Re: தீர்ப்புக்குப் பின் ...
Wed May 13, 2015 8:31 am
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு!
ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!.
மம்மி முதல்வராகிரார்
ஒ.பி.எஸ் மீண்டும் டம்மியாகிரார்.
நிறைய அப்பாவி தொண்டர்கள் தற்கொலையை தள்ளி வைத்துள்ளனர்.
Re: தீர்ப்புக்குப் பின் ...
Wed May 13, 2015 11:54 am
"பையன் கணக்கு பாடத்திலே ரொம்ப கம்மி மார்க் எடுத்திருக்கான். இஞ்சினியரிங் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கா?'
" கவலையை விடுங்க அண்ணே! பையன் நீதிபதியாகவே வாய்ப்பிருக்கே!"
" கவலையை விடுங்க அண்ணே! பையன் நீதிபதியாகவே வாய்ப்பிருக்கே!"
Re: தீர்ப்புக்குப் பின் ...
Wed May 13, 2015 11:55 am
தமிழிசை: சு சாமியின் அப்பீல் பற்றிய கருத்திற்கும் பாஜகவிற்கும் சம்மந்தம் இல்லை...
# சட்டை என்னுதுதான், ஆனால் மாப்பிள்ளை நானில்லை....
# சட்டை என்னுதுதான், ஆனால் மாப்பிள்ளை நானில்லை....
Re: தீர்ப்புக்குப் பின் ...
Fri May 15, 2015 12:30 am
ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பு பணிகள் மும்முரம்
.
ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றவுடன்
.
ஊழலை ஒழித்து, சொத்து குவிப்பேரை தண்டித்து
நீதியை நிலை நாட்டுவேன்,
.
என்று சூளுரைத்தாலும் ...
.
அதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்
.
நீதியை நிலைநாட்டிய நீதி அரசர் குமாரசாமி ...
.
என்ற தலைப்பில் பள்ளி பாடப்புத்தகங்களில்
பாடங்கள் இடம் பெறலாம் ...
.
SSLC, +2, தேர்வுகளில் ...
.
நீதி அரசர் குமாரசாமி நீதியை எவ்வாறு நிலை நாட்டினார் என்ற கேள்விகளும் கேட்கப்படலாம் ...
.
இந்த கேள்விக்கு சரியான பதில் எழுதினால்தான்
பாஸ் என்ற அறிவிப்புகளும் வெளிவரலாம் ...
.
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ...
.
ஆளாளுக்கு ஊழலில் கூட்டு சேர்ந்தோ, பினாமி
கம்பெனிகளை நடத்தியோ, சொத்து சேர்க்கலாம்.
.
அகப்பட்டால், ஆண்டவன் குமாரசாமியிடம்
கொடுப்பதைக் கொடுத்து
.
மண் சோறு சாப்பிட்டு, நேர்த்திக் கடன் இருந்து
தப்பித்துக்கொள்ளலாம் ..
.
இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் குற்றவாளிகள்
எல்லாம் என்ன, இவர்களை விட பாவம் செய்தவர்களா
அவர்களையும் இதேபோல் வெளியே விட்டுங்களேன் !
.
போலீஸ், கோர்ட்டு எல்லாம் ...
.
ஏழை எளியவர்களை தண்டிப்பதற்கு தானா?
.
நிரபராதிகளான எத்தனையோ பேர் தங்கள் தரப்பு
வாதத்தை சொல்ல கூட வாய்ப்பளிக்கப்படாமல்
சிறைச்சாலைகளில் உள்ளனர்.
.
ஆனால்... குற்றம் புரிந்து இருப்பது தெரிந்தும்
செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும்
விடுவிக்கப்படுகிறார்களே.
.
இது தானா நாம் பெற்ற சுதந்திரம்?
.
இது தானா ஜனநாயகம்?
.
நீதியை நிலைநாட்டிய நீதியரசர் குமாரசாமிக்கு ...
.
எந்த மாநிலத்து கவர்னர் மாளிகை காத்துகிட்டு இருக்கோ...
.
--- அமுதா அமுதா ---

Fri May 15, 2015 12:47 am
Via Stalin Felix... ha ha ha.
அரசு கோட்டால படிச்சு அரசு கோட்டால வேலை வாங்கினவங்க கணக்கு போட்டா அது தப்பே ஆகாது... நம்ம ஜட்ஜ் அய்யா மாதிரி, அவரே உருவாகிய சொந்த கால்குலேட்டர் தான் இது.Govt. Quotala padichu quotala judge agitaru
நன்றி: ஓம் முருகா
Re: தீர்ப்புக்குப் பின் ...
Fri May 15, 2015 12:51 am
தவறாக சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு தண்டனை உண்டு..
தவறாக கட்டிடம் கட்டினால் எஞ்சினியருக்கு தண்டனை உண்டு.. தவறாக கணக்கு காட்டும் ஆடிட்டருக்கு தண்டனை உண்டு.. ஆனால் தவறாக தீர்ப்பளித்தால் அந்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது என்கிறது இந்த நாட்டோட சட்டம்..
காந்தியவாதி கண்ணன்
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
தவறாக கட்டிடம் கட்டினால் எஞ்சினியருக்கு தண்டனை உண்டு.. தவறாக கணக்கு காட்டும் ஆடிட்டருக்கு தண்டனை உண்டு.. ஆனால் தவறாக தீர்ப்பளித்தால் அந்த நீதிபதிக்கு தண்டனை கிடையாது என்கிறது இந்த நாட்டோட சட்டம்..
காந்தியவாதி கண்ணன்
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
Re: தீர்ப்புக்குப் பின் ...
Sun May 17, 2015 5:09 am
நீதியரசர் குமாரசாமியை விமர்சித்தால் சட்டம் பாயும் :பார் கவுன்சில்.
.
.
.
அதுக்கும் அவரையே தீர்ப்பு சொல்ல சொல்லுங்க சார் ...புண்ணியமா போவும்...
.
.
.
அதுக்கும் அவரையே தீர்ப்பு சொல்ல சொல்லுங்க சார் ...புண்ணியமா போவும்...
Re: தீர்ப்புக்குப் பின் ...
Tue May 19, 2015 8:29 am
முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட
வீட்டுக்காரர்கள், சமையல்காரியை அழைத்து
தோட்டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை
பிடித்து சமைக்கச் சொன்னார்களாம்.
தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து
அடித்து சமைக்க ஆரம்பித்தவளுக்கு அதை
சுவைக்க ஆசை ஏற்பட்டதாம்.
முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து
சாப்பிட்டாளாம்.
மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம்.
மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று
எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.
நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த
முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது
என்று வாதிட்டாளாம் அந்த பெண்.
வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம்.
விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு
கால்கள்தான். இந்த பெண் எதையோ
மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று
தீர்பளித்தாராம்.
ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அவளை திருடி
என்றார்களாம்.
தீர்ப்பை ஏற்றுகொள்ளாத அந்த பெண், வழக்கை
ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.
அந்த பெண் என்ன பண்ணினாளோ? ஏது
பண்ணினாளோ? என்ன நடந்துச்சோ? ஏது
நடந்துச்சோ தெரியவில்லை?!
விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும்
முயலுக்கு மூன்றே காலென்று தவறாக
கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.
தீர்ப்பைக் கேட்ட அந்த திருட்டுப் பெண்ணின்
உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்
வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும்
சிரிப்போடும் திமிரோடும் ஊர் மக்களைப்
பார்த்தாளாம்.
நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம்
முழுசாக மறுநாள்தான் மக்களுக்கு தெரிய
வந்ததாம்..
தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு
முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம்
இரண்டுகால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள்.
எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான்.
எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு
சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம்.
(பின் குறிப்பு: இதை படிக்கும் போது உங்களுக்கு வேறு ஏதாவது வழக்கு நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum