''பக்ரீத் ” தியாகத்திருநாளின் கதாநாயகன் யார் ?
Sat Aug 08, 2015 10:39 pm
பெங்களூரில் உள்ள பல இடங்களில் பக்ரீத் அன்று பலி கொடுக்கும்படியாக பல ஊர்களில் இருந்தும் ஆடுகள், ஒட்டகங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நானும் இதை கவனித்திருக்கிறேன். இந்த ஆண்டும் அதே போல் பார்த்துவிட்டு மனதில் இஸ்லாமியர்களின் பக்ரித் பண்டிகை பற்றிய சிந்தனையுடன் வீடு வந்து சேர்ந்தேன். வழக்கம் போல் இரவு குடும்ப ஜெபம் , பிறகு சாப்பாடு முடித்து நானும் என் மனைவியும், என் மகனும் ,மகளுமாக கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டுத்தான் துங்குவதற்கு போவோம். நேற்று எங்களுடைய அரட்டை அரங்கத்தில் பக்ரீத் பண்டிகையின் காரியங்கள் தான் இடம் பெற்றது.
எங்கள் மகனுடைய கேள்வி இதுதான் ;- அதெப்படியப்பா ? நம்முடைய வேதத்தில் ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கைத்தான் பலியிட அழைத்துப்போனார் என்றிருக்கிறது முஸ்லீம்கள் மட்டும் ஏன் ஆபிரகாம் இஸ்மவேலை பலியிடும்படி மோரியா மலைக்கு கொண்டு போனார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டான்.
என்னுடைய மனைவிக்கு என்னைக்காட்டிலும் கொஞ்சம் வேத அறிவு அதிகம் தான். அவர்கள் உடனே எங்கள் மகனிடம் ஆதியாகமம் புத்தகத்திலிருந்து, ஆபிரகாம் தன்னுடைய அடிமை பெண் ஆகாரையும், அவளிடம் பெற்ற தன்னுடைய குமாரன் இஸ்மவேலையும், கர்த்தராகிய தேவன் சொன்ன வார்த்தையின் படியே தன்னிடம் இருந்து அனுப்பிவிட்டார் . (ஆதியாகம் 21 ஆம் அதிகாரம் படிக்கவும்) இது நடந்த சில காலத்திற்கு பிறகுதான் ஆதியாகமம் 22 ஆம் அதிகாரத்தில் முதல் இரண்டு வசனம் இப்படியாக சொல்லுகிறது
‘’1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
இதன் அடிப்படையில் பார்த்தால் அடிமைப்பெண் ஆகாரையும், அவள் முலமாக பிறந்த தன்னுடைய குமாரன் இஸ்மவேலையும் தன்னிடமிருந்து அனுப்பிவிட்ட சில காலத்திற்கு பின்புதான் ஆண்டவர் ஆபிரகாமிடம், ஈசாக்கை தனக்கு பலியிடும் படி கூறினார். So, ஈசாக்கு தான் பலியிடும்படி கொண்டு செல்லப்பட்டார். இஸ்மவேலை அல்ல. என்று சுருக்கமாக என்னுடைய மனைவி எங்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.
மனைவி சொன்னதற்கப்புறம் குடும்பத்தலைவன் நாம் எதையாவது சொல்லணுமே, இல்லையென்றால் மக்கள் நம்மைப்பற்றி குறைவாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று நானும் எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு விளக்க ஆரம்பித்துவிட்டேன். விளக்கம் ரொம்பவும் பெரிதாகிவிட்டது. என்ன பண்றது நீங்கள் படித்துதானே ஆகவேண்டும்...( விளக்கத்தின் சிலபகுதிகள் இணையத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது )
விளக்கம் இதுதான்..
1. பைபிள் முழுமையாக எழுதிமுடிக்கப்பட்டு ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகே முகம்மது நபி அவர்கள் மூலம் அல்லா பேசினதை தான் குரான் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. பைபிளில் இருந்து பல வசனங்களை குரானில் சேர்த்திருக்கலாம். ஆனால் குரானில் இருந்து பைபிளில் எந்த வசனத்தையோ, சம்பவத்தையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை .நம்முடைய பைபிள்தான் குரானிலும் பழைமையானது.
2. மோரியா மலைக்கு பலியிடும்படியாக ஈசாக்கு அவர்களைத்தான் ஆபிரகாம் அழைத்து சென்றார் என்று நம்முடைய பைபிள் மிகவும் விரிவாக சொல்லுகிறது. (ஆதியாகமம் 22:9, எபிரேயர் 11:17 மற்றும் யாக்கோபு 2:21 வசனங்களை படிக்கவும்.) இப்படி மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்ட சம்பவத்தை யாரும் திருத்தி மாற்றி எழுதமுடியாது.
3. ஆபிரகாம் தன்னுடைய குமாரனையே பலியிடும்படி கொண்டு சொல்லப்பட்ட சம்பவம் முழு குர்-ஆனிலும் தேடிப்பார்த்தால் ஒரே ஒரு இடத்தில் இந்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது, அதுவும் ஆபிரகாமின் வேண்டுதலாக அது ஆரம்பிக்கிறது. அதாவது தனக்கு ஒரு மகன் கொடுக்கும்படி இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அந்த குர்-ஆன் வசனங்களை இங்கு படியுங்கள்.
மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்." "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்;
"என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அஸ்ஸாஃபாத் (37) :99 - 107) மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், அதாவது பலியிடச்சென்ற மகன் பற்றி குர்-ஆனில் வரும் ஒரே ஒரு இடம் இது தான்.( இப்றாஹீம் என்பவர் ஆபிரகாம் )
மேலும், அந்த ஒரு இடத்திலும் எந்த மகன், அவன் பெயர் என்ன என்ற விவரங்கள் குர்-ஆனில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது, அது என்னவென்றால், இந்த மகன் “ஒரு நற்செய்தியாக” தீர்க்கதரிசனமாக (முன்னறிவிக்கப்பட்டவர்) உரைக்கப்பட்டவர் ஆவார்.
ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்,இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் குர்-ஆனில் கூறப்படவில்லை.முக்கியமாக, இஸ்மவேலின் தாயின் பெயர் ஆகார் என்றும் மேலும் அவருக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும் நாம் பைபிளிலிருந்து அறிகிறோம் (ஆதியாகமம் 25:12-17). நம்முடைய சத்திய வேதமாம் பைபிளில் இருக்கும் விபரங்கள்கூட குரான் வேதத்தில் இல்லை.
நாம் மேலே குறிப்பிட்ட “நற்செய்தி” பற்றிய குர்-ஆன் வசனம் பற்றி நம் கவனத்தை திருப்புவோம். ஈசாக்கு மற்றும் அவரது தாயார் சாராள் பற்றி குர்-ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்.
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். . . . , பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர். பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார். (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள். (அத்தாரியாத் (51) :24-25, 28-30)
(ஈசாக்கு தான் அந்த அறிவுமிக்க மகன், ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று குரான் சொல்கிறது )
மேற்கண்ட வசனங்களுக்கு மேலதிகமாக, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் காண்கிறோம்:
"ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; . . . . (அஸ்ஸாஃபாத் 37:109 - 113)
மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில் வரும் சொற்றொடர்களாகிய “அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்” என்பதையும் “ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.” என்பதையும் கூர்ந்து கவனியுங்கள்.
குர்-ஆனிலே இப்படிப்பட்ட ”நன்மாராயங் கூறுவதாக” என்று இஸ்மவேலின் பிறப்பு பற்றி கூறப்படவில்லை. இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் அதாவது குர்-ஆனில் “நன்மாராயங் கூறி” பிறந்தவர் இஸ்மவேல் அல்ல. அவர் ஈசாக்கு ஆவார் மேலும் ஈசாக்கே பலியிட கொண்டுப் போகப்பட்டவராவார் (குர்-ஆன் 37:99-107).
பைபிள் கூறுவது போல ஈசாக்கு தான் பலியிட கொண்டுபோகப்பட்டார்.
நாங்கள் விளங்கிக்கொண்டது இதுதான்: ---
1. குரானில் ஆபிரகாமிடம் மகனைப் பலியிடும் படி சொன்ன அல்லா எந்த மகன். அவர் பெயர் என்ன என்று சொல்லவில்லை.
2. ஆபிரகாம் எந்த மகனை பலியிடும்படி தேவன் கட்டளையிட்டார் என்பதை பைபிள் மட்டுமே விரிவாக விளக்கம் தருகிறது.
3. அடிமைப்பெண் ஆகாரையும், அவள் முலமாக பிறந்த தன்னுடைய குமாரன் இஸ்மவேலையும் தன்னிடமிருந்து அனுப்பிவிட்ட சில காலத்திற்கு பின்புதான் ஆண்டவர் ஆபிரகாமிடம், ஈசாக்கை தனக்கு பலியிடும் படி கூறினார். So, ஈசாக்கு தான் பலியிடும்படி கொண்டு செல்லப்பட்டார்.
4. கர்த்தர் ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிடும்படி சொல்லும்போது இஸ்மவேல் அவருடைய தாய் ஆகாருடன், ஆபிரகாமை விட்டு தூரதேசத்திற்கு போய்விட்டார்கள்.
5. தன்னுடைய குமாரனை சிலுவையில் பலியிடும்படிக்கு அனுப்பின பிதாவாகிய தேவனின் தியாகத்திற்கு இந்த சம்பவம் ஒரு நிழலாட்டமாக இருக்கிறது. அதனால் தான் இயேசு கிறிஸ்துவும் இஸ்மவேல் கோத்திரத்தில் பிறக்காமல், ஈசாக்கின் கோத்திரத்தில் வந்து பிறந்தார்.
6. இஸ்மவேல் தேவனுடைய வாக்குத்தத்ததின்படி, தேவனுடைய சித்தத்தின்படி பிறவாமல்; சாராளின் பிடிவாதத்தாலும், சாராளின் சித்தத்தின்படியாக அடிமைப்பெண்ணான ஆகாரிடம் பிறந்தவர்.
7. தேவனாகிய கர்த்தரும் மோசேயிடம் தன்னை வெளிப்படுத்தும்போதும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும் என்று தான் சொல்லுகிறாரே தவிர, ஆபிரகாமின் தேவனும், இஸ்மவெலின் தெவனும் என்று சொல்லவில்லை.
8. ஆகாரிடம் பிறந்த இஸ்மவேலை கர்த்தர் ஆபிரகாமின் வாக்குத்தத்த புத்திரன் என்று அங்கிகரிக்காதபடியினால் தான் மலடியாக இருந்த சாராளின் 90 வயதில் ஈசாக்கு என்கிற வாக்குத்தத்த குமாரனை பெறும்படியாக அருள் செய்தார்.
9. கிறிஸ்தவர்களின் பைபிளில் இந்த சம்பவம் மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ள அளவுக்கு, ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் குர்-ஆனில் கூறப்படவில்லை.
10. பைபிள் திருத்தி எழுதப்பட்டது என்று சொல்லுவதெல்லாம் சுத்தப்பொய் ஆகும்.
பலியிடும்படியாக ஆபிரகாமால் அழைத்துச்செல்லப்பட்டவர் இஸ்மவேல் அல்ல ஈசாக்கு தான்.
[size]வேதமே சத்தியம் ^^^ இயேசுவே இரட்சகர்
அன்புடன் பால் பிரபாகர் .
பெங்களூர்.[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum