இந்திய தேசிய சின்னங்கள்......!!!
Mon Aug 18, 2014 12:21 pm
[size=14]தேசிய பறவை: மயில்[/size]
தேசிய நீவாழ் விலங்கு: டால்பின்
தேசிய மலர்: தாமரை
தேசிய விளையாட்டு: ஹாக்கி
தேசிய மொழி: இந்தி
தேசிய கொடி: மூவர்ணக் கொடி
தேசிய கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்துகிறது.
பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது.
வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.
தேசிய கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.
தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள்: 24.
தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: ஜீலை 22-1947.
மூவர்ணக்கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக்கொண்ட வருடம் 1931.
[size=14]தேசிய விலங்கு: புலி.[/size]
தேசிய சின்னம்: உத்திரபிரதேசத்தில் உள்ள அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு விலங்கள்: சிங்கம், யானை, குதிரை, காளை.
தேசிய கீதம்: ஜனகனமண....
தேசிய கீதத்தை எழுதியவர்: ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 24-1-1950.
முதன் முதலில் பாடப்பட்டது: 1911 டிசம்பர் 27 ல் கல்கத்தாவில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்.
தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம்: 52 விநாடிகள்.
தேசிய பாடல்: வந்தே மாதரம்.
தேசிய பாடலை இயற்றியவர்: பக்கிம் சந்திர சட்டர்ஜி.
முதன் முதலில் பாடப்பட்டது: 1896 ல் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்.
தேசிய நாட்காட்டி: சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
சகா வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது: 1957 ஆண்டு மார்ச் 22.
தேசிய நாட்காட்டியின் முதல் மாதம்: சித்திரை.
தேசிய மரம்: ஆல மரம்.
தேசிய நதி: கங்கை / கங்கா.
தேசிய பாரம்பரிய விலங்கு: யானை
நன்றி: சிந்திங்க
Permissions in this forum:
You cannot reply to topics in this forum