தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
GPS என்றால் என்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

GPS என்றால் என்ன? Empty GPS என்றால் என்ன?

Wed Jan 21, 2015 11:38 pm
GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம். 
GPS (Global Positioning System ) என்ற புவி இடம் காட்டும் அமைப்பு, ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது இரண்டு தடவைகள் உலகை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (man made stars-satellites) மூலம் தகவல்களை பயனாளிகளுக்கு தரும் முறையாகும். குறைந்தது மூன்று /நான்கிற்கு மேற்பட்ட கோள்கள் நமக்கு மேலே வந்து கொண்டிருக்கும். இந்த முறையில் 32 சாட்டிலைட்கள் செயலில் ஈடுபடுகின்றன. இவற்றில் 24 தொடர் இயக்கத்திலும்,சில பழுதடையும் போது பாவிக்கவும்,சில செயலில் ஈடுபடுத்த முடியாத நிலையிலும் உள்ளன. GPS முறையில் portable navigation devices, smartphone apps, GPS sports watches, sports shoes, maps , real-time services, HD Traffic, cars, ships, aircraft, OpenStreetMap (OSM) என பல வாங்கிகள் (Navigation Receiver) இயக்கப்படுகின்றன.
GPS என்றால் என்ன? ConstellationGPS
அக்டோபர் 4, 1957 இல் அப்போதய சோவியத் யூனியன் உலகின் முதலாவது சாட்டிலையிட்டை (ஸ்பூட்னிக்) வானில் ஏவியது. அமெரிக்கா தனது முதல் சாட்டிலயிட்டை (Explorer 1 ) 1958 ஜனவரி 31 இல் வானில் ஏவியது.
மேற்சொன்ன வாங்கிகளுக்கு (Receiver), அமெரிக்காவின் GPS பொதுவாகப் முறை பயன்பட்டாலும், வேறு இரண்டு நாடுகளாலும் GPS முறையில் வேறு பல பாவனைகளுக்காக தனியாக இயக்கப்படுகின்றன. அவை,
(1) Global Positioning System (GPS) அமெரிக்காவும்,
(2) Global navigation satellite systems (GLONASS) ரஷ்யாவும்,
(3) ஐரோப்பாவின் Galileo, Global Navigation Satellite System (GNSS).
சீனாவின் Compass சரியாக இயங்கவில்லை.
நான் எங்கிருக்கிறேன், எங்கே போகிறேன், நீங்கள் எங்கிருக்கிறீர்கள், இலக்கை அடைய சரியான வழி, எப்போது அங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கும் பதில் தருவதன் மூலம் இடங்கள் குறித்த சரியான தகவல்களை நமக்கு இது காட்டுகிறது. குழந்தைகளை பெற்றோர் கண்டறியவும்,அவர்களை அறியாது கண்காணிக்கவும், அப்படி கண்டறிவதன் மூலம் அவர்களிடம் செல்லவும், பாதுகாப்பாக அழைத்து வரவும், தவறான செயல்களில் ஈடுபடாது தடுக்கவும் GPS ஐப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் இணையத்தளங்கள், சமூக தளங்கள் இணைய பயனாளிகள் எங்கிருந்து இணையத்திற்கு வருகிறார்கள் என்பதையும் GeoLocation மூலம் கண்டறிகிறார்கள்.
இந்த 32 கோள்களும்,நிலத்தில் இருந்துஏறக்குறைய 20,200 – 26,600 கிமீ தூரத்தில்,ஆறு நீள்வட்டப் பாதையில், 11500கிமீ வேகத்தில் உலகை சுற்றுகின்றன. நமது வன்பொருளை (Receiver) ஐ இயக்கும் போது,நமக்கு மேலே உள்ள நான்கு கோள்களில் இருந்து தரவு சமிக்ஞைகளை carrier waves மூலம் பெற்றுக் கொள்கிறது.(carrier Frequencies, Digital Codes மற்றும் Navigation Message போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது)
1960 இல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, 1970 இல் தரையில் இருந்தும் (The ground-based Omega Navigation System),
பின்னர் 1978 பெப்ரவரி 22 இல் சோதனை செயற்கைகோள் அனுப்பப்பட்டும்,1993 டிசம்பர்(08.12.1993 )முதல் 24 கோள்களுடன் செயல்பட ஆரம்பிக்கப்பட்டு,17.07.1995 முதல் முழு செயல்பாட்டிற்கும் கொண்டுவரப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை (DOD) அறிவித்தது. 2012 இல் 32 கோள்களாக உயர்ந்த இவை, 55 பாகை (degree) சாய்வாக, பூமியை சுற்றிவர எடுக்கும் நேரம், 11 மணி 58 நிமிடங்களாகும்..
இந்த GPS முறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.

  • Space segment

  • Control segment

  • User segment


இதில் Space segment என்பது வானில் இயங்கும் செயற்கைகோள்கள் இருக்கும் பகுதி.
அடுத்து உள்ள Control segment பூமியில் இருந்து செயற்கை கோள்களின் இயங்கு பாதை, அவற்றின் செயல் போன்றவற்றை கட்டுபடுத்த இயங்கும் பகுதி.
User segment பகுதி தான் நம்மிடம் இருக்கும் கருவிகள். இவற்றின் மூலம் நாம் ஒரு இடத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். கார், மொபைல்போன் உட்பட பல கருவிகளில் Map navigation வசதியாக இது தான் உள்ளது.
GPS என்றால் என்ன? Map-300x228
Distance = Velocity*Time என்ற அலகை வைத்து இவை கணக்கிடப்படுகிறது. இதில் GPS signal இன் Velocity ஒளியின் வேகமான 300,000 Km/s இலும், GPS transmissions frequencies 1575.42 and 1227.60 Mhz ஆகவும் (L-Band இல்) இருக்கும்.இவை Trilateration என்ற முக்கோண வடிவிலான முறையில் செயல்படுகின்றன.கோள்களில் Atomic Clocks பயன்படுத்தப்படுகின்றன.
இது தவிர தற்போது அமெரிக்காவில் இயங்கும், GPS இன் Wide Area Augmentation System -WAAS- இன் செயல்முறை மிகத் துல்லியமாக கணக்கிடுகிறது. இது விமானங்கள், aircraft, போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
- சக்தி
நன்றி: http://karpom.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum