தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்திய மாநிலங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய மாநிலங்கள் Empty இந்திய மாநிலங்கள்

Mon Mar 11, 2013 5:32 am
இந்திய மாநிலங்கள் 1இந்திய மாநிலங்கள்


இன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம்.
தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற
உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள்
போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது.





கடலோரமாவட்டங்கள், ராயலசீமா,
தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில்
தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.



இந்திய மாநிலங்கள் 2
நாடு விடுதலை அடைந்தபோது ஹைதராபாத் நிஜாம் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன்இணைக்க மறுத்தபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின்இரும்பு
கரத்தினால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கானாகம்யூனிஸ்ட்
பேரெழுச்சியை தொடர்ந்தும் தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன்கட்டாயமாக
இணைக்கப்பட்டது.



காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு,
தெலுங்குபேசும் மாநில கோரிக்கை காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன்
விளைவாகஅன்று சென்னை ராஜஸ்தானத்திலிருந்து மொழிவழி மாநிலமாக
1953-இல்பிரிக்கப்பட்டது. அப்போது கர்னூல்தான் அதற்கு மாநிலம் என்ற அடிப்படையில்தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட ஆந்திரப் பிரதேசமாக 1956-இல்ஒருங்கிணைக்கப்பட்டது.



இந்திய மாநிலங்கள் 3
தெலுங்கானா
சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தில் இருந்த நிலபிரபுக்கள்
ஆந்திராவுடன் இணைபடுத்தி, தனிமாநிலமாக்க கோரினர். அதன் பின்னர், 1961
தேர்தலுக்கு பிறகு உருவானஅம்மாநில சட்டமன்ற பெரும்பான்மையும்
ஆந்திரபிரதேசத்தில் இணைவதாகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
பிராந்தியத்துடன் இணைப்பது, இல்லையேல் தனிமாநிலம் அமைப்பது என்று அன்றைய
மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைசெய்தது.



அவ்வொப்பந்தங்களை மத்திய அரசு
கைவிட்டது. இதனால் தெலுங்கானா மக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக்
கோரிக்கை அவ்வப்போது குமுறலாகவெளியானது. பலகாலமாகவே அரசில், அரசியலில்
தெலுங்கானா மக்களுக்கானமுக்கியத்துவம் குறைந்து வந்ததால் 1969-இல்
தெலுங்கானா பகுதியினர்தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டங்களை நடத்தினர்.
ஏறத்தாழ 360 பேர் கைதுசெய்யப்பட்டு கடும் அடக்குமுறைக்கு பிறகு அந்தப்
போராட்டம் படிப் படியாககுறைந்து போனது.



பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரராவ் ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியை 2001-இல் உருவாக்கினார்,தெலுங்கானா என்பதே அந்த கட்சி யின் மையமான கோரிக்கை ஆனது.
தெலுங்கானா
தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் முடிவெடுக்கும்என அறிவித்த
தன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங் களும் இத்தகையகோரிக்கையை எழுப்பி
வருகின்றன.



தமிழ கத்தை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு,கொங்கு நாடு
என பிரிக்க வேண்டுமென கோரிக்கை எழ ஆரம்பித்தது. உத்திரபிரதேச மாநிலத்தை
மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி கோருகிறார். அதேபோல
உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போடோலாந்து,உத்திரப்பிரதேசம்
மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து பிண்டேல் கண்ட், மகாராஷ்டிரா மற்றும்
கர்நாடகாவிலிருந்து குடகு மாநிலம், ஒரிசாவிலிருந்துமகா கவுசல்,
பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து
பூர்வாஞ்சல்,குஜராத்திலிருந்து சௌ ராஷ்டிரா எனத் தேசிய அடிப்படை யிலும்,
சாதி அடிப்படையிலும் தனி மாநில கோரிக்கை கள் முன் வைக்கப்படுகின்றன.



மாநிலங்கள் உருவானவிதம்


சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒன்பது பிரிட்டீஷ் மாகாணங்களும், 562சிறு மன்னராட்சி பகுதி களும் (Princity States) நிலவில்இருந்தன.
சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பின்
முதல்கட்டத்தையடுத்து மாநிலங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன.



அவை:


“A’ Category:
உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம்.ஒரிசா, மத்திய
பிரதேசம், மெட்ராஸ் தற்போதைய தமிழ்நாடு +ஆந்திரம்), பம்பாய்(தற் போதைய
மகாராஷ்டிரம்+குஜராத்). இவை ஆளுனரின் ஆட்சியின் கீழ்செயல்பட்டன.



“B’ Category:
PEPSU, , மத்திய இந்தியா, மைசூர் (தற்போதைய கர்நாடகம்),சௌராஷ்டிரம்,
ராஜஸ்தான், ஹைதராபாத், திருவிதாங்கூர், கொச்சி. இவை மாநிலத்தலைவரின்
ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.



“C’ Category: அஜ்மீர்,
கட்ச், கூர்க், தில்லி, பிலாஸ்பூர், போபால்,திரிபுரா, இமாசலப் பிரதேசம்,
மணிப் பூர், விந்தியப் பிரதேசம் இவைலெப்டினட் கவர்னரால் ஆட்சி
செய்யப்பட்டன.



“D’ Category : அந்தமான் நிகோபார் தீவுகள். மத்திய அரசின் நேரடி நிர்வாகம்.


மாநில மறுசீரமைப்பு கமிஷன்:


* இரண்டாம் கட்ட மாநில சீரமைப்பு
வட்டாரக் கூறுகள், மொழி, கலாச்சாரம்மற்றும் பொருளாதார நிலைகள்
போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.



* மொழியடிப்படையில் மாநிலங்களை
புனர் நிர்மாணம் செய்யவேண்டும் எனும்கோரிக்கை பற்றி ஆராய் வதற்காக
அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டஎஸ்.கே. தர் கமிஷனும்,
காங்கிரசின் ஜெ.வி.பி. கமிட்டியும் (நேரு, படேல்,பட்டாபி சீதாராமைய்யா)
மொழி வழிப் பிரிவினைக்கு உடன்படவில்லை.



* ஆனால் தெலுங்கு மொழி
பேசுபவர்களுக்காக ஒரு தனி மாநிலம் உருவாக்கியேஆகவேண்டும் என்னும்
கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுஎனும் தெலுங்கர் மரண
மடைந்ததையடுத்து 1953, அக்டோபர் ஒன்றாம் தேதிஆந்திரப் பிரதேச மாநிலம்
உருவாக்கப்பட்டது. (தெலுங்கானாப் பகுதிகளும்சேர்க்கப்பட்ட புதிய
ஆந்திரப்பிரதேசம் 1956, நவம்பர் ஒன்றாம் தேதிஉருவானது)

ஆந்திரப்பிரதேசமே இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்
*
இதையடுத்து மேலும் பல மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்என்னும்
கோரிக்கை வலுத்தபோது 1953-இல் ஸயீத் ஹஸன் அலி தலைமையில் ஒருகமிஷன்
நியமிக்கப்பட்டது.



* 1956, செப்டம்பர் 30-இல் கமிஷன்
தனது அறிக் கையை தாக்கல் செய்தது.இந்தியா 16 மாநிலங்கள் மற்றும் மூன்று
ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும் என அது பரிந்துரைத்தது. இதன்
பெரும்பகுதியை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு 15 மாநிலங்கள், ஏழு மத்திய ஆட்சிப்
பகுதிகள் அமைய ஒத்துக் கொண்டது.



* இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம்
தேதி, மாநில மறு சீரமைப்பு சட்டத்தை(1956) நிறைவேற்றிய பாராளுமன்றம் 14
மாநிலங்கள், ஆறு மத்திய ஆட்சிப்பகுதிகளை உருவாக்கியது.



பல்வேறு மாநிலங்கள்


* மாநில மறுசீரமைப்புக் கமிஷன்
பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்கள்ஏற்படுத்தப்பட்ட
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மாநிலப் பாகுபாட்டில் பல்வேறுமாற்றங்கள்
நிகழ்ந்தன.



* 1957 – அசாமின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு சர்ழ்ற்ட் ஊஹள்ற் எழ்ர்ய்ற்ண்ங்ழ் ஆஞ்ங்ய்ஸ்ரீஹ் என மாற்றம் செய்யப் பட்டது.


* 1961, மே-1 – பம்பாய் மாகாணம் குஜராத், மகாராஷ்டிரம் என இரண்டாக பிரிக்கப் பட்டது.


* 1961 டிசம்பர் 16-
போர்த்துக்கீசிய காலனிகளான கோவா, டாமன், டையூ அன்னியசக்திகளிடமிருந்து
விடுவிக்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதிகளாக இந்தியன்யூனியனில்
இணைக்கப்பட்டன.



* 1963 டிசம்பர் 1 – நாகா மலைப்பகுதி “நாகாலாந்து’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (1961) தனி மாநிலமானது.


* 1966 நவம்பர் 1 – பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன.


* 1971 ஜனவரி 2 – பஞ்சாப் மாநிலத்தின் சில மலைப் பகுதிகள் இமாசலப் பிரதேசத்திற்குள் உட்படுத்தப் பட்டு அது தனி மாநிலமாக்கப்பட்டது.


* 1972 – மணிப்பூர் ஒரு முழு மாநிலமானது.


* 1972 ஜனவரி 21 – அசாம் மாநிலத்திற்குள்ளேயே ஒரு தன்னாட்சி மாநில அந்தஸ்துடன் மேகாலயா மாநிலம் அமைக்கப்பட்டது.


* 1972 – திரிபுரா தனி மாநிலமானது. இது முதலில் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு (1947)


* பிற்பாடு 1956-இல் மத்திய அரசு நிர்வாகப் பகுதியானது.


* 1973-இல் மைசூர் மாகாணம், கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது (1956-இல் உருவாக்கப் பட்டது)


* 1974 – இந்தியாவின் ஒரு பகுதியான
சிக்கிம்பிற்பாடு இந்தியாவின் ஒரு கூட்டமைப்பு மாநிலமானது. 1975 ஏப்ரல் 14
அவசரக்சட்டத்தை யடுத்து இது இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்
கொள்ளப்பட்டது.



* 1987 பிப்ரவரி 20 – அருணாசலப் பிரதேசம் எனும் புதிய பெயர் சூட்டப்பட்டு தனி மாநிலமானது.


* 1987 பிப்ரவரி 20 – மிசோரம் தனி மாநிலமானது (இது 1972 வரை அசாமின் ஒரு மாவட்டமாக இருந்தது)


* 1987, மே 30 – கோவா தனி
மாநிலமானது. (இது 1961-இல்போர்த்துக்கீசியரிடமிருந்து விடுவிக்கப்
பட்டது). அதே வேளையில் டாமனும்,டையூவூம் மத்திய ஆட்சிப் பகுதியாகவே
தொடர்ந்தன.



* 1991 – தில்லி தேசிய தலைநகரப் பகுதியானது.


* 2000 நவம்பர் 1 – மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது (இந்தியாவின் 26-வது மாநிலம்)


* 2000 நவம்பர் 4 –
உத்திரப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள் அடங்கியஉத்தராஞ்சல் மாநிலம் உரு
வாக்கப்பட்டது. (இந்தியாவின் 27-வது மாநிலம்)



* 2000 நவம்பர் 15 – பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. (இந்தியாவின் 28-வது மாநிலம்).

நன்றி: வேடந்தாங்கல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum