உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால்
Tue Oct 27, 2015 10:03 am
உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு உண்மை புரியும்....
பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பார்பனர்கள் யாரும் டிவி நிகழ்ச்சிகளிலோ அல்லது பொது மேடைகளிலோ காவி துண்டுடனோ அல்லது வேறு எந்த காவி அடையாளத்துடனோ வருவதில்லை அவர்கள் மிகவும் இயல்பான நேர்த்தியான ஆடை அணிந்து மிகவும் டீசண்டாக வருவார்கள்
ஆனா பாருங்க பார்பனர் அல்லாத காவி கூஜாக்கள் அத்தனையும் காவி துண்டு... காவி கயறு தாயத்து பொட்டு என்று ஏதாவது ஒரு அடையாளத்தோடு தான் வருவார்கள்... ஏனென்றால் இவர்களுக்கு தங்களை தாங்களும் அவர்களை சேர்ந்தவர்கள் என்று அடையாளபடுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது
என்னதான் இவர்கள் தங்களை வளைந்து நெளிந்து அடையாளபடுத்தினாலும் அக்ரகாரத்திலும் சரி... கோவில் கற்பகிரகத்திலும் சரி... இவர்களின் இடம் வெளியேதான்... இதனை இவர்களில் பெரும்பான்மையினர் உணர்ந்துகொள்வதே கிடையாது...
சிலைகளை சுமப்பதற்கும்... செண்டை அடிப்பதற்கும்... சண்டை இடுவதற்கும்... கூக்குரல் போடுவதற்கும்... கலவரம் செய்வதற்கும்... கொலை செய்வதற்கும்... பல்லக்கு தூக்குவதற்கும்... கூலிகளை போலத்தான் இந்த பார்ப்பனீயம் இவர்களை பயன்படுத்துகிறது....
நீங்களும் இந்துக்கள் தான்... உங்களுக்கு எதிரிகள் முஸ்லிமும் கிறிஸ்தவனும் தான் என்று இந்த பாமர மக்களை நம்பவைக்கவும் வெறி ஏற்றவும் பல இடங்களில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவது.... பொறாமையை ஏற்படுத்துவது இதுவெல்லாம் பார்பனீயத்தின் சூழ்ச்சிகளில் மிக முக்கியமான சூழ்ச்சி.....
நேற்று தந்தி டிவியில் மனுஷ்யபுத்திரனிடம் பேசி வம்பிழுத்த அந்த நபரும் இதுபோல் பார்ப்பனீய சூழ்ச்சிக்கு ஆரிய மாயைக்கு பலியான ஒருவர் தான்...பாவம் ஹரியானாவில் தன் சமூகத்தை சார்ந்த இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற பாவிகளை எதிர்க்கவேண்டியவர்... அந்த மாபாதக செயலை அரங்கேற்றிய காவிகளுக்காக வாதாடி கொண்டிருந்தார்...
இங்கு முகநூலிலும் சரி... நாம் வாழும் சமூகத்திலும் சரி அவரை போன்ற நபர்கள் நிறைந்துள்ளனர்... நாம் அவர்களிடம் அமைதியாக அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதை எடுத்து கூறி அவர்களுக்கு உண்மை நிலையை புரியவைத்து மறுவாழ்வு கொடுப்பதை விட்டுவிட்டு அவர்களோடு மல்லுகட்டிகொண்டிருக்கிறோம்... பார்பனீயம் அவர்களை மிக நுணுக்கமாக அணுகி அவர்களை பல்கி பெருக செய்துகொண்டிருக்கிறது....
மக்களுக்கு உண்மையை உணரவைத்து நன்மையை விதைக்கவேண்டிய ஊடகங்கள் நேரலையில் விவாதங்கள் என்ற பெயரில் ஒரு நிழல் கலவரத்தை நித்தம் நித்தம் ஒவ்வொரு வீட்டு தொலைகாட்சியிலும் அரங்கேற்றி மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்துவிட்டு கொண்டிருக்கிறது...
நாம் வாழும் சமூகத்தை நம் எதிர்கால சந்ததிகளுக்காக காப்பாற்ற வேண்டியது மிக மிக முக்கியமான பணி
சிந்திப்போம்... சிந்திக்கவைப்போம்...!!!
அமைதியான சமூகத்தை உருவாக்குவோம்...!!!
---Abu Rayyan
Permissions in this forum:
You cannot reply to topics in this forum