விடா முயற்சி
Mon Jul 01, 2013 9:33 am
மிகவும் கஷ்டப்பட்டு
சுள்ளி சுள்ளியாய்ப் பொறுக்கி
இந்தக் கிளையில்
கூடு கட்டினேன்.
பெருங்காற்று ஒன்றுக்கு
என் கூடு தாங்கிய இக்கிளை
முறிந்து விழுந்து கிடக்கிறது.
இப்போது நான்
கூடு இல்லாக் குருவி.
நாளை நான்
வேறொரு கூடு கட்டுவது நிச்சயம்.
முறிந்து கிடக்கும்
இந்தக் கிளையிலிருந்தே
சுள்ளிகள் எடுத்து.
----------------------------------
கவிஞர் மகுடேசுவரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum