இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு வல்லமை உண்டு
Wed Dec 16, 2015 12:09 am
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டா? இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்றால் என்ன? என்பதை கற்றுக்கொள்ள இந்த காரியத்தை போதிக்கிற அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்திலே விடை காணவேண்டும்.....
பவுல், இயேசுவின் நாமத்தில் பிசாசுகளை துரத்துவதை பார்த்த சிலர் தாங்களும் அந்த இயேசுவின் நாமத்தை பயன்படுத்த துணிந்து தோல்வியடைந்தனர். உண்மையிலே இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டா? வெறும் பெயரில் வல்லமை இருக்கும் என்றால் அந்த நாமத்தை பயன்படுத்தின எல்லாருக்கும் அது பயனளித்திருக்கவேண்டுமே!
வேதம் ஒருபோதும் இது போன்ற காரியத்தை அனுமதிப்பதில்லை. கிறிஸ்து எனக்காக என்ன செய்தார், பிசாசின் மேல் அவர் பெற்ற அதிகாரம் என்ன? இன்று அவர் அந்த அதிகாரத்தை எனக்கு கொடுத்திருகிறார், அதை நான் விசுவாசித்து அதன் அடையாளமாய் இயேசுவின் நாமத்தை பயனபடுத்தும் போது அந்த வல்லமை செயல்படுகிறது..... இதைத் தான் இயேசுவின் நாமத்தில் வல்லமை என்று சுருக்கமாக கூறுகிறோம்....
முழங்கால் யாவும் இயேசுவின் நாமத்திற்கு முடங்க வேண்டும் என்றால் வெறும் பெயருக்கு அடிமை என்று அர்த்தமல்ல அப்படிப்பார்த்தால் இயேசு என்ற பெயருக்கு சலாம் போடுபவர்களும், இயேசு, இயேசு என்று சொல்லுகிறவர்களும் அதிகம். உண்மையில் இயேசுவின் நாமத்திற்கு முழங்கால் முடங்கவேண்டுமென்பதின் அர்த்தம் கிறிஸ்துவுக்கு கீழ்படிதல், அவர் சொன்ன ஒவ்வொரு காரியத்திற்கும் உலகம் தன்னை அர்ப்பணிக்கவேண்டும் என்பதே உண்மை.
இயேசுவின் நாமத்தில் அவர் சொன்ன எல்லா சத்தியங்களும் அடங்கியுள்ளது அதை விசுவாசித்தவர்களே இந்த நாமத்தை பயனபடுத்த முடியும்.
பிதாவிடம் ஜெபிக்கும் போது கூட நாம் இயேசுவின் நாமத்தை பயன்படுத்துகிறோம் ஏன்? அதாவது எனக்கும் பிதாவுக்கும் பாவத்தால் இடைவெளி இருந்தது, அதனால் என்னால் ஜெபிக்க முடியாத சூழல் உருவாகியிருந்தது, ஆனால் கிறிஸ்து என்னுடைய பாவத்தை மன்னித்து பிதாவோடு ஒப்புரவு ஆகச்செய்துள்ளார், இதை நான் விசுவாசிக்கிறேன், ஆக இயேசுவின் நாமத்தில் பிதாவே ஜெபிக்கிறேன் என்று சொல்லுகிறோம். இதை பற்றியெல்லாம் அறியாத ஒருவராலும் இயேசுவின் நாமத்தை பயன்படுத்த முடியும் ஆனால் சத்தியம் அறியாமல் அவர் பயன்படுத்தும் இந்த நாமத்தால் அவருக்கு பயன் இல்லை.... அவர் என்ன தான் இயேசுவின்நாமம் என்று கத்தினாலும் அதன் அர்த்தமும் சத்தியமும் தெரியாவிட்டால் பயன் இல்லை.......
சீஷர்கள் கூட இயேசுவின் நாமத்தை பிரசங்கம் பண்ணக்கூடாது என்று யூதர்களால் கட்டளை பெற்றிருந்தனர், இதற்கு அர்த்தம் இயேசுவின் நாமம், இயேசுவின் நாமம் என்ற பெயரை போய் பிரசங்கம் செய்வதல்ல..... ரமசாமி, ராமசாமி என்று ஒருவர் பெயரை பிரசங்கிப்பதால் பயனில்லை, இயேசுவின் நாமத்தை குறித்து பிரசங்கிக்கக் கூடாது என்றால் அவர் போதித்த ஒட்டுமொத்த சத்தியத்தை பிரசங்கிக்கக் கூடாது என்பதே உண்மை......
அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தில் இயேசுவின் நாமம் இந்த முறையில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாகக் காணமுடியும்......
இப்படியிருக்க இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் மட்டும் வெறும் பெயராய் எப்படி இருக்க முடியும், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பது கூட அவர் போதித்த ஞானஸ்நானம் என்பது தான் சரியான விளக்கம்... பெயரில் வல்லமை உண்டு என்று நம்புகிறவர்கள் தான் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்காவிட்டால் பரலோகம் செல்லமாட்டீர்கள் என்று வேதம் போதிக்காததை போதிக்கிறார்கள், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்றால் இயேசு போதித்த ஞானஸ்நானத்தை எடுத்தார்கள் என்பதே உண்மை! அவர் போதித்த பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானமே சரியானது......
இதை அறியாமலே பலர் இயேசுவின் நாமத்தை ஒரு மந்திரச்சொல்லாக பயன்படுத்திவருவது வேதனை....வெறும் இயேசுவின் பெயரில் வல்லமை உண்டு என்றால் அவிசுவாசிகளும் இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி அற்புதம் செய்யலாம் அல்லவா? இது முற்றிலும் தவறு.... இது போன்ற மந்திர சொல்லைப் பயன்படுத்த நாம் அழைக்கப்படவிலை.... அதன் சத்தியத்தை உணர்ந்து இந்த நாமத்தை பயன்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்... இந்த அடிப்படையில் தான் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு வல்லமை உண்டு,,,,,,,,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum