செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள்
Sun Jan 03, 2016 9:28 am
பொங்கல் சாதம்
சர்க்கரைப் பொங்கல்
பருப்பு மசியல்
வாழைக்காய்ப் பொரியல்
அவரைக்காய்ப் பொரியல்
சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்
மொச்சைக் கூட்டு
பறங்கிக்காய்க் குழம்பு
பல காய்க் குழம்பு
பொங்கல் சாதம்
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
தண்ணீர் - 4 டம்ளர்
பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்டாவது முறை கழுவும்போது கொடுக்கப்பட்ட 4 டம்ளர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அரிசியில் ஊற்றி கழுவவும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வடிகட்டி பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கி வரும்போது தீயைக் குறைத்து அரிசியைச் சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டியால் சிறிது தண்ணீரை எடுத்துவிடவும். தேவையென்றால் கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம் (புதியது)
தண்ணீர் - 3 டம்ளர்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கப்
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேகவைக்கத் தேவைப்படும் 3 டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
வெல்லத்தில் கல், மண் இருந்தால் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரிசியோடு சேர்க்கவும். பொங்கல் அதிக தண்ணீரை இழுக்கும் என்பதால், கவலை வேண்டாம்.
பருப்பு மசியல்
தேவையானவை:
பாசிப்பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பாசிப்பருப்பு, இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது). இதை சாதத்தோடு பரிமாறவும்.
வாழைக்காய்ப் பொரியல்
தேவையானவை:
வாழைக்காய் - 1
தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
வாழைக்காயைத் தோல் சீவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். இதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த வாழைக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
சர்க்கரைப் பொங்கல்
பருப்பு மசியல்
வாழைக்காய்ப் பொரியல்
அவரைக்காய்ப் பொரியல்
சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்
மொச்சைக் கூட்டு
பறங்கிக்காய்க் குழம்பு
பல காய்க் குழம்பு
தைப்பொங்கல் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் சம்பிரதாய உணவு வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.
பொங்கல் சாதம்
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
தண்ணீர் - 4 டம்ளர்
செய்முறை:

Re: செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள்
Sun Jan 03, 2016 9:29 am
அவரைக்காய்ப் பொரியல்
தேவையானவை:
அவரைக்காய் - 200 கிராம்
தண்ணீர் - 2 கப்
சின்ன வெங்காயம் - 6
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
அவரைக்காயைக் கழுவி நீளமாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவரைக்காயுடன், 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அவரைக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலைகள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவிதோலுடன் வட்டமாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து வேகவிடவும். பிறகு, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மொச்சைக் கூட்டு
தேவையானவை:
ஃப்ரெஷ் மொச்சை - கால் கிலோ
துவரம்பருப்பு - 100 கிராம்
தண்ணீர் - ஒன்றரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 6 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்)
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
துவரம்பருப்பை ஒன்றரை கப் தண்ணீர், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக குக்கரில் வேக விடவும். இதனுடன் ஃப்ரெஷ் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பறங்கிக்காய்க் குழம்பு
தேவையானவை:
பறங்கிக்காய் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 4 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)
கறிவேப்பிலை - 10 இலைகள்
புளி - சின்ன எலுமிச்சை அளவு
தன்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - 10
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். பறங்கி விதைகள் மற்றும் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பறங்கிக்காய் சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பிறகு புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறவும்.
பல காய்க் குழம்பு
தேவையானவை:
முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா 1
கத்திரிக்காய் - 3
சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் - சிறிதளவு
அவரைக்காய் - 10
ஃப்ரெஷ் மொச்சை - அரை கப்
காராமணி - 10
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 20 இலைகள்
புளி - எலுமிச்சை அளவு
தண்ணீர் - 2 கப்
சாம்பார் பொடி - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு:
இதற்கு இங்கு சொன்ன காய்களைத் தவிர்த்து நீங்கள் விரும்பும் காய்கறிகளையும் பயன்படுத்தலாம்
- கே.அபிநயா, படங்கள்: சு.குமரேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum