முழு உலகையும் இணைக்கும் முயற்சி......
Wed Nov 18, 2015 5:53 pm
"இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்" வெளிப்படுத்தல் 17:13
கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது, அந்திகிறிஸ்துவின் வருகைக்கு உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் வரப்போகின்ற சர்வாதிகாரியாகிய அந்திக்கிறிஸ்துவுக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு உலகம் அயத்தம் ஆகிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
உதாரணத்திற்கு நாம் பயன்படுத்துகின்ற ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் கூட அந்திகிறிஸ்துவின் வருகைக்கு உலகை ஆயத்தப்படுத்தி வருகின்றது. அந்திகிறிஸ்து வரும்பொழுது உலகமனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தொழில்நுட்பத்தின் மூலம் உலகத்தை கைக்குள் கொண்டுவருபவனாக இருப்பான். அதாவது இன்றைய தொழில்நுட்பங்கள் இவனுக்கு உலகின் அனைத்து மக்களை கண்காணிக்கவும், தன் கட்டளைப்படி அவர்களை கட்டாயப்படுத்துவதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டிலும் குறைந்த விலை இணையதள சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. தற்பொழுது இரயில் நிலையங்களிலும் Wi-fi சேவையை துவங்க உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. வரும் நாட்களில் இலவச இன்டர்நெட் சேவையை வழங்குவது தான் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பெரும்.
“மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது, அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது” என்று வெளிப்படுத்தல் 13:16-17-ல் சொல்லப்பட்ட வசனங்கள் நிறைவேற வேண்டுமாயின் உலகமெங்கும் உள்ள மனிதர்கள் “நெட்வொர்க்” (Network) மூலமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியாவை (நெட்வொர்க் மூலமாக இந்தியாவை இணைப்பது) உருவாகக் வேண்டுமென்று தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடி, கலிஃபோர்னியாவின் மென்லோ பார்கில் உள்ள “சிலிக்கான் வேலி”யில், அந்நாட்டு கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர்களை (Microsoft, Google, Facebook, Etc.,) சந்தித்து பேசியுள்ளார் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த டவுன்ஹால் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகத்தை இணைக்கும் குழந்தையை (Child to Connect the Word) பெற்று தந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்-ன் (Mark Zuckerberg) பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். உலகத்தை இணைப்பது தான் மார்க் ஜக்கர்பர்க்-ன் கனவு, ஆசை மற்றும் லட்சியமாக இருகின்றது.
உலகத்தை இணைப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் என்னவெல்லாம் செய்கின்றார் என்று கவனித்துப் பார்த்தால், இயேசு கிறிஸ்துவின் இரகசிய எவ்வளவு சமீபத்தில் உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும். ஃபேஸ்புக் லாக்இன் (Login) செய்யும் பொழுது ஒரு உலக வரைபடத்தில் பதிமூன்று நபர்கள் இணைக்கப்படுவதைப் போன்ற படத்தை பார்த்திருப்பீர்கள். இது சாத்தானை வழிபடுகின்ற பதிமூன்று இலுமினாட்டியின் வம்சாவழி குடும்பங்களை குறிப்பதாக உள்ளது என்று பல்வேறு இரகசிய அமைப்புகள் கருதின. தற்போது “Connect with friends and the world around you” என்ற வார்த்தையை வைத்திருகின்றார்கள். அதாவது மார்க்-ன் ஆசை, “உங்களை சுற்றியுள்ள உலகத்தில் நீங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்பது தான். பிரதமர் மோடியின் ஆசை இந்தியர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட வேண்டும். “இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்” என்ற பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தையை நினைவிற்க்கொள்ளுங்கள்.
“ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று மேய்ப்பனின் குணாதிசயத்தை ஆமோஸ் 3:12 அழகாக எடுத்துரைக்கின்றது. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் சிங்கத்திடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். அதின் காலையாவது அல்லது காதின் துண்டையாவது காப்பாற்ற வேண்டும்.
சாத்தான் சபையை சேர்ந்தவர்கள் அந்திக்கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருப்பதோடுடல்லாமல் அதற்க்காக தீவிரமாக உலகை ஆயத்தபடுத்தி வருகின்றார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியிருகின்ற நாம், அழிகின்ற ஆத்துமாக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோமா. இயேசுவை சந்திக்க பரிசுத்தத்தில் ஆயத்தத்தோடு இருகின்றோமா? அழிகின்ற மக்களுக்காக ஜெபிகின்றோமா? சிந்தித்துப் பாருங்கள். இன்றே ஒரு தீர்மானம் எடுங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum