உயிர்த்தெழுதலுக்குப் பின் 40 நாட்கள்
Thu Aug 06, 2015 8:12 pm
ஒவ்வொரு விசுவாசியும் பறைசாற்றும் ஓர் சத்தியம் ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ (லூக்கா 24:23)
இயேசு மரித்துவிட்டார் என்று மாத்திரம் வேதம் கூறுமாயின் நமது சுவிசேஷம் வீண். நமது இரட்சிப்பே அர்த்தமற்றது. நமக்கு அன்பான எவரும் மரித்துவிட்டால் நம் நினைவில் மாத்திரமே இருப்பார்கள். ஆனால் இயேசு நாதர் மரித்து உயிர்த்து எழுந்ததினால் நம் மத்தியில் இன்றும் வாழுகிறார்.
உயிர்த்தெழுந்த இயேசு பரலோகம் எடுத்து செல்லு முன்பு 40 நாட்கள்
அநேக மக்களுக்கு தரிசனமானார்.
1. மகலதேனா .மரியாள் (.மாற்.16:9-11; யோவா 20:10-18)
2. கல்லறையில் காணப்பட்ட மற்றபெண்கள்.(மத். 28:8-10)
3. ஜெருசலேமில் பேதுரு (லூக்24:34; 1 கொரி 15:5)
4. .பாதையில் பிரயாணம்பண்ணின இருவர் (மாற்16:12-13; லூக் 24:13-35)
5. பூட்டப்பட்ட வீட்டிலிருந்த பத்து சீஷர்கள் (மாற் 16:14; லூக் 24:36-43; யோவா 20:19-25)
6. தோமா உட்பட பதினொரு சீஷர்கள் (யோவா 20:26-31; 1 கொரி 15:5)
7. கலியேகடலில் மீன்பிடத்த ஏழு சீஷர்கள் (யோவா. 21:1-14)
8. கலிலேய மலைப்பகுதியில் பதினொரு சீஷர்கள் ( மத் 28:16-20; மாற் 16:15-18)
9. 500 ஜனங்கள் (1 கொரி 15:6)
10. இயேசுவின் சகோதரன் யாக்கோபு ( 1 கொரி 15:7)
11. இயேசு பரலோகம் எடுத்துக் கொள்ளப்படும்போது பார்த்தவர்கள் ( மாற் 16:19-20; லூக் 24:44-49; அப்1:3-8)
• இயேசுக்கிறிஸ்து உயித்தெழுந்தபின்பு காணப்பட்ட இடங்கள்.
மத் 28:19-20 ,மாற்.16:7; லூக் 23:46; யோவான் 20:10; 1 கொரி. 15:5
அந்த நாற்பது நாட்களும் தமது சீடர்களை ஊழியத்துக்கு ஆயத்தப்படுத்தினார்.
1.வேதத்தைக் கற்றுக் கொடுத்தார்
அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார்.(லூக்கா 24:44-45
2. கடிந்து கொண்டார்
பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.(மாற்கு 16:14)
3. சீடர்களுக்கு சுவிசேஷ ஊழியம் கொடுத்தார்
பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.(யோவான் 20:21-22)
4. பேதுருவிடம் சபையைக் கொடுத்தார்
மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் மகனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள்.(யோவான் 21:17) என்றார்.
5. வாக்களித்த வல்லமைக்காக காத்திருக்க கட்டளை கொடுத்தார்
கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.(லூக்கா 24:49)
6. உலகம் எங்கும் சுவிசேஷம் கூற கட்டளையிட்டார்
பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.(மாற்கு 16:15-18)
7. உலகின் முடிவுவரை நம்மோடு இருப்பேன் என்றார்
நான் உங்களுக்குக் கூறிய அனைத்தையும் அவர்களும் பின்பற்றும்படி போதனை செய்யுங்கள். நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன் என்பதில் உறுதியாயிருங்கள். உலகின் முடிவுவரையிலும் நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன்” என்றார்.(மத்தேயு 28:20)
நன்றி: சி.எம்.சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum