென்று இயேசு கிறிஸ்துவை கண்டு , நித்திய வாழ்வு ,சமாதானம், சந்தோஷம் போன்ற பரிசுகளைப் பெற்று கொண்டது போல, உங்கள் நண்பர்களிடமும் சொல்லி அவர்களும் இந்த மேலான பரிசை பெற உதவி செய்யுங்கள்.
நன்றி: தமிழ்பிரதரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum