ரிப்பனில் நம் பெயரில் மெனு!
Thu Nov 05, 2015 9:58 am
ரிப்பனில் நம் பெயரில் மெனு
மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்ற சாப்ட்வேர்களில் உள்ளே நுழைந்தவுடன் கிடைக்கின்ற திரையின் மேல்பக்கம் உள்ள பகுதிக்கு ரிப்பன் (Ribbon) என்று பெயர். இங்குதான் நாம் பயன்படுத்துகின்ற அனைத்து கட்டளைகளும் (Commands) சேகரிக்கப்பட்டு, முறையாக வரிசைப்படுத்தப்பட்டு டேப்களில் (TAB) பட்டியலிடப்பட்டிருக்கும்.
ரிப்பன் பகுதியில் முதலாவதாக இருப்பது டேப்கள்தான். பொதுவாக, Home, Insert, Design… என்ற பெயர்களில் டேப்கள் பெயரிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் தேவையான கட்டளைகளை உள்ளடக்கிய புரோகிராம்கள் டேப்களில் ஐகான்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றை மவுசால் கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கட்டளைகளின் தன்மைக்கு ஏற்ப அவை பிரிக்கப்பட்டு தனித்தனி டேப்களில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
அதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம். உதாரணத்துக்கு எம்.எஸ்.வேர்டில் ரிப்பன் பகுதியில் நம் பெயரில் மெனு / டேப் ஒன்றை உருவாக்கலாமா?
எம்.எஸ்.வேர்ட் ரிப்பனில் நம் பெயரில் மெனு/டேப் உருவாக்கும் முறை
உதாரணத்துக்கு இங்கு INSERT என்ற டேப்பிற்கு அடுத்து VIKATAN என்ற பெயரில் டேப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்சரை INSERT டேப்பில் வைத்துக்கொள்ளலாம்.
பிறகு, Word Option என்ற விண்டோவில் Choose Commands From என்ற தலைப்பின்கீழ் இருந்து Copy, Cut, Paste, Font போன்ற கட்டளைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து ADD >> என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்தக் கட்டளைகள் VIKATAN என்ற டேப்பின் கீழ் இணைந்துவிடும். இறுதியில் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
குறிப்பு
ரிப்பன் பகுதியில் உள்ள ஏராளமான டேப்களில் கட்டளைகள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொரு முறையும் தேடி எடுத்துப் பயன்படுத்த நேரம் அதிகம் எடுக்கும் என்பதால், நாம் அதிகம் பயன்படுத்தும் கட்டளைகளைத் தொகுத்து நம் பெயரிலேயே ஒரு டேப்பை உருவாக்கி அதில் இணைத்து வைத்துக்கொண்டால் வேலை எளிதாகும்.
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பேக்கேஜுகளில் இதற்கான வசதி உள்ளது. பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்துவதில்லை.
ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்தால் நம் தேவைக்கு ஏற்ப எத்தனை டேப்களை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். தேவையில்லை என்றால் நாம் உருவாக்கியதை நீக்கிக்கொள்ளவும் முடியும்.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது.
வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- காம்கேர் கே. புவனேஸ்வரி

ரிப்பன் பகுதியில் வெவ்வேறு டேப்களில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டளைகளை ஆங்காங்கே சென்று தேடி எடுத்து பயன்படுத்துவதைவிட, ரிப்பனில் நமக்காக நம் பெயரில் ஒரு டேப்பை உருவாக்கி அதில் நாம் அதிகம் பயன்படுத்துகின்ற கட்டளைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டால், பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும் அல்லவா?
அதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம். உதாரணத்துக்கு எம்.எஸ்.வேர்டில் ரிப்பன் பகுதியில் நம் பெயரில் மெனு / டேப் ஒன்றை உருவாக்கலாமா?
எம்.எஸ்.வேர்ட் ரிப்பனில் நம் பெயரில் மெனு/டேப் உருவாக்கும் முறை
1. எம்.எஸ்.வேர்ட் 2013 சாஃப்ட்வேரில் நுழைந்து கொள்ளலாம். இதில் ரிப்பன் பகுதியில் Home, Insert, Design, Page Layout, References, Mailings, Review, View என்று டேப்கள் இருப்பதை கவனிக்கவும். இதைப்போல VIKATAN என்ற பெயரில் ஒரு டேபை உருவாக்கிக்கொள்ளலாம்.
2. ரிப்பன் பகுதியில் டேப்கள் வெளிப்பட்டிருக்கும் பகுதியின் மேல் உள்ள பகுதிக்கு Quick Access Tool Bar என்று பெயர். இதன் மீது மவுஸின் பாயின்ட்டரை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய விண்டோவில் Customize the Ribbon என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. இப்போது Word Option என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Customize Ribbon என்ற விவரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். இதில் Customize Ribbon என்ற தலைப்பின்கீழ் Home, Insert, Design… என்று டேப்களின் பெயர்கள் வெளிப்பட்டிருப்பதை கவனிக்கவும். இதில் எந்த டேபின் பெயருக்கு அடுத்து நாம் உருவாக்க இருக்கும் டேப் இணைய வேண்டுமோ அந்த டேப்பில் மவுஸை வைத்து கிளிக் செய்து கொள்ளலாம்.
உதாரணத்துக்கு இங்கு INSERT என்ற டேப்பிற்கு அடுத்து VIKATAN என்ற பெயரில் டேப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்சரை INSERT டேப்பில் வைத்துக்கொள்ளலாம்.
4. இப்போது NEW TAB என்ற பட்டனை கிளிக் செய்தால் INSERT டேபிற்கு அடுத்து New Tab (Custom) என்ற பெயரில் புதிதாக ஒரு டேப் உருவாகிவிடுவதைக் காணலாம்.
5. அதன் மீது மவுசின் பாயின்ட்டரை வைத்து கிளிக் செய்ய வேண்டும்.பிறகு RENAME என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது RENAME என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் DISPLAY NAME என்ற இடத்தில் நாம் உருவாக்கி உள்ள டேப்பிற்கு பெயரை டைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு VIKATAN என்று டைப் செய்து OK பட்டனை கிளிக் செய்யலாம்.
6. பிறகு VIKATAN என்ற டேப்பில் நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் கட்டளைகளை தொகுத்து வெளிப்படுத்திக்கொள்ளலாம். இதற்கு முதலில், VIKATAN என்ற டேபின் கீழ் வெளிப்படும் NEW GROUP என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.
பிறகு, Word Option என்ற விண்டோவில் Choose Commands From என்ற தலைப்பின்கீழ் இருந்து Copy, Cut, Paste, Font போன்ற கட்டளைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து ADD >> என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்தக் கட்டளைகள் VIKATAN என்ற டேப்பின் கீழ் இணைந்துவிடும். இறுதியில் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
7. இப்போது ரிப்பன் பகுதியில் HOME, INSERT என்ற டேபினைத் தொடர்ந்து VIKATAN என்ற டேப் இணைந்திருப்பதை கவனிக்கவும். இதை கிளிக் செய்தால் நாம் இணைத்த Cut, Copy, Paste, Font போன்ற கட்டளைகள் வெளிப்படுவதைக் காணலாம்.
குறிப்பு
ரிப்பன் பகுதியில் உள்ள ஏராளமான டேப்களில் கட்டளைகள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொரு முறையும் தேடி எடுத்துப் பயன்படுத்த நேரம் அதிகம் எடுக்கும் என்பதால், நாம் அதிகம் பயன்படுத்தும் கட்டளைகளைத் தொகுத்து நம் பெயரிலேயே ஒரு டேப்பை உருவாக்கி அதில் இணைத்து வைத்துக்கொண்டால் வேலை எளிதாகும்.
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பேக்கேஜுகளில் இதற்கான வசதி உள்ளது. பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்துவதில்லை.
ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்தால் நம் தேவைக்கு ஏற்ப எத்தனை டேப்களை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். தேவையில்லை என்றால் நாம் உருவாக்கியதை நீக்கிக்கொள்ளவும் முடியும்.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது.
வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- காம்கேர் கே. புவனேஸ்வரி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum