ஐந்து ரூபாய் விளையாட்டு
Sun Apr 07, 2013 6:00 am
ஒருவர் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘இதோ வருகிறானே சின்னப் பையன் இவன் அடி முட்டாள்’
அப்படியா எப்படிச் சொல்ற?
‘இதோ பாரேன்’ என்று மேஜையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பத்து ரூபாய் நோட்டையும் வைத்தார். சிறுவன் வந்தான்.
’தம்பி இதுல உனக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கோ’ என்றார் அவர்.
சிறுவன் தயக்கமே இல்லாமல் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தான். சிறுவன்
சென்றதும், ‘பாத்தியா சின்னப் பையன்றது சரியா இருக்கு. எத்தனை தடவை இப்படி
கேட்டாலும் காசைத்தான் எடுப்பான் நோட்டை எடுக்க மாட்டான். அறிவே வளரல’
என்றார் அவர்.
நண்பர் கிளம்பிய போது, வெளியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
”ஏன்ப்பா பத்து ரூபாயை எடுக்காம அஞ்சு ரூபாய எடுத்த? “ என்றார்.
அதற்கு சிறுவன் சொன்னான், ” எப்போ நான் பத்து ரூபாயை எடுக்கிறேனோ
அன்னைக்கு இந்த விளையாட்டு நின்னுடும். அப்புறம் எனக்கு அஞ்சு ரூபா
கிடைக்காது, இப்படியே எனக்கு நூற்றிபத்து ரூபாய்க்கு மேல் கிடைத்து
விட்டது" என்று.
"......புத்தி உன்னைப் பாதுகாக்கும்" நீதிமொழிகள் 2:11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum