முட்டையை வைத்து செய்யப்படும் ரெசிப்பிக்கள்
Wed Feb 20, 2013 9:53 pm
முட்டையில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக
முட்டையில் தான் மற்ற உணவுப் பொருட்களை விட அதிக அளவில் புரோட்டீன்
மற்றும் சல்பர் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் உடலுக்கு தேவையான 9
அமினோ அமிலங்கள், கோலைன், வைட்டமின் டி போன்றவைகளும் உள்ளன. மேலும்
முட்டையை அதிகம் சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.
எனவே அத்தகைய உணவுப் பொருளை காலையில் காலை உணவாகவோ அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவோ
செய்து சாப்பிடலாம். அதிலும் முட்டையை குழம்பு, குருமா, மசாலா என்று மதிய
வேளையில் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் தான் செய்வோம். ஆனால்
அதனை வைத்தும் சூப்பரான ஸ்நாக்ஸ்களை செய்யலாம். இத்தகைய ஸ்நாக்ஸ்கள்
குறிப்பாக டயட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்ததாக
இருக்கும். இப்போது அத்தகைய முட்டையை எப்படியெல்லாம் ஸ்நாக்ஸ் செய்து
சாப்பிடலாம் என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து
தெரிந்து கொண்டு, சமைத்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ளுங்கள்.
பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் முட்டையை காலை வேளையில் சாப்பிடுவார்கள்.
அத்தகையவர்கள் எப்போதுமே ஒரே மாதிரியாக முட்டையை செய்து சாப்பிடாமல், சற்று
வித்தியாசமாக செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.
குறிப்பாக மசாலா முட்டை புர்ஜி ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா முட்டை புர்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பன்னீர்/சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1 சிட்டிகை
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.
வெங்காயம்
பொன்னிறமானதும், அதில் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் துருவிய
பன்னீர்/சீஸை சேர்த்து, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி, ஒரு 5 நிமிடம் முட்டை வேகும் படியாக செய்து, பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான மசாலா முட்டை புர்ஜி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
முட்டை உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதேப்போல் காளானும் மிகவும் சிறந்தது. அதிலும்
இந்த முட்டையில் செய்யப்படும் ஆம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. அந்த
வகைகளில் காளானை வைத்தும் ஆம்லெட் செய்யலாம். இந்த ரெசிபியானது செய்துவது
மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாக கூட
இருக்கும். இப்போது அந்த காளான் ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பட்டன் காளான் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அதே
சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும்,
காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி,
மறுபடியும் நன்க கிளறி விட வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து,
பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட்
மசாலாவை தூவி, மடக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!
பிடிக்கும். அத்தகையவற்றில் இப்போது புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை
சேர்த்து, ஒரு நூடுல்ஸ் செய்து பள்ளிக்கு செல்லும் போது கொடுத்தால்,
குழந்தைகள் மிச்சம் வைக்காமல் காலி செய்து கொண்டு வருவார்கள். இப்போது அந்த
முட்டை நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 2 (அடித்தது)
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து,
கொதித்ததும், நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, 2 துளிகள் எண்ணெய்
விட்டு, பின் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உடைத்து
அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பொரியல் போல்
வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
பின்பு அதில் சோயா சாஸ் ஊற்றி, 1 நிமிடம் கிளறி, இறுதியில் நூடுல்ஸ் மற்றும்
முட்டையை போட்டு, தொடர்ந்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி!!!
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் முதன்மையானவை முட்டை. அதிலும் சில குழந்தைகள்
முட்டையை கண்டாலே வெறுத்து ஓடுவர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு,
பிரட்-முட்டை டோஸ்ட் ஒரு வித்தியாசமான காலை உணவாக அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக
செய்து கொடுக்கலாம். மேலும் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு, இந்த ரெசிபி
ஒரு நாகரீகமான முறையில் அமையும். புரத சத்து அதிகம் நிறைந்த இந்த உணவானது
பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவையாகவும் இருக்கும். இப்போது அதன்
செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
பிரட் - 2
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி - 1 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணையை ஊற்றவும்.
பிரட்துண்டுகளின் நடுவில் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டை போடுவதற்கு ஒரு சிறிய
டம்ளர் கொண்டு, பிரட்டின் மேல் அழுத்தினால், பிரட்டானது வட்டமாக
வெட்டப்பட்டிருக்கும்.
பின் இரண்டு பிரட் துண்டுகளையும் தவாவில்
வைத்து நன்கு ரோஸ்ட் செய்து, ஒரு பிரட் துண்டை எடுத்துவிட வேண்டும். பின்
பிரட் துண்டில் போடப்பட்ட ஓட்டையில் வெண்ணையை ஊற்ற வேண்டும்.
பிறகு அந்த ஓட்டையில் முட்டையை ஊற்றி, பிரட் துண்டின் இரு பக்கமும் பொன்னிறமாகும்
வரை திருப்பி போட்டு ரோஸ்ட் செய்ய வேண்டும். (பிரட் மற்றும் முட்டையின்
இருபக்கங்களையும் இரண்டு நிமிடங்கள் என தவாவில் பிரட்ட வேண்டும்.)
இப்போது சூப்பரான பிரட்-முட்டை டோஸ்ட் ரெடி!!!
இதனை ஒரு தட்டில் அல்லது ஒரு சிறிய பௌலில் வைத்து பரிமாறவும். அதிலும் அதன்
மேற்புறத்தில் சாஸ், சீஸ், பழம் அல்லது ஏதாவது கிரேவியுடன் பரிமாற
வேண்டும். பொறுமையாக சமைத்தால் சுவை நிச்சயம் கிடைக்கும்.
மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ்
செய்துமு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது முட்டை மற்றும்
உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்குக்
கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த முட்டை ஆலு
சாட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை கழுவி போட்டு தண்ணீர்
ஊற்றி, 3-5 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, தோலை உரித்து, ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை பிரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு
மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் முட்டையை வைத்து, அதனை
இரண்டாக வெட்டி, அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் இந்த
உருளைக்கிழங்கு கலவையை போட்டு நிரப்பி, அதன் மேல் சாட் மசாலா மற்றும்
கொத்தமல்லியை போட்டு அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை ஆலு சாட் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் மஞ்சள் கருவை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சரி, உடலுக்கு சத்தை வழங்கும் வகையில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து
அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அதற்கு முட்டை
ஸ்பாஞ்ச் தான் சரியானது. அதிலும் இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான்
சாப்பிட்டிருப்போம்.
ஆனால் இந்த ரெசிபியில் அந்த முட்டையில் சில
பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்து சாப்பிடுவோம். மேலும் இந்த ரெசிபி
டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக
இருக்கும். இப்போது இந்த முட்டை ஸ்பாஞ்ச்சை எப்படி செய்வதென்று
பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது
உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து,
தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும்.
பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும்.
இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.
நன்றி: தமிழ் போல்ட் ஸ்கை

காளான் ஆம்லெட்
முட்டை உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதேப்போல் காளானும் மிகவும் சிறந்தது. அதிலும்
இந்த முட்டையில் செய்யப்படும் ஆம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. அந்த
வகைகளில் காளானை வைத்தும் ஆம்லெட் செய்யலாம். இந்த ரெசிபியானது செய்துவது
மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாக கூட
இருக்கும். இப்போது அந்த காளான் ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பட்டன் காளான் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அதே
சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும்,
காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி,
மறுபடியும் நன்க கிளறி விட வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து,
பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட்
மசாலாவை தூவி, மடக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!
முட்டை நூடுல்ஸ்
இன்றைய குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, மேகி, நூடுல்ஸ் போன்றவை மிகவும் பிடிக்கும். அத்தகையவற்றில் இப்போது புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை
சேர்த்து, ஒரு நூடுல்ஸ் செய்து பள்ளிக்கு செல்லும் போது கொடுத்தால்,
குழந்தைகள் மிச்சம் வைக்காமல் காலி செய்து கொண்டு வருவார்கள். இப்போது அந்த
முட்டை நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 2 (அடித்தது)
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து,
கொதித்ததும், நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, 2 துளிகள் எண்ணெய்
விட்டு, பின் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உடைத்து
அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பொரியல் போல்
வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
பின்பு அதில் சோயா சாஸ் ஊற்றி, 1 நிமிடம் கிளறி, இறுதியில் நூடுல்ஸ் மற்றும்
முட்டையை போட்டு, தொடர்ந்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி!!!
பிரட்-முட்டை டோஸ்ட்
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் முதன்மையானவை முட்டை. அதிலும் சில குழந்தைகள்
முட்டையை கண்டாலே வெறுத்து ஓடுவர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு,
பிரட்-முட்டை டோஸ்ட் ஒரு வித்தியாசமான காலை உணவாக அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக
செய்து கொடுக்கலாம். மேலும் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு, இந்த ரெசிபி
ஒரு நாகரீகமான முறையில் அமையும். புரத சத்து அதிகம் நிறைந்த இந்த உணவானது
பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவையாகவும் இருக்கும். இப்போது அதன்
செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
பிரட் - 2
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி - 1 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணையை ஊற்றவும்.
பிரட்துண்டுகளின் நடுவில் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டை போடுவதற்கு ஒரு சிறிய
டம்ளர் கொண்டு, பிரட்டின் மேல் அழுத்தினால், பிரட்டானது வட்டமாக
வெட்டப்பட்டிருக்கும்.
பின் இரண்டு பிரட் துண்டுகளையும் தவாவில்
வைத்து நன்கு ரோஸ்ட் செய்து, ஒரு பிரட் துண்டை எடுத்துவிட வேண்டும். பின்
பிரட் துண்டில் போடப்பட்ட ஓட்டையில் வெண்ணையை ஊற்ற வேண்டும்.
பிறகு அந்த ஓட்டையில் முட்டையை ஊற்றி, பிரட் துண்டின் இரு பக்கமும் பொன்னிறமாகும்
வரை திருப்பி போட்டு ரோஸ்ட் செய்ய வேண்டும். (பிரட் மற்றும் முட்டையின்
இருபக்கங்களையும் இரண்டு நிமிடங்கள் என தவாவில் பிரட்ட வேண்டும்.)
இப்போது சூப்பரான பிரட்-முட்டை டோஸ்ட் ரெடி!!!
இதனை ஒரு தட்டில் அல்லது ஒரு சிறிய பௌலில் வைத்து பரிமாறவும். அதிலும் அதன்
மேற்புறத்தில் சாஸ், சீஸ், பழம் அல்லது ஏதாவது கிரேவியுடன் பரிமாற
வேண்டும். பொறுமையாக சமைத்தால் சுவை நிச்சயம் கிடைக்கும்.
முட்டை ஆலு சாட்
மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ்
செய்துமு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது முட்டை மற்றும்
உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்குக்
கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த முட்டை ஆலு
சாட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை கழுவி போட்டு தண்ணீர்
ஊற்றி, 3-5 விசில் விட்டு இறக்கி, குளிர வைத்து, தோலை உரித்து, ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை பிரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு
மசித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் முட்டையை வைத்து, அதனை
இரண்டாக வெட்டி, அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, அதில் இந்த
உருளைக்கிழங்கு கலவையை போட்டு நிரப்பி, அதன் மேல் சாட் மசாலா மற்றும்
கொத்தமல்லியை போட்டு அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை ஆலு சாட் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் மஞ்சள் கருவை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, உடலுக்கு சத்தை வழங்கும் வகையில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து
அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அதற்கு முட்டை
ஸ்பாஞ்ச் தான் சரியானது. அதிலும் இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான்
சாப்பிட்டிருப்போம்.
ஆனால் இந்த ரெசிபியில் அந்த முட்டையில் சில
பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்து சாப்பிடுவோம். மேலும் இந்த ரெசிபி
டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக
இருக்கும். இப்போது இந்த முட்டை ஸ்பாஞ்ச்சை எப்படி செய்வதென்று
பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது
உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து,
தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும்.
பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும்.
இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.
நன்றி: தமிழ் போல்ட் ஸ்கை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum