நம் பாரம்பரிய அறிவை திருடி அதை நமக்கே விற்கும் பன்னாட்டு நிறுவனம் !
Thu Nov 06, 2014 12:38 am
இன்று காலை பலசரக்கு கடைக்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோது பையில் பல் துலக்கும் ப்ரஷ் ஒன்று இருந்தது, நான் தான் இரண்டு ப்ரஷ் கேட்டிருந்தேன், ஆனால் இவைகளை எடுத்து பார்த்த போது யாரோ தலைக்கு டை அடித்து விட்டு போட்ட - அல்லது சலூன்களில் பார்த்த ப்ரஷ்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது, உடன் கடைக்காரரை தொலைபேசியில் அழைத்து கேட்ட போது - ‘இது நயம் ப்ரஷ் தான் என்றார்’. ப்ரஷின் அட்டையில் கரித்துண்டு (மரக் கரி) அடங்கியது என்று அச்சிடப்பட்டிருந்தது.
எங்கள் கிராமத்தில் உப்பு, நுணுக்கிய கரித்துண்டு, சாம்பல், செங்கப்பொடி வைத்து தான் பல்துலக்கிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பெரு முதலாளிகள் நமக்கு உப்பின் மகிமையை உணர்த்திவிட்டார்கள், அடுத்து கரித்துண்டிருக்கு நகர்ந்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வரும் காலத்தில் சாம்பல் பிரஷ், செங்கல் கலர் பிரஷ் எல்லாம் வரும், “ நம் பாரம்பரிய அறிவை நம்மிடன் திருடி, நமக்கே விற்பது”என்று பன்பாட்டு அறிஞர் தொ.பரமசிவம் அடிக்கடி கூறும் வரிகள் தான் மனதில் வந்து நிலைகொண்டது
- முத்துக்கிருஷ்ணன்
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum