எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர் ரெசிப்பிக்கள்
Wed Dec 09, 2015 8:10 pm
எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர் ரெசிப்பிக்கள்
தேங்காய் பர்பி
பீட்ரூட் அல்வா
டோக்ளா
எக்லஸ் கேரட் புட்டிங்
காரமல் கஸ்டர்ட்
தேங்காய்த் துருவல் - ஒரு கப் (அழுத்தமாக எடுக்கவும்)
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - கால் கப்
ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே இருக்கும் தட்டை எடுத்துவிட்டு, தேவையானவற்றில் உள்ள எல்லா பொருட்களையும் அதில் போட்டு குக்கரை குக் மோடில் (Cook Mode) வைக்கவும். 2 நிமிடம் கழித்து கிளறிவிட்டு மூடவும். பிறகு அதுவே கீப் வார்ம் மோடுக்கு வரும். மறுபடியும் குக்கரைத் திறந்து கிளறிவிட்டு, மீண்டும் குக் மோடுக்கு மாற்றவும். மறுபடியும் அதுவே சிறிது நேரம் கழித்து கீப் வார்முக்கு வந்துவிடும். திறந்தால், பர்பி கலவை ஈரம் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி, அழுத்தி சிறிது நேரம் கழித்து துண்டுகள் போடவும். இதையே வெவ்வேறு வண்ணங்களிலும் செய்யலாம்.
பீட்ரூட் - அரை கிலோ (துருவிக் கொள்ளவும்)
சர்க்கரை - ஒன்றரை கப்
பால்கோவா (இனிப்பு சேர்த்தது) - 200 கிராம்
ஏலக்காய் - 4 (பொடித்தது)
முந்திரி - 10
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய்யை ரைஸ் குக்கர் பாத்திரத்தில் தட்டில்லாமல் சேர்த்து, அதில் முந்திரித் துண்டுகளைச் சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும். கீப் வார்முக்கு வந்ததும், துருவிய பீட்ரூட், ஏலக்காய் சேர்த்துக் கலந்து குக் மோடில் மூடிப் போட்டு 5-7 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிளறிவிட்டு சர்க்கரை சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும். கலவை வெந்து, கீப் வார்ம் மோடுக்கு வந்ததும், உதிர்த்த பால்கோவாவைச் சேர்த்துக் கிளறி மறுபடியும் குக் மோடில் போட்டு மூடவும். மறுபடியும் கீப் வார்ம் மோடுக்கு வந்தவுடன், கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி, அலங்கரித்துப் பரிமாறவும். அதிலேயே விட்டால் கெட்டிப்பட்டு விடும். இதனால் கண்டிப்பாக வேறு ஒரு பாத்திரத்துக்கு உடனடியாக மாற்றி விடவும்.
கடலை மாவு - ஒன்றரை கப்
இஞ்சி - 2 செமீ
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்
சிட்ரிக் ஆஸிட் - முக்கால் டீஸ்பூன் அல்லது எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, சீரகம், வெள்ளை எள் தலா - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஆப்ப சோடாவைத் தவிர, தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரை குக்கர் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விடவும். பாத்திரத்தின் வாய்ப்பகுதியில் பொருத்துவது போல ஒரு தட்டை எண்ணெய் தடவி, வாய்ப்பகுதியில் வைக்கவும். கரைத்த மாவில் ஆப்ப சோடா சேர்த்து ‘புசு புசு’ என்று அடித்து, உடனே பாத்திரத்தின் உள்ள தட்டில் ஊற்றி, குக்கரை மூடி 15 நிமிடம் வேக விடவும். பிறகு திறந்து தட்டை வெளியே எடுக்கவும்.
வாணலியில் தாளிப்புக்குக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, இதனை ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்க்கவும். (தண்ணீரை தாளிப்பில் ஊற்றக்கூடாது. கவனமாக இருக்கவும்) தாளித்ததை டோக்ளாவின் மேல் தெளித்து, கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
கேரட் - 200 கிராம் (துருவியது)
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப் +
1 டேபிள்ஸ்பூன் (தூவ)
ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்
மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்
தேன் - கால் கப்
பால் - அரை கப்
உருக்கிய வனஸ்பதி - முக்கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
மசாலா பவுடர் செய்ய:
கிராம்பு - 1
லவங்கப் பட்டை - ஒரு சிறுதுண்டு
ஜாதிபத்ரி - சிறிதளவு
(இவற்றை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.)
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் தேன், பால், வனஸ்பதி சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெல்லக் கரைசலில் சேர்க்கவும். மசாலா பவுடர் மற்றும் தேவையானவற்றில் உள்ள மற்ற பொருட்களையும் இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். நடுவில் குழிவான (படம் பார்க்க) வட்ட வடிவ அலுமினியம் மோல்டில் வெண்ணெய் தடவி, மைதா மாவு சிறிது தூவி விடவும். இதில் கலந்த கலவையை ஊற்றவும்.
குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதன் மேல் 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அலுமினியம் மோல்டை இதன் உள்ளே வைக்கவும். குக்கர் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இல்லையென்றால், புட்டிங் சொத சொதவெனஆகிவிடும். இதற்கு ஒரு சரியான மூடியால், தண்ணீர் உள்ளே போகாதவாறு மூடிவிடவும். சரியாக ஒரு மணி நேரம் பிறகு குக்கர் தானாகவே கீப் வார்ம் மோடுக்கு வந்துவிடும். பிறகு எடுத்து துண்டுகள் போடவும்.
பால் - 400 மில்லி
முட்டை - 3 (ஃப்ரிட்ஜில் வைக்காத முட்டை)
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
கேரமல் செய்ய:
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 டீஸ்பூன்
நான்கு கப் கொள்ளளவு உள்ள ஒரு அலுமினிய பாத்திரத்தில், (இந்தப் பாத்திரம் ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே வைப்பது போல சிறிய பாத்திரமாக இருக்க வேண்டும்.) கேரமல் செய்யக் கொடுத்த சர்க்கரையைச் சேர்த்து கேஸ் அடுப்பில் வைத்து சர்க்கரை கருக்கும் வரை விட்டு, பிறகு கொடுத்த தண்ணீரை ஊற்றி, சிரப் போல செய்து அடுப்பை அணைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து வைக்கவும். அதில் வெதுவெதுப்பான பால், வெனிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை வடிகட்டி கேரமல் செய்த பாத்திரத்தில் ஊற்றவும். இதில் பாலை ஊற்றவும்.
ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதில் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் கேரமல் இருக்கும் பாத்திரத்தை வைக்கவும். இந்தப் பாத்திரத்தின் பாதியளவை தண்ணீர் தொட்டு இருப்பது போல தண்ணீர் இருக்க வேண்டும். இனி இதை மூடி குக் மோடில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஒரே மாதிரி கொதிக்க ஆரம்பித்ததும் (அடிக்கடி திறந்து பார்த்து சீராக கொதிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்), குக்கரை கீப் வார்ம் மோடுக்கு அழுத்தி விடவும். பிறகு 25-30 நிமிடங்கள் வரை விட்டு குக்கரை நிறுத்திவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக கீப் வார்ம் மோடுக்கு அழுத்திவிட வேண்டும். இல்லையென்றால், பால் திரிந்துவிடும். காரமல் கஸ்டர்ட் செய்ய அலுமினிய பாத்திரம் உகந்தது.
படங்கள்: சு.குமரேசன்
தேங்காய் பர்பி
பீட்ரூட் அல்வா
டோக்ளா
எக்லஸ் கேரட் புட்டிங்
காரமல் கஸ்டர்ட்
‘எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரைப் பொறுத்தவரை, அரிசி வேகவைப்பது, பிரியாணி மற்றும் வெரைட்டி ரைஸ் செய்வது தவிர வேறு எந்தவித சமையலும் செய்யப் பயன்படுத்த முடியாது, என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள்? இதோ, உங்களுக்காகவே எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரில் வெரைட்டி சமையல்களை செய்து அசத்துகிறார், சென்னையைச் சேர்ந்த சசிமதன்.
தேங்காய் பர்பி
தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப் (அழுத்தமாக எடுக்கவும்)
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - கால் கப்
ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை:
எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே இருக்கும் தட்டை எடுத்துவிட்டு, தேவையானவற்றில் உள்ள எல்லா பொருட்களையும் அதில் போட்டு குக்கரை குக் மோடில் (Cook Mode) வைக்கவும். 2 நிமிடம் கழித்து கிளறிவிட்டு மூடவும். பிறகு அதுவே கீப் வார்ம் மோடுக்கு வரும். மறுபடியும் குக்கரைத் திறந்து கிளறிவிட்டு, மீண்டும் குக் மோடுக்கு மாற்றவும். மறுபடியும் அதுவே சிறிது நேரம் கழித்து கீப் வார்முக்கு வந்துவிடும். திறந்தால், பர்பி கலவை ஈரம் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி, அழுத்தி சிறிது நேரம் கழித்து துண்டுகள் போடவும். இதையே வெவ்வேறு வண்ணங்களிலும் செய்யலாம்.
பீட்ரூட் அல்வா
தேவையானவை:பீட்ரூட் - அரை கிலோ (துருவிக் கொள்ளவும்)
சர்க்கரை - ஒன்றரை கப்
பால்கோவா (இனிப்பு சேர்த்தது) - 200 கிராம்
ஏலக்காய் - 4 (பொடித்தது)
முந்திரி - 10
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
நெய்யை ரைஸ் குக்கர் பாத்திரத்தில் தட்டில்லாமல் சேர்த்து, அதில் முந்திரித் துண்டுகளைச் சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும். கீப் வார்முக்கு வந்ததும், துருவிய பீட்ரூட், ஏலக்காய் சேர்த்துக் கலந்து குக் மோடில் மூடிப் போட்டு 5-7 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிளறிவிட்டு சர்க்கரை சேர்த்து மூடி குக் மோடில் வைக்கவும். கலவை வெந்து, கீப் வார்ம் மோடுக்கு வந்ததும், உதிர்த்த பால்கோவாவைச் சேர்த்துக் கிளறி மறுபடியும் குக் மோடில் போட்டு மூடவும். மறுபடியும் கீப் வார்ம் மோடுக்கு வந்தவுடன், கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி, அலங்கரித்துப் பரிமாறவும். அதிலேயே விட்டால் கெட்டிப்பட்டு விடும். இதனால் கண்டிப்பாக வேறு ஒரு பாத்திரத்துக்கு உடனடியாக மாற்றி விடவும்.
டோக்ளா
தேவையானவை:கடலை மாவு - ஒன்றரை கப்
இஞ்சி - 2 செமீ
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்
சிட்ரிக் ஆஸிட் - முக்கால் டீஸ்பூன் அல்லது எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, சீரகம், வெள்ளை எள் தலா - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஆப்ப சோடாவைத் தவிர, தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரை குக்கர் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விடவும். பாத்திரத்தின் வாய்ப்பகுதியில் பொருத்துவது போல ஒரு தட்டை எண்ணெய் தடவி, வாய்ப்பகுதியில் வைக்கவும். கரைத்த மாவில் ஆப்ப சோடா சேர்த்து ‘புசு புசு’ என்று அடித்து, உடனே பாத்திரத்தின் உள்ள தட்டில் ஊற்றி, குக்கரை மூடி 15 நிமிடம் வேக விடவும். பிறகு திறந்து தட்டை வெளியே எடுக்கவும்.
வாணலியில் தாளிப்புக்குக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, இதனை ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்க்கவும். (தண்ணீரை தாளிப்பில் ஊற்றக்கூடாது. கவனமாக இருக்கவும்) தாளித்ததை டோக்ளாவின் மேல் தெளித்து, கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
எக்லஸ் கேரட் புட்டிங்
தேவையானவை: கேரட் - 200 கிராம் (துருவியது)
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப் +
1 டேபிள்ஸ்பூன் (தூவ)
ஆப்ப சோடா - முக்கால் டீஸ்பூன்
மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்
தேன் - கால் கப்
பால் - அரை கப்
உருக்கிய வனஸ்பதி - முக்கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
மசாலா பவுடர் செய்ய:
கிராம்பு - 1
லவங்கப் பட்டை - ஒரு சிறுதுண்டு
ஜாதிபத்ரி - சிறிதளவு
(இவற்றை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.)
செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் தேன், பால், வனஸ்பதி சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெல்லக் கரைசலில் சேர்க்கவும். மசாலா பவுடர் மற்றும் தேவையானவற்றில் உள்ள மற்ற பொருட்களையும் இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். நடுவில் குழிவான (படம் பார்க்க) வட்ட வடிவ அலுமினியம் மோல்டில் வெண்ணெய் தடவி, மைதா மாவு சிறிது தூவி விடவும். இதில் கலந்த கலவையை ஊற்றவும்.
குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதன் மேல் 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அலுமினியம் மோல்டை இதன் உள்ளே வைக்கவும். குக்கர் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இல்லையென்றால், புட்டிங் சொத சொதவெனஆகிவிடும். இதற்கு ஒரு சரியான மூடியால், தண்ணீர் உள்ளே போகாதவாறு மூடிவிடவும். சரியாக ஒரு மணி நேரம் பிறகு குக்கர் தானாகவே கீப் வார்ம் மோடுக்கு வந்துவிடும். பிறகு எடுத்து துண்டுகள் போடவும்.
கேரமல் கஸ்டர்ட்
தேவையானவை: பால் - 400 மில்லி
முட்டை - 3 (ஃப்ரிட்ஜில் வைக்காத முட்டை)
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
கேரமல் செய்ய:
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 டீஸ்பூன்
செய்முறை:
நான்கு கப் கொள்ளளவு உள்ள ஒரு அலுமினிய பாத்திரத்தில், (இந்தப் பாத்திரம் ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே வைப்பது போல சிறிய பாத்திரமாக இருக்க வேண்டும்.) கேரமல் செய்யக் கொடுத்த சர்க்கரையைச் சேர்த்து கேஸ் அடுப்பில் வைத்து சர்க்கரை கருக்கும் வரை விட்டு, பிறகு கொடுத்த தண்ணீரை ஊற்றி, சிரப் போல செய்து அடுப்பை அணைக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து வைக்கவும். அதில் வெதுவெதுப்பான பால், வெனிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை வடிகட்டி கேரமல் செய்த பாத்திரத்தில் ஊற்றவும். இதில் பாலை ஊற்றவும்.
ரைஸ் குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதில் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் கேரமல் இருக்கும் பாத்திரத்தை வைக்கவும். இந்தப் பாத்திரத்தின் பாதியளவை தண்ணீர் தொட்டு இருப்பது போல தண்ணீர் இருக்க வேண்டும். இனி இதை மூடி குக் மோடில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஒரே மாதிரி கொதிக்க ஆரம்பித்ததும் (அடிக்கடி திறந்து பார்த்து சீராக கொதிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்), குக்கரை கீப் வார்ம் மோடுக்கு அழுத்தி விடவும். பிறகு 25-30 நிமிடங்கள் வரை விட்டு குக்கரை நிறுத்திவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு:
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக கீப் வார்ம் மோடுக்கு அழுத்திவிட வேண்டும். இல்லையென்றால், பால் திரிந்துவிடும். காரமல் கஸ்டர்ட் செய்ய அலுமினிய பாத்திரம் உகந்தது.
படங்கள்: சு.குமரேசன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum