மின் உபோயாகத்திற்கான கணக்கீட்டை நீங்களும் அறிந்து கொள்ள
Mon Sep 16, 2013 7:34 pm
மின் உபோயாகத்திற்கான கணக்கீட்டை நீங்களும் அறிந்து கொள்ள வீடுகளுக்கு உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவீட்டினை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அந்தந்த பகுதியில் உள்ள மின்வாரியத்தைச் சார்ந்த கணக்கீட்டாளர்கள் வந்து கணக்கெடுத்து செல்கின்றார்கள்.. முன்பெல்லாம் மாதம் ஒரு முறை என்ற நிலை இருந்தது..
கணக்கீட்டாளர் நுகர்வோர்களின் மின் பயனீட்டின் உபயோக அளவினை அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ மின் அலுவலகத்தில் உள்ள கணினியில் அப்லோடு செய்கின்றார்கள்.. இவர்கள் மின்சாரப் பயன்பாட்டினை கணக்கீடு செய்ய பிரத்யேகமாக ஹேன்ட் டிவைசர்களும் வழங்கப்பட்டுள்ளது..
இரண்டு மாதங்களுக்கொருமுறை என்பது சுழற்சி முறையில் பகுதி வாரியாக வந்து கணக்கெடுக்கின்றார்கள்.. 60 நாட்களுக்கொருமுறை என்பது சில நேரங்களில் 65 நாட்கள் 70 நாட்கள் என்று கணக்கெடுக்க வராமல் இருந்து விடுவதுண்டு.. கணக்கெடுத்த பின்னர் பயனீட்டாளர் அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை ஆன்லைனிலும் வங்கிக்காசோலையிலும் அல்லது நேரிடையாக சம்மந்தப்பட்ட மின்சார அலுவலகங்களிலேயோ செலுத்துகின்றனர்..
மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு இவ்வளவு என்று கணக்கு வைத்திருக்கின்றார்கள்.. இரண்டு மாதத்திற்கு 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ஒரு யூனிட்டிற்கு நிரந்தர தொகையுடன் சேர்த்து ரூபாய் 1.20காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 101 லிருந்து 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால் 1.60 காசுகள் கட்டணம்.. அதாவது 200 யூனிட்டுகளுக்கு உண்மையான கட்டணம் ரூ.560. ஆனால் அரசு மானியமாக ரூபாய் 260 வழங்குகின்றது. இதேபோன்ற 301 முதல்400 வரை ரூ. 2.43ம், 401 முதல் 500 வரை 2.62 வரையும் அதிக பட்சமாக அரசு வழங்கும் ரூபாய் 500 ஆனது 500 யூனிட்டுகள் வரை 60 நாட்களுக்கு உபயோகப்படுத்துவோருக்கு மானியமாக கிடைக்கின்றது..
ஆனால் 60 நாட்களில் 500 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் பயன்படுத்தி விட்டாலும் கூட அரசின் மானியம் அறவே கிடையாது. அது தவிர 1 யூனிட்டிற்கு ரூ. 3.68 காசுகள் வீதம் பயன்படுத்திய மொத்த யூனிட்டு களுக்கும் செலுத்தவேண்டும். இதுவே 600 யூனிட்டுகளுக்கு மேற் சென்றால் 4 ரூபாய் செலுத்தவேண்டும்..
எங்களுடைய வீட்டு மின்இணைப்பினை கணக்கீடு செய்ய கணக்கீட்டாளர் வந்த போது நாங்கள் பயன்படுத்திய மின் அளவீடானது 500 ஐ தாண்டி யிருந்தது.. அதற்கு முந்தைய கணக்கீட்டில் 470 யூனிட்டுகள் மட்டுமே செலவாகியிருந்தது.. அதாவது தோராயமாக ஒரு நாளைக்கு 8 யூனிட்டுகள்.
முந்தைய மாதத்தில் கணக்கீடு செய்த நாளிலிருந்து இப்போது வந்த கணக்கீடு செய்த நாளைப் பார்த்தபோது கணக்கீட்டாளர் ஒரு வாரம் தாமதமாக வந்து கணக்கெடுத்ததில் வீட்டின் மின்சார உபயோகம் 520 யூனிட்டை தாண்டிவிட்டது.. அவ்வளவு தான் 520 யூனிட்டிற்கான கட்டணத்தொகை ரூபாய் 1955 என்று அட்டையில் குறிப்பிட்டு கொடுத்தார். முன்னதாக 470 யூனிட்டுகளுக்கு நாங்கள் ரூபாய் 1240 மட்டுமே செலுத்தியிருந்தேன்.. அப்படி என்றால் அதிகப்படியாக ஓடிய 50 யூனிட்டிற்கு 515 ரூபாய் கூடுதல் கட்டணமா?
நான் அந்த கணக்கீட்டாளரை விடுவதாக இல்லை.. '60 நாட்களுக்குள் நீங்கள் வந்திருந்தால் என்னுடைய பயன்பாட்டின் அளவு 500 யூனிட்டுக் குள் தான் இருந்திருக்கும்.. நீங்கள் தாமதமாக வந்ததால் இந்த அதிகப்படியான கட்டணம். நான் இந்த கூடுதல் தொகையை எப்படி ஏற்க முடியும்' என்றேன்.. 'சார் எங்கள் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை.. நான்கு பேர் செய்யக்கூடிய வேலைய இரண்டு பேர் மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம்.. அதனால் தான் இங்கே வந்து ரீடிங் எடுக்க தாமதம் ஆனது' என்றார்..அதற்கு நான் 'அது உங்க நிர்வாகக் கோளாறு நான் என்ன செய்ய முடியும்' என்றேன்.. அவர் வாக்குவாதத்திற்கு தயாராக இல்லை.. 'எதுவாக இருந்தாலும் நீங்க வந்து டி.இ யைப் பாருங்கள்' என்றார்..
அடுத்த நாள் டிஇ யிடம் சென்று முறையிட்டேன்.. முதலில் முடியாது என்று மறுத்தார்.. 'அதெப்படி சார் நீங்க ரீடிங் எடுத்த 20 நாள்ல பணம் கட்டச் சொல்றீங்க.. ஒரு நாள் தாமதமாக ஆனாக்கூட நுகர்வோர்கள் கிட்ட அபராதத்தோட வசூல் பண்றீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா' என்றேன்.. 'நீங்கள் கணக்கீட்டாளரை 60 நாட்களுக்கு அனுப்பாமல் போனது உங்களின் தவறு.. அதனால் எங்கள் வீட்டின் மின்சாரப்பயன்பாடு 500 ஐ தாண்டியுள்ளது.. 500க்கு மேல் தாண்டியதால் எனக்கு கிடைக்கவேண்டிய அரசின் மானியம் இல்லாமல் போனது.. ஒன்று இந்த மின் பயன்பாட்டின் அளவை குறைத்து 500க்கு கீழே ஒரு அளவை குறித்துக்கொண்டு என் கட்டணத்தை குறையுங்கள் என்றேன்'. 'அதெல்லாம் முடியாது சார்.. உங்களுக்கு செஞ்சா எல்லாருக்கும் பண்ணனும்' என்றார்.. 'சார் என்னிடம் எல்லா ரிகார்டுகளும் உள்ளன.. கணக்கீட்டளார் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதியில் வந்து கணக்கீடு செய்துள்ளார் என்ற விவரத்தை வைத்து நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடருவேன், இதனை நான் அப்படியே விட்டு விடமாட்டேன்' என்றேன்..
என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அங்கிருந்த உதவியாளரை அழைத்து 520 யூனிட்டுகளா இருந்ததை 490 யூனிட்டுகள் என மாற்றி ரூ1300 என்று திருத்திக் கொடுத்தார்..
இதனை கேட்காமல் போயிருந்தால் 655 ரூபாய் கூடுதலாக செலுத்தி யிருக்க வேண்டியிருக்கும். கேட்டதினால் இனி 60 நாட்களுக்குள் கணக்கீட்டாளர் வந்து கணக்கெடுக்கும் சூழ்நிலை உருவாகும். நமக்கேன் வம்பு என்று இப்படி எதையும் கேட்காமல் போய்க்கொண்டே இருப்பதால் தான் அரசு அலவலகங்கள் மந்த கதியில் செயல்படுகின்றது.. அரசு அதிகாரிகளும் தாங்கள் செய்யும் தவறுகளை உணருவதில்லை.. நுகர்வோர்களுக்கு அலட்சியமாக பதிலளிக்கின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து நமக்கு கிடைக்கும் நியாயமான சலுகைகளும் உரிமைகளையும் நாம் ஏன் விட்டுத்தரவேண்டும்?
கணக்கீடு செய்யும் விவரங்களுக்கான இணையதளத்தின் லிங்க்கையும் இங்கே கொடுத்துள்ளேன்.. கணக்கீட்டளார் மின் உபோயாகத்திற்கான கணக்கீட்டை சரியாக செய்துள்ளாரா என்பதை நீங்களும் அறிந்து கொள்ள முடியும்..
http://tneb.tnebnet.org/tariff_new.html
Online Tariff Calculator - Bi-monthly
tneb.tnebnet.org நன்றி : f/b udai kumar
நன்றி: ரசிகன் இயற்கை ரசிகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum