தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்... Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்... Empty உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

Tue Mar 19, 2013 6:45 pm
முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும்
முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை
உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.
சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும்
காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும்
குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக
மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது
தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி
அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம்
குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே
அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத
பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும்
போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ
வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள
லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.


லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை
வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட
வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன்
கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள்
குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன்
மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்,
மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும்.
உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில்
புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள்
சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய
சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக்
போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக்
உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல
வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம்
சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின்
மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்

1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்
கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில்
இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

2)
கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை
அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு
வாசிலின் தடவுவது நல்லது.

3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

4) கருமையான உதடு சிவப்பாக - பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால்,
உதட்டின் கருமை மறையும்.

5) உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன்
எடுத்து, அதில் ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும்.
இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.

நன்றி: முகநூல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum