எல்லா இருதயங்களையும் அறிந்தவர்
Sun Aug 30, 2015 8:58 am
கேய்ர்ஸீ (Keirsey temperament test) மனநிலைத்தேர்வு என்று அமெரிக்காவில் ஒரு பிரபலமான ஒரு ஆன்லைன் தேர்வு உண்டு. பேட் கேய்ர்ஸீ மற்றும் அவரது மகன் டேவிட் கேய்ர்ஸியால் நடத்தப்படும் பிரபல நிறுவனம். இது மனிதர்களின் குணாதியங்களை 4 வகையாகப் பிரிக்க உதவும் ஒரு நுட்பமான சைக்கோமெட்ரிக் டெஸ்ட். இந்தத் தேர்வின் இறுதியில் நமக்குப் பொறுத்தமான வேலை, மற்றும் வேலைக்குப் பொறுத்தமான ஆள், ஒரு குழுவின் மற்ற நபர்களுடன் இவர் பொறுந்திப்போவாரா என்றெல்லாம் வகைப்படுத்த இந்தத் தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வில் ஏராளமான கேள்விகள் உங்களைப் பற்றித் தொடர்ச்சியாகக் கேட்கப்படும். நீங்கள் ஒரு கேள்விக்கு வேண்டுமென்றே மாற்றிப் தவறான தகவலைப் பதில்லாகத் தந்தாலும் பல கேள்விகளுக்குப் பின்பு முற்றிலும் வேறுவகையில் கேட்கப்படும் அதேகேள்வி நீங்கள் முன்பு பொய் சொன்னதை அறிந்து கொள்ளும். அறிவியல்பூர்வமான பல வேலைக்கு ஆள் எடுக்கும் பல நிறுவனங்களால் நம்பகத்தன்மைவாய்ந்ததாகக் கருதப்படும் தேர்வை சுமார் 15 வருடங்களுக்குமுன் புரோகிராம் செய்யும் வாய்ப்பு எனக்கு டேவிட்டுடன் இணைந்து செய்யும் கிடைத்தபோது அதன் பின்னால் உள்ள மிகச் சிக்கலான லாஜிக்குகளைக் கண்டு வியக்க நேரிட்டது.
நான் வேண்டுமென்றே பலமுறை பலவாறாகப் பதிலளிக்க முயற்சி செய்தாலும் என் குணாதிசயம் (temperament sort) மற்றும் நிலைப்புத்தன்மை (Consistency) என்ன என்பதை ஒவ்வொறு முறையும் சரியாக இந்த அப்ளிக்கேஷன் காட்டிக் கொடுத்துவிட்டது. பேட் கேய்ர்ஸி இதற்கான கடினமான நெறி முறைகளை (algorithm)முன்பே பலவருடங்களுக்கு முன் எழுதியிருந்தார்.
சாதாரண மனிதர்கள் ஒரு எழுதிய இந்தப்புரோகிராமால் நம் உள்ளார்ந்த நிலையைக் காட்டிக்கொடுக்க இயலுமானால், நம்மை உண்டாக்கிய தேவனுக்கு இது எவ்வளவு எளிது.
...தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. I இராஜாக்கள் 8:40
தேவன் நம் இருதயத்தின் எல்லா நினைவுகளையும் அறிந்தவர். இதை எல்லா நேரங்களிலும் நினைவு கூறுவோம். நம் நிலைப்புத்தன்மையை (Consistency)ஐ எல்லா நாளும் உறுதி செய்து கொள்ளுவோம்.
http://www.keirsey.com

Permissions in this forum:
You cannot reply to topics in this forum