ஏதோம் முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போகும் – ஒபதியா
Sat Feb 13, 2016 8:58 am
☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் obhadhyah என்று அழைக்கப்படுகிறது. ☀ ஒபதியா என்றால் “ஊழியக்காரன்” அல்லது “கர்த்தரை ஆராதனை செய்கிறவர்” (servant of the Lord or worshipper) என்று பொருள்படும். ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 31-வது புத்தகமாக வருகிறது. ☀ “ஒபதியாவின் தரிசனம்” என்பதே இதன் ஆரம்ப வார்த்தைகள். அவர் எப்போது, எங்கே பிறந்தார், எந்தக்கோத்திரத்தை சேர்ந்தவர், அவருடைய வாழ்க்கையின் விவரங்கள் போன்ற எதுவும் சொல்லப்படவில்லை. ☀ மிகவும் சிறிய புத்தகமான ஒபதியாவில் 21 வசனங்கள் மட்டுமே உள்ளன. ☀ இந்தப் புத்தகம் ஏதோமுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கிறது.
☀ 1 - 14 வசனங்கள் ஏதோமிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு பற்றியும், 15 - 21 வசனங்கள் ஆண்டவரின் நாள் பற்றியும் தீர்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. ☀ சவக்கடலுக்கு தெற்கிலிருந்து அராபா வழியாக நீண்டிருக்கும் ஏதோம் தேசம் உயர்ந்த மலைகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் உடைய கரடு முரடான ஒருநாடு. இது சேயீர்மலை என்றும் அழைக்கப்படுகிறது. ☀ அராபாவுக்கு கிழக்கேயுள்ள மலைத்தொடர், சில இடங்களில் 1,700 மீட்டர் உயரத்தை எட்டுகிறது. ☀ தேமான் மாகாணத்தின் மக்கள் ஞானத்திற்கும் தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ☀ ஏதோம் தேசத்தின் புவியியல் அமைப்பே அதற்கு இயற்கையான பாதுகாப்பை அளித்தது. அதனால் அதில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பாகவும் பெருமையாகவும் உணர்ந்தனர். ☀ ஏதோமியர், யாக்கோபின் சகோதரனான ஏசாவின் சந்ததியார். பின்னர் யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது; எனவே ஏதோமியர் இஸ்ரவேலருக்கு நெருங்கிய உறவினர் ஆவர்.
☀ அவர்கள் அவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்ததால் ‘சகோதரர்’ என்றே அழைக்கப்பட்டனர். (உபா.23:7) எனினும் ஏதோம், எந்தவிதத்திலும் ஒரு சகோதரனைப் போல நடந்துகொள்ளவே இல்லை. ☀ இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு கொஞ்சம் முன்பு, மோசே ஏதோம் அரசனிடம் ஆளனுப்பி அவனுடைய தேசத்தின் வழியாக சமாதானமாய் கடந்து செல்வதற்கு அனுமதிகேட்டார். ஆனால் ஏதோமியர் பகைமையோடு நேரடியாக மறுத்தது மட்டுமல்லாமல், ஒரு படையைத்திரட்டி அவர்களை எதிர்க்க தயாரானார்கள். (எண்.20:14-21) ☀ தாவீது அவர்களை வென்று கீழ்ப்படுத்தியிருந்தார், என்றபோதிலும், பின்னர் யோசபாத்தின் நாட்களில் அவர்கள் அம்மோனோடும் மோவாபோடும் சேர்ந்துகொண்டு யூதாவுக்கு எதிராக சதிசெய்தனர்.
☀ யோசபாத்தின் குமாரனாகிய அரசன் யோராமுக்கு எதிராகவும் கலகம் செய்தனர். (2 நா.20:1,2,22,23). ☀ காத்சாவிலும் தீருவிலுமிருந்து சிறைப்பட்ட இஸ்ரவேலரைத் தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர்; மேலும் அரசன் ஆகாஸின் நாட்களில் யூதாவைத் தாக்கி இன்னும் அநேகரை சிறைபிடித்து சென்றனர். (2 இரா.8:20-22; ஆமோ.1:6,9; 2 நா.28:17). ☀ கி.மு. 607-ல் பாபிலோனிய சேனைகளால் எருசலேம் பாழாக்கப்பட்ட போது இந்தப் பகைமை அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. இஸ்ரவேலர் அழிக்கப்படுகையில் ஏதோமியர் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ☀ அதுமட்டுமல்ல அவர்களை முழுமையாக பாழாக்கும்படியும் பாபிலோனியரைத் தூண்டினர். “அதை இடித்துப் போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப் போடுங்கள்” என்று கத்தினர். (சங்.137:7)
☀ கொள்ளைப் பொருட்களைப் பங்கு போட்டபோது அவர்களும் அதில் ஒரு பங்கைப் பெற்றனர். மேலும் யூதேயாவிலிருந்து தப்பியோட முயற்சி செய்தவர்களை வழிமறித்து, அவர்களைச் சத்துருக்களிடம் ஒப்படைத்தனர். ☀ எருசலேமின் அழிவின்போது நடந்த இந்த வன்முறையின் காரணமாகவே ஒபதியா ஏதோமுக்கு எதிராக கண்டன தீர்ப்பை உரைத்தார். மேலும் ஏதோமின் இந்த வெறுக்கத்தக்க நடத்தை நன்றாக நினைவில் இருந்த போதே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். (ஒப.11,14) ☀ நேபுகாத்நேச்சார், எருசலேமை அழித்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்குள் ஏதோமையும் கைப்பற்றி கொள்ளையிட்டதால், இந்தப் புத்தகம் அதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் கி.மு. 607-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ☀ ஏதோமோடு “உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்” அதனோடு “சமாதானமாயிருந்த” ஆட்களுமே அதை மோசம் போக்குவார்கள் என ஒபதியா முன்னறிவித்தார். (ஒப.1:7)
☀ பாபிலோன் ஏதோமுடன் செய்த சமாதானம் நீண்டகாலம் நிலைக்கவில்லை. கி.மு. ஆறாம் நூற்றாண்டில், அரசன் நபோனிடஸின் பாபிலோனிய சேனைகள் ஏதோமை கைப்பற்றின. ☀ இருப்பினும், அந்தத் தேசத்தின் மீது நபோனிடஸ் படையெடுத்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், நம்பிக்கையிழக்காத ஏதோம் மறுபடியும் தலைதூக்கி விடலாம் என நம்பியது. ☀ இதைக் குறித்து மல்கியா 1:4 இவ்வாறு அறிவிக்கிறது: “ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக்கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக்கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்... என்கிறார்.” ☀ மீண்டும் தலைதூக்குவதற்காக ஏதோம் முயற்சி செய்த போதும் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குள் நபேத்தியர்கள் அந்தத் தேசம் முழுவதிலும் குடியேறிவிட்டனர்.
☀ தங்கள் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஏதோமியர் யூதேயாவின் தென் பகுதியில் வசித்தனர், அது இதூமியா என அழைக்கப்படலாயிற்று. சேயீர் தேசத்தை அவர்களால் திரும்ப கைப்பற்ற முடியவே இல்லை. ☀ ஏதோமுக்கு எதிரான ஒபதியாவின் தீர்க்கதரிசனம் முற்றுமுழுக்க நிறைவேறியது! ☀ அதன் உச்சக்கட்டத்தை எட்டி, அந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “ஏசாவம் சத்தாரோவைக் கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச்சொன்னார்.” (வச.18)
☀ ஏதோம் பட்டயத்தின் உதவியால் வாழ்ந்து பட்டயத்தாலேயே மரித்தது, அதனுடைய சந்ததி பற்றிய எந்தத் தடயமும் மீந்தில்லை. இவ்வாறு இந்தப்பதிவு நம்பத்தக்கது, உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ☀ ஏதோம் மலைகளடர்ந்த தேசம், பெத்ராவோடு சேர்ந்த சவக்கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான நகரம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum