உங்களை தலைவராக அறிந்து கொள்ள
Wed Sep 09, 2015 6:43 pm
பிரபல வேளாண்மை நிபுணர்களான லீ அயு கோக்கா மற்றும் தேரின் விட்னி ஆகிய இருவரும் இணைந்து 'Where Have all the leaders gone?' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டனர். இந்தப் புத்தகம் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்றது.
தலைமை இல்லாமல் எந்த ஒரு நாடும் கிடையாது. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு நிர்வாகமும் இல்லை. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு அணியும் கிடையாது. அந்தளவுக்கு தலைமை என்பது மிக முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தொண்டர்களும் சரியாக இருப்பார்கள் என்பார்கள். தலைவரின் செயல்பாடுகளைப் பொருத்தே தொண்டர்களின் மனநிலையில் முன்னேற்றம் வரும். ஒரு சிறந்த தலைவர் என்பவர் யார்? அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும்? அவரிடம் உள்ள பண்புகள் என்ன? என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஆராய்கிறது இந்நூல்.
அதோடு, ஒரு சிறந்த தலைவரிடம் இருக்க வேண்டிய குண நலன்கள் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும் விரிவாக அலசுகிறது. இதில், குறிப்பாக ஒன்பது விதமான ‘C’க்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள் எழுத்தாளர்கள். இந்தத் தன்மைகள் இருக்கும்பட்சத்தில் ஒருவரால் சிறந்த தலைவராக திகழ முடியும் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். அது, சிலரிடம் மட்டும்தான் இயற்கையாகவே இருக்கும். தலைவராக விரும்பும் ஒவ்வொருவரும் தாங்களாகவே அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.
அந்த ஒன்பது விதமான ‘சி’க்கள் என்ன என்பதுப்பற்றி பார்ப்போம்.
1. CURIOSITY (ஆர்வம்)
2. CREATIVE (படைப்பாற்றல்)
3. COMMUNICATE (தொடர்பு)
4. CHARACTER (குணம்)
5. COURAGE (தைரியம்)
6. CONVICTION (உறுதி)
7. CHARISMA (கவர்ந்திழுக்கும் தன்மை)
8. COMPETENT (சமாளிக்கும் தன்மை)
9. COMMON SENSE (பொது அறிவு)
இந்த விஷயங்களையெல்லாம் ஒருவர் தன்னிடம் வளர்த்துக் கொள்ளும் போது, அவரும் ஒரு சிறந்த தலைவராக சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்படுவார். இன்றைய சமூகத்தில் உள்ள இளைஞர்கள், தலைவர்களெல்லாம் இயற்கையாகவே பிறக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தலைவர்கள் பிறக்கப்படுவதில்லை; உருவாக்கப்படுகின்றார்கள்.
தலைவர்களின் பணி வெறும் மேசையில் உட்கார்ந்து கொண்டு உரை நிகழ்த்துவது மட்டுமில்லை, அவர்கள் போர்க்களங்களுக்கும் செல்வார்கள். தங்களுடைய குடும்பத்தை அங்கு அனுப்ப வேண்டிய சூழல் வந்தாலும் அதையும் செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல், தான் மடிந்து விட்டால், அதன்பிறகு வழிநடத்த அடுத்த தலைமையையும் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவர் வெற்றியை நோக்கி வழி நடத்துவார்.
ஆப்ரகாம் லிங்கன் ஒருமுறை கூறும்போது, “நீங்கள் ஒருவரை சோதிக்க வேண்டும் என்றால், அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்து பார்க்க வேண்டும்” என்கின்றார். அதனால், நீங்களும் உங்களை தலைவராக அறிந்து கொள்ள இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- சலீம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum