வரப் போகும் ஆசீர்வாதத்தைத் திருடி...
Fri Aug 14, 2015 5:54 am
நகரத்தில் சுற்றித் திரிந்த ஒரு குரங்குக்கு ஒரு சுவையான பிஸ்கெட் பாக்கெட்டை ஒருவர் அன்புடன் கொடுத்தார்.
அப்படி ஒரு நறுமணமான பிஸ்கெட்டை அது பார்த்ததே இல்லை. வாயில் எச்சில் ஊறியது. சந்தோஷம் பொங்கியது. யார் கண்ணிலும் படாமல் சாப்பிட அதை எடுத்துக் கொண்டு காட்டில் இருந்த ஒரு மரத்தில் போய் ஏறிக் கொண்டது.
கை காலெல்லாம் பரபரத்தன.
"ஆஹா ! இன்னைக்கு நமக்கு நல்ல வேட்டைதான் ". என்று உற்சாகமாய்ப் பொட்டலத்தைப் பிரித்தது.
அழகழகான குட்டிக் குட்டி பிஸ்கெட்டுகள். அதன் மேல் நறுமணம் வீசும் கெட்டியான கிரீம் . குரங்குக்குப் பரபரப்பில் காய்ச்சலே வந்து விடும் போலிருந்தது.
குரங்கு அவசரமாய்ப் பிரித்ததில் ஐந்தாறு பிஸ்கெட்டுகள் தரையில் விழுந்து விட்டன. உயிரே போய் விட்டது போலிருந்தது குரங்குக்கு .
"ஐயய்யோ ! என் சுவையான பிஸ்கெட் போச்சே " என்று அலறியபடி பிஸ்கெட் பாக்கெட்டை மரத்தில் வைத்து விட்டுக் கீழே தாவியது.
அது கீழே வந்து சேருவதற்குள் எங்கிருந்தோ வந்த அணில்கள் பிஸ்கெட்டை நோக்கி ஓடிவந்தன.
"வந்துச்சிடா ஆபத்து !"
குரங்கு ஆவேசமாய் அவற்றை விரட்டியது . எத்தனை விரைந்து செயல்பட்டும் குரங்கால் ஒரே ஒரு பிஸ்கெட்டை மட்டுந்தான் மீட்க முடிந்தது.
பறிகொடுத்த வேதனையில் சோகமாய் நெடு நேரம் மரத்தடியிலேயே நின்றது. பின்பு மிகுந்த வேதனையுடன் மெதுவாக மரத்தில் ஏறியது .
"போச்சே! போச்சே! " என்று மனது புலம்பிக் கொண்டே இருந்தது.
முதலில் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தது. ஆனால் அங்கே அது விட்டுச் சென்ற பிஸ்கெட் பாக்கெட் இல்லை . அது கீழே விழுந்து விட்ட ஒன்றிரண்டு பிஸ்கெட்டுகளுக்காக வருத்தப்பட்டு நின்று கொண்டிருந்த வேளையில் ,வேறொரு குரங்குக் கூட்டம் வந்து எல்லா ரொட்டிகளையும் தின்று முடித்து விட்டது.
செல்லமே ! நாமும் பலரைப் பார்க்கிறோமே .
கர்த்தர் இன்று கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை நினையாமல், நேற்று இழந்தவற்றையே எண்ணி எண்ணி ஏங்கிக் கையில் இருப்பதையும் பறி கொடுக்கும் கூட்டம். கவலை கூட உன்னை பலவீனப் படுத்தி , வரப் போகும் ஆசீர்வாதத்தைத் திருடிக் கொள்ளும் சாத்தானின் தந்திரந்தான்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum