ஐவரின் ஐந்து ஆலோசனைகள் !
Mon Mar 11, 2013 11:57 am
1.மடியிலிருந்து மாடிக்கு:
சாறிபாத் ஊர் விதவையின் மகன் அவள் மடியில் கிடத்தப்பட்டிருக்கும் வரை
வியாதி அதிகரித்தது. ஆனால் தாயின் மடியிலிருந்து மாடியிலிருக்கும் எலியா
தீர்க்கதரிசியினிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஜெபித்தபோது அவன் உயிர்
பிழைத்தான் (1இராஜா.17:17-22).
உங்கள் இருதயத்தை ஆக்கிரமித்திருக்கிற பிரச்சனையை நீங்களே சுமக்காமல், பரலொக தேவனிடத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.
2. சாதாரண கரத்திலிருந்து அசாதாரண கரத்திற்கு:
பெயரில்லா சிறுவனின் கரத்திலிருக்கும்வரை அது ஐந்து அப்பமாகவும்,
இரண்டு மீனாகவுமே இருந்தது. ஆனால் அது சாதாரண கரத்திலிருந்து அசாதாரணமான
கர்த்தர் கரத்திற்கு போன போதோ 5000 பேர் சாப்பிட்டு மீதம் எடுக்கும் படி
பெருகியது(மத்.14:17).
உங்கள் கரத்திலிருக்கிற கொஞ்சத்தை தேவனுடைய கரத்தில் கொடுத்துவிடுங்கள்.
3. இல்லை என்பது திருப்தி ஆக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபட்ட செய்தி மரியாளின்
காதுகளை வந்தெட்டியது வரை ‘இல்லை’ யாகத்தான் தொடர்ந்தது. ஆனால் இயேசுவின்
காதுகளுக்குச் சென்றபோதோ பாராட்டும்படியான ருசியுள்ள திராட்சர சமாய் மாறி
‘திருப்தி’ படுத்தியது (யோவா.2)
உங்கள் காதுகளை வந்தெட்டுகிற குறைவு குறிப்புகளை ஜெபக்குறிப்பாய் தேவனுடைய செவிகள் கேட்கும்படி அனுப்பிவிடுங்கள்.
4. மனமடிவு மனமகிழ்ச்சி ஆக:
அன்னாள், தேவசமூகத்தில் தன் இருதயத்தை ஊற்றும் வரை அவளு டைய ‘மனமடிவு’
தொடர்ந்தது. ஆனால் என்று அவள் உள்ளக் குமுறலை தேவ சமூகத்தில் ஊற்றினாளோ,
அன்று அவள் ‘மனமகிழ்ச்சி’யாக மாறியதோடு, சாமுவேலையும் பெற்றாள்
(1சாமு.1:2-20).
உங்கள் நீண்டநாள் கவலைகளை உள்ளத்திற்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டிராமல், தேவ சமூகத்தில் ஊற்றி விடுங்கள்.
5.வெறுமை மிகுதி ஆக:
பேதுரு தானாக இரவெல்லாம் பிரயாசப்பட்டுக் கண்ட தெல்லாம் ‘வெறுமை’
தான். ஆனால் தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வலை போட்டபோதோ ‘மிகுதி’ யான
மீன்கள் கிடைத்தது லூக்கா.5:5,6).
உங்கள் வெறுமையைப் பார்த்து அங்கலாய்த்து நிற்காமல், தேவ வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படியுங்கள்.
--- சகோதரி. சுனிதா சுகுமார்
துதி ஊழியங்கள்
மதுரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum