தமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள்?
Mon Nov 02, 2015 9:14 pm
அண்மையில் இரண்டு சம்பவங்களைக் கேட்க நேர்ந்தது அல்லது படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கண்ணூர் ரயில் நிலையத்தில், சாதாரணமாக ஒரு பிளாட்பார்ம் திண்ணையில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருப்பது போல ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் சுற்றி கொண்டிருந்தது.
மற்றொரு சம்பவம் நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருந்த ரயிலில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி பயணம் செய்து கொண்டிருந்தார். திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு முன்னதாக ஒரு ரயில் நிலையத்தில், முதல்வர் வந்த ரயில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கிறது.
முதல்வரும் 40 நிமிடங்கள் மக்களுடன் மக்களாக ரயில் புறப்படும் என்று காத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ரயில் இனிமேல் செல்லப் போவதில்லை. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக இத்துடன் நிறுத்தப்படுகிறது என்ற தகவல் கிடைக்கிறது. தொடர்ந்து முதல்வர் உம்மன் சாண்டியும், மக்களுடன் மக்களாக ரயிலில் இருந்து இறங்கி நடந்து செல்லத் தொடங்கி விட்டார். பின்னர் அரசு கார், அவர் இறங்கிய ரயில் நிலையத்துக்கு வந்து முதல்வர் உம்மன் சாண்டியை அழைத்து சென்றது.
மக்களுடன் பழகும் முதல்வர்கள் அங்கே இருக்கின்றனர். மக்களின் குறைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அதனால்தான் எனக்கு மதுவால் கிடைக்கும் வருமானத்தை விட, என் மக்களின் உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று அந்த முதல்வரால் பேச முடிகிறது.
நன்றி : Engr Sulthan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum