வல்லமை தேவனுடையது.
Mon Jul 13, 2015 8:23 am
தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. சங்கீதம் 62:11.
இந்தோனேஷியாவில் எழுப்புதல் 1967-ல் உண்டாயிற்று. இதைக்க்குறித்து சகோதரன். மேல் டேரி அவர்கள் புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு சம்பவத்தை நானும் உங்களுக்கு எழுதுகின்றேன். ஒருமுறை ஒரு கிராமத்திற்கு நற்செய்தியை அறிவிக்கும்படி குழுவாக அவர் சென்றார். அந்த கிராமம் முழுவதும் புத்த மதத்தால் நிரம்பிய கிராமம். அனைத்து மக்களும் புத்த மதத்தை சார்ந்தவர்கள். அவர்களுடைய தேவதையின் பெயர் JUJU GODS. மேல் டேரியின் குழுவினர் அந்த கிராமத்திற்குள் சென்று சிவிஷேச பாடல்களைப் பாடத்துவங்கினர். சிறிது நேரத்தில் JUJU GODS-ன் சாமியார்கள், பூசாரிகள் எல்லோரும் ஓடி வந்து, என்ன செய்து கொண்டுருகின்றீர்கள் என்று கேட்டார்கள். இயேசுவின் அன்பைப் பற்றி சொல்வதற்கு இந்த கிராமத்திற்கு வந்தோம் என்று குழுவினர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட பூசாரிகள், எங்கள் ஜூஜூ கடவுளைவிட உங்கள் இயேசு பெரியவரா? என்று கேட்டார்கள்.
எங்கள் சபையில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை தந்துள்ளார். வயிற்றுவலி, தலைவலி, கேன்சர், ஆஸ்மா, TB இப்படி எல்லா வித வியாதிகளையும் குணமாக்கி அற்புதம் செய்துள்ளார். ஆகவே “உங்கள் ஜூஜூ கடவுளைவிட இயேசு பெரியவரே” என்று மேல் டேரி கூறினார். அதற்கு அந்த பூசாரிகள், இது போன்ற அற்புதகளை எங்கள் கோயில்களிலும் ஜூஜூ கடவுள் செய்வதாக தர்க்கம் செய்யத் தொடங்கினர். மேல் டேரியோ இயேசு தான் பெரியவர், சர்வ வல்லவர் என்பதை உறுதியாக கூறிக்கொண்டே இருந்தார். அதற்கு அவரகள், நீங்கள் சொல்வதை இப்பொழுது நிரூபித்துக்காட்டினால், நாங்கள் மட்டுமல்ல, எங்கள் கிராமமக்கள் அனைவருமே இயேசுவை நம்புவோம் என்று கூறினார்கள்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மேல் டேரியின் குழுவினர் கைகளைக் கோர்த்து ஜெபிக்க துவங்கினர். ஆண்டவரே, நீர் உணமையான தெய்வம் என்பதை நிரூபித்துக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் தந்தீர். நீரே உதவி செய்ய வேண்டும் என்று ஆவியில் நிரம்பி அபிஷேகத்தோடு ஜெபிக்கத் துவங்கினார்கள். குழுவினர் ஜெபிக்கையில் அந்த மக்களை பிடித்து வைத்திருந்த பொல்லாத ஆவிகள் அலைக்கழிக்க துவங்கியது. அப்பொழுது குழுவினர், அந்த மக்களை கட்டி வைத்திருக்கும் அந்தகாரங்கள் விலகும்படியாக கட்டைளையிட்ட பொழுது அந்த பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டு நீங்கியது. இவர்கள் ஜெபத்தை முடித்து கண்ணை திறந்து பார்த்த பொழுது எல்லா பூசாரிகளும் கீழே விழுந்து கிடந்தார்கள். இயேசு தான் மெய்யான தெய்வம். இயேசு தான் பெரியவர் என்று சொல்லி அநேகர் அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்கள். மேல் டேரிக்கு ஒரே ஆச்சரியம். பிரசங்கமே இல்லாமல் ஜெபத்தின் மூலமாகவே அந்த கிராம மக்கள் அனைவரும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.
ஜூஜூ கடவுளும் அநேக அற்புதங்களை செய்வதாக தர்க்கம் பூசாரிகள் இறுதியில் இயேசு தான் சர்வ வல்லவர் என்பதை ஒப்புக்கொண்டனர். இந்த நாட்களிலும் கூட நாங்கள் வல்லமையாக செயல்படுகின்றோம் என்று சொல்லி அநேகர் திருச்சபை விசுவாசிகளை கீழே தள்ளி விடுகின்றனர். இவர்களின் கூட்டங்களில் அற்புதம் நடந்தாக அநேகர் சாட்சிகளையும் கூறுகின்றார்கள். “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்” (வெளி 16:14) என்றும், “சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்” (II தெச 2: 9-10) என்றும் வேதாகமம் தெளிவாக போதிகின்றது. பொய்யான அற்புதங்களும், மெய்யான அற்புதங்களும் இன்றளவும் காணப்படுகின்றது. பொய்யான அற்புதம் சத்தானாலும், மெய்யான அற்புதம் சர்வ வல்லவராம் இயேசு கிறிஸ்துவாலும் உண்டாகின்றது. ஏனென்றால் “வல்லமை தேவனுடையது” (சங்கீதம் 62:11). ஆமேன். அல்லேலுயா.
- விசுவாசத்தில் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum