தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 6:57 am
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் 10409588_1612978298951172_5899798473506839549_n

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் மறைவு....


மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஒரு பொதுக்கூட்டத்தில் நேற்று (27.07.2015) பேசிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ... மருத்துவமனையில் மாலை 5:30 மணிக்கு மரணம்...

இந்திய திருநாட்டுக்கு மாபெரும் இழப்பு

வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.


பிறப்பு: அக்டோபர் 15, 1931


இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)


பிறப்பு:


1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.


இளமைப் பருவம்:


அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.


கல்லூரி வாழ்க்கை:


தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.


விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:


1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.


குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:


2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.


விருதுகள்:


1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது


ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:


அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
-
ஆழ்ந்த வருத்தங்கள் feeling sad..


Last edited by சார்லஸ் mc on Tue Jul 28, 2015 7:10 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 7:05 am
மாணிக்கம்.வி, சிங்கப்பூர்.
 ''அணுகுண்டு, ராக்கெட் எல்லாம் உருவாக்கி, இந்தியாவைத் தலை நிமிரவைத்த உங்களால், ஒரு சிறந்த அரசியல் தலைவரை தமிழ்நாட்டுக்காக உருவாக்கித் தர முடியுமா? இந்தக் கேள்வியின் வலியை, ஆதங்கத்தை உணர முடிகிறதா?''
''இதுவரை கடந்த 12 ஆண்டுகளில், நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்துவைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில், 'எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சிப் பணிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். சில நூறு பேர் கைகளை உயர்த்தினார்கள். 'எத்தனை பேர் சந்திரனுக்கும் வியாழன் கிரகத்துக்கும் இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் P40bசெல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். அனைவரும் கை உயர்த்தினார்கள். 'எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். 50 பேர் 'நாங்கள் நல்ல அரசியல் தலைவர்கள் ஆக விரும்புகிறோம்!’ என்றார் கள். அதில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம், 'நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு மாணவன், 'இந்தியாவை 10 ஆண்டுகளுக்குள், வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன்’ என்று சொன்னான். ஒரு மாணவி, 'லஞ்சத்தை ஒழிப்பேன்’ என்று சொன்னாள். இன்னொரு மாணவன், 'இளைய சமுதாயத்துக்கு 'என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து, 'நம்மால் முடியும்’ என்ற ஒருமித்த மனப்பான்மையை வளர்ப்பேன். அப்படி என்றால், இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்!’ என்று கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன். எனவே, தகுதியான நல்ல அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க... அதிகரிக்க, நல்ல வளர்ச்சியோடு கூடிய... தொலைநோக்கோடு கூடிய அரசியல் மாற்றம் வரும்!''
வாசுகி, திருப்பூர்.
''சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவது எனக்குப் பிடிக்கவே இல்லை.குறைந்த பட்சம் இந்தியாவின் வரலாறு, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை, பொருளாதாரம் ஆகியவைபற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர் கள் எப்படி ஒரு சமூகத்தை வழி நடத்த முடியும்? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
''தொலைநோக்குப் பார்வையும் சமூக விழிப்பு உணர்வும், பொது நல நோக்கத்தோடு சுயநலம் அற்ற நற்பண்புகளும், தன்னைவிடத் தேசம் பெரியது என்ற உணர்வும்கொண்ட, மக்கள் மனோநிலையை அறிந்த நற்பணி செய்யக் கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர் களைத் தேர்ந்தெடுக்கலாம். ஜனநாயக நாட்டில் மக்களின் ஓட்டு உரிமை மிகவும் முக்கியம். அதைச் சரியாகப் பயன்படுத்தினால், அப்படிப்பட்ட தலைவர்கள் நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்!''
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் P40
எஸ்.ரேவதி, கட்டளை.
 ''தற்போதைய அரசியல் சட்டத்தில் ஒரே ஒரு மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ளலாம் என்று இருந்தால், எந்தச் சட்டத்தைத் திருத்துவீர்கள்... ஏன்?''
''ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றால், அதற்கு மாறாகச் செயல்படுவார்கள் என்றால், அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவருவேன்!''
சித்திரை சிங்கர், அம்பத்தூர்.
''எப்போதும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுடன் மட்டுமே உரையாடுகிறீர்கள்! பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இதுவரை நிகழவில்லை. எதனால்..?''
''நாட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளை பேப்பரில் நீங்கள் படிப்பது இல்லையா? மாணவர் களிடம் கலந்துரையாடுவது ஒரு பகுதிதான். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடி இருக்கிறேன். சமீபத்தில், மே 2011-ல், பீகார் பாலிகஞ்ச் பகுதியில் 300 விவசாயிகளைச் சந்தித்தேன். கர்நாடகாவில் குடலசங்கமத்தில் ஒரு லட்சம் விவசாயிகளைச் சந்தித்து, organic farming பற்றி உரையாடினேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஸ்தியில் 800 விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினேன். உடுப்பியில் விவசாயிகளைச் சந்தித்து உரையாடி னேன். சட்டீஸ்கரில், மத்தியப்பிரதேசத்தில், கேரளாவில், தமிழ்நாட்டில், ஜார்கண்டில், ஆந்திராவில், ஒரிஸ்ஸாவில், கிராம மக்களை, மலை வாழ் மக்களை, இன்னும் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, அவர்களது வாழ்க்கை முறைகளைப்பற்றி அறிந்தேன். அவர்களது மேம்பாட்டுக்குத் தேவையான ஆலோசனைகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு அளித்துள்ளேன். பல அரசுகள் அதை நிறைவேற்றி வருகின்றன. மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்!''
அல்லன், புதுச்சேரி.
 ''இந்திய மக்கள்தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் 60 சதவிகி தத்துக்கும் மேல். 35 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை. 2 கோடிக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி வசதி அளிக்க முடியவில்லை. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே வறுமையில் வாடும் மக்கள்தொகை அதிகம். இந்த நிலையில், இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?''
'' 'இந்தியா 2020’ என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவிகிதத்துக்கு உயர்த்தி, அதை நிலை நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படிச் செய்யப்படுமேயானால் - வேலைவாய்ப்பைப் பெருக்கி, தனி நபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தைப் பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதி நீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறங்களுக்கு அளித்து, ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளைக் கிராமப்புறம் பெறத் தேவையான பன்முகப் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, வறுமையில் வாடும் மக்களை அதில் இருந்து விடுவித்து, மேல் தட்டுக்குக் கொண்டுவந்து,  சமூகப் பொருளாதார வேறுபாடு அற்ற, ஓர் அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும் பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால்... அவசியம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இந்தியா வளர்ந்த நாடாக மாறும்!''
ம.பாரதி, செங்கல்பட்டு.
''எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத் தும் அல்லது எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் அறிவியல் உலகத்தில் இருந்துகொண்டு, எப்படி உங்களால் கடவுளை மாற்றுக் கருத்தின்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது? கடவுளை ஏற்கத் தயங்கும் ஒருவனின் கேள்வி என்றே இதனைக்கொள்க.''
''நண்பர் ரவிக்குமார் அவர்களே, மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அண்ணாந்து பாருங்கள். அங்கு, பிரகாசமாகத் தெரிவதுதான் 'மில்கி வே’ என்ற நம் Galaxy. அந்த பால்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி, சூரியனைச் சுற்றுகிறது. சூரியன், நமது கேலக்ஸியான பால்வெளியைச் சுற்றுகிறது. பால்வெளியே, பிரபஞ்சத்தைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. நமது பால்வெளியைப்போல், ஆயிரக்கணக்கான பால் வெளி கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, ஒரு பெரும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அந்த சக்திதான் ஓர் அரும்பெரும் சக்தி. இதைத்தான் பாரதியார் சொல்கிறார்....
இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?’
 என்று!''

அ.குமரேசன், சென்னை.
 ''குடியரசுத் தலைவராக இருந்தபோது, உங்களைக் கவலைக்கு உள்ளாக்கிய சம்பவம் ஏதேனும் உண்டா?''
''Office of Profit bill உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அந்த ஷரத்துகளைப் படித்தபோது, இந்த மசோதா நமது நாட்டின் நாடாளுமன்றப் பண்புக்கு உகந்ததாக இருக்காது என்று நினைத்து கவலைக்கு உள்ளானேன். அதை, சில ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்துக்குத் திருப்பி அனுப்பினேன்!''
மகா.ராஜேந்திரன், சென்னை-15.
 ''கச்சத் தீவை நம்மால் மீட்கவே முடியாதா?''
''இலங்கையும் இந்தியாவும் கலாசாரத்தால், இனத்தால், மொழியால் பல நூறு ஆண்டுகளாக ஒரு பன்முக இணைப்பைப் பெற்ற நாடுகள். மக்களின் வாழ்க்கை முறை இரு தேசங்களுக்கும் இடையே பின்னப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையின் அடிப்படையில், இரு தேசங்களுக்கும் இடையே ஒரு புரட்சிகரமான அரசியல் கொள்கை உருவாக்கப்பட்டு, ஜனநாயக முறைப்படி தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக, ஓர் இணக்கம் உருவாக்கப்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் கடல், மீன்பிடிப்பு மற்ற தீவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு பொதுவான கொள்கை உருவாக்கப்பட்டு, மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இதற்கு இந்தியாவும் இலங்கையும் இதய சுத்தியோடு பாடுபட வேண்டும். அதைச் செயல்படுத்தக்கூடிய மனோதிடமும் தலைமைப் பண்பும் தலைவர்களுக்கு வேண்டும்!''
சத்தியநாராயணன், அயன்புரம்.
''மரண தண்டனை தேவையா?''
''மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நான் ஜனாதிபதியாக இருந்தபோதே, தெரிவித்து இருக்கிறேன். கொடும் செயல்களுக்காக மரண தண்டனை பெற்ற பல கைதிகளின் வரலாற்றைப் படிக்கும்போது, பெரும்பாலும் கல்வி அறிவு குறைந்தவர்களாகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.கல்வி அறிவு, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் நமக்கு உள்ள அக்கறையின் தன்மையைப் பொறுத்து, குற்றத்தின் தன்மை மாறுபடுகிறது. அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி நாம் பயணப்படும்போது, தெரிய£மலும், அறியாமலும், கோபத்திலும் செய்யும் குற்றச் செயல்கள், வன்கொடுமைகள் குறைய வேண்டும். அப்போதுதான் 2020-க்குள் நாம் வளர்ந்த நாடாவோம் என்பதில் அர்த்தம் உள்ளது!''
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 7:19 am
'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Kalam2


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து சென்றார். அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்துவிட்டாராம் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள Bethany மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 7 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோதே கலாமின் உயிர் பிரிந்திருந்தது என அந்த மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டேவிட் சைலோ தெரிவித்துள்ளார். 7.45 மணிக்கு கலாம் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மருத்துவமனை. கடுமையான மாரடைப்பால்தான் கலாம்-ன் உயிர் பிரிந்திருக்கலாம் என்கிறார் டேவிட் சைலோ.

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.

இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.

இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.

2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

84 வயதிலும் துவண்டு போகாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து இயற்கையின் அவசியத்தையும், மரங்களின் முக்கியத்துவத்தையும் விதைத்தவர்.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ல் அப்துல் கலாம் பெற்றார்.
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை !

நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 12:19 pm
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் 11182109_819549664832163_433452681000243167_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 12:34 pm
இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் 529155_432212733565860_1449383614_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Tue Jul 28, 2015 3:05 pm
அந்த மீனவருக்கு 4 மகன்கள். 8 வது படிக்கும் அவரது நான்காவது மகன் முன்னிரவில் புத்தகங்கள் படித்து தாமதமாக தூங்கி , மறுநாள் தாமதமாக ஆறு மணிக்கு எழுவான்.
"இனி மேல் நீ காலை 5 மணிக்கு எழவில்லையென்றால், உன் துணிகளை எல்லாம் நீதான் துவைக்க வேண்டும். ஜாக்கிரதை" கண்டித்தார் தந்தை.
மறுநாளும் , அந்த சிறுவனால் 6 மணிக்கு தான் எழ முடிந்தது. தனது துணிகளை துவைக்கும் தண்டனையும் கிடைத்தது.
மெல்ல மெல்ல முயற்சித்து சில நாட்களில் , அந்த சிறுவன் 5 மணிக்கு எழ ஆரம்பித்தான். ஆனாலும், தனது துணிகளை துவைக்க துவங்கினான்.
அப்பாவிற்கு ஆச்சர்யம். நீதான் சரியாக எழுந்து கொண்டாயே , ஏன் உனது துணிகளை துவைக்கிறாய்? விலகு" என்றார்.
" அப்பா, நீங்கள் சொன்னதை நான் தண்டனையாக நினைக்கவில்லை. அதை என் கடமையாக நினைக்கிறேன் " சொன்னான் சிறுவன்
அந்த சிறுவன் APJ அப்துல் கலாம் அவர்கள்.
அன்று முதல் கடைசி வரை , வாழ்வில் பல்வேறு உயர் நிலைகளை அடந்த போதும் தனது பணிகளை தானே செய்து கொள்ளக் கூடியவராக இருந்தார் கலாம்.
மிகச்சிலராலேயே ஒழுக்கம் என்றால் என்ன ? என்பது விளங்கிக் கொள்ளப்படுகிறது . அதில் ஒருவர் நமது பாரத தவத்திரு புதல்வன், பாரத ரத்னா, APJ அப்துல் கலாம்
அவரைப் பற்றிய சுவாரசிய குறிப்புகள்
------------------------------------------------------------------
1. அரசின் சலுகைகளை பதவியின் போதும் , பதவி அற்ற போதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.
2. தனது உறவினர்களையோ, நண்பர்களையோ குடியரசு மாளிகைக்கு அழைக்காதவர்.
3. மீறி வந்தவர்களை , தனது சொந்த செலவில் மட்டுமே பயணிக்க வைப்பார். உணவளிப்பார்.
4. குடியரசு மாளிகையில் , பாதுகாப்பு படையை தவிர, குடியரசு தலைவருக்கு சேவகம் செய்ய , 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்டு. ஆனால் கலாம் அவர்கள் 2 பேரை மட்டுமே துணைக்கு வைத்தி கொண்டார். ( நானே சிங்கிள் தானே. எனக்கு சிங்கிள் ரூம் போதும் என்ற அவரது டயலாக் ரொம்பவும் பிரபலமான ஒன்று).
5. பதவிக்காலம் முடிந்த பிறகு , மேலும், குடியரசு தலைவர் மாளிகையில் சில மாதங்கள் இருக்க குடியரசு தலைவருக்கு அனுமதி உண்டு. ஆனால், பதவிக்காலம் முடிந்த உடனே, தனது இரண்டே இரண்டு பெட்டிகளுடன் ( அதுவும் துணிகள் , புத்தகங்கள்) மட்டுமே குடியரசு மாளிகையை விட்டு வெளியேறியவர்.
6. தனது ராமேஸ்வரம் வீட்டிற்கு (தனது அண்ணன் இருக்கும் வீட்டிற்கு) சோலார் மின்சார கட்டமைப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தியவர்.
7.அமெரிக்க விமான நிலையத்தில் , விமான அதிகாரிகள் கலாமை 'சோதித்த' சம்பவம் கேள்வியுற்று, நாடே கொந்தளித்தபோது , " நாட்டு பாதுகாப்பிற்காக அவர்கள் கடமையை அவர்கள் சோதனை செய்கிறார்கள். இதில் கோபப்பட என்ன இருக்கிறது? " என பெருந்தன்மையோடு நடந்து கொண்டவர்.
8. தொண்டு நிறுவனங்கள் , கல்லூரி , பள்ளிகள் என் யார் அழைத்தாலும் , எல்ல நிகழ்ச்சியிலும் எவ்வித பேதமின்றி கலந்து கொள்பவர்.
9.குடியரசு தலைவராக இருந்த போது , வந்த 22 கருணை மனுக்களை நிராகரிக்காமலும் , முடிவெடுக்காமலும் இருந்தார் . ( ஒரே ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை பரிந்துரை செய்தார் . ஏனெனில், அக்குற்றம் அத்தகையது. 14 பெண் குழந்தைகளையும், 6 பண்களயும் பாலியியல் வண்புணர்வு செய்த கொடிய குற்றத்திற்காக, கொடியவன் ஒருவனுக்கு , கலாம் மரண தண்டனை பரிந்துரை செய்தார் )
10. எல்லா கட்சியினரும் , மதத்தினரும், மாநிலத்தினரும், வயதினரும் விரும்பக்கூடிய ஒரெ மாமனிதராக , அரசியலுக்கும் , விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட ( காந்தியைக் கூட விமர்சித்தவர்க்ள் உண்டல்லவா?) மனிதநேயத்தின் மகுடமாக திகழ்ந்தவர் கலாம்
பின்னாளில் வரும் தலைமுறையினருக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும் , இப்படி ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்ந்தார் என்பது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Wed Jul 29, 2015 10:16 pm
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் தெரிந்துகொள்வோம்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Fri Jul 31, 2015 5:18 am
கலாமின் மறைவும், இந்திய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்....
பல சமயங்களில், சமீப காலங்களில் மக்கள் எழுச்சி வரும்போது, அது எப்படி எல்லோரும் ஒரு அணியில் கூடுகிறார்கள் எனும் மிகப் பெரும் சந்தேகம் என்னிடம் எழுவதுண்டு.
உதாரணங்கள், மத்திய கிழக்கு நாடுகள் லிபியா, எகிப்து, சிரியா போன்றவைகள். இவைகள் மட்டும் இன்றி நாகரிகம் மிகுந்த பல ஐரோப்பிய நாடுகளும், தென் அமெரிக்க நாடுகளும் இதில் அடக்கம்.
இந்தியாவில் உதாரணம் காட்ட வேண்டுமானால், அன்னா அசாரே மூலம் தூண்டப்பட்ட எழுச்சியைக் கூறலாம்.
இதன் பின்புலத்தை ஆராய்வோமானால், கீழ்க்காணும் தீர்மானத்திற்கு வரலாம்.
1. எழுச்சியை முன் நிறுத்தும் தலைவர் அப்பழுக்கு இல்லாதவராக இருத்தல்.
2. எழுச்சியின் மூல காரணம் மக்கள் விரோதக் கொள்கைகளை கொண்டு வரும் அரசாங்கம்.
3. தனி மனிதனின் சுதந்திரத்தை ஒடுக்கும் அரசின் விரோதப் போக்கு
4. ஏகாதிபத்திய அரசு, வெகுஜன விரோத அரசு.
கலாமின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் அவரது உறவினரோ, நண்பர்களோ இல்லை. வந்த கூட்டம் முழுவதும் மத அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ வரவில்லை. அவர் அதிகார வர்க்கத்தைச் சேர்நதவர் என்பதாலும் இல்லை.
மக்கள் அவரை நேசித்திருக்கறார்கள். அவரிடம் இருந்த இந்தியப் பற்றை நேசித்திருக்கிறார்கள். அவரது எளிமையையும், நேர்மையையும் வரும்பி இருக்கிறார்கள். அவரைத் தங்களது கனவு நாயகனாகப் பார்த்திருக்கிறார்கள். 
மிகச் சிறந்த உதாரணம் அவர் ஒரு பழி வாங்கத் தெரியாத 'இந்தியன் தாத்தா'.
ஆக, அன்னா அசாரேவோ அல்லது, கலாமோ, யாராக இருந்தாலும், அவர்களது நேர்மை மக்களால் உணரப்படும்போது, மக்கள் அவர்களை தலைவராக மட்டும் இல்லாமல் தெய்வத்திற்கு நிகராக கொண்டாடப் படுகிறார்கள்.
இது எப்படி அரசியலளார்களை பாதிக்கும்?
ஆம், இரண்டே வருடங்களில் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஒரு பெரும் உதாரணம். அரசின் இயலாமையையும், வெகுஜன விரோதப் போக்கையும் முதலாக்கி அரசியலில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவாலின் தொடக்கம் என்பது மேற்கூறிய தியரிக்குள் அடங்குகிறது. அவர் சரியாக ஆட்சி செய்கிறாரா என்பது காலத்திடம் விடப்பட்ட கேள்வி. ஆனால் புரட்சி நடந்தது என்பதே இங்கே பிரதானம்.
ஆகவே, அரசியல்வாதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. ஒரு தனி மனிதரின் மறைவினால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
நாளை மக்களுக்கு எதிராக ஆட்சி நடக்கும் போது எங்கிருந்தோ புறப்பட்டு வரும் ஒரு நேர்மையான தலைவனின் பின்னே நடந்து வர நாடே காத்திருக்கும். அதற்கு பத்திரிக்கை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் பின்புலமாக இயங்கும். 
அரசியல்வாதிகள் இந்த மக்கள் எழுச்சியை மனதில் கொண்டு, இனியாவது மக்கள் நல அரசாக மாற வேண்டும். மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும்.
கலாம் மறையவில்லை. இந்திய மக்களுக்குத் தன் இறப்பின் மூலம் எழுச்சி எனும் உணர்வை ஒவ்வொரு இந்தியனிடத்தும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இனி எனக்கென்ன? நான் தனி மனதனாக என்ன செய்ய முடியும் எனும் ஒரு சாதாரணனின் கேள்வியை உடைத்தெறியச் செய்திருக்கிறார்.
தன் வாழ்க்கையும் இறப்பையும் ஒரு சரித்திர உதாரணமாக்கிச் சென்றுள்ள அந்தத் தலைவனுக்கு நன்றி. மக்கள் சக்தி ஒன்று திரளச் செய்த மாமனிதனுக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள். அரசியல் கட்சிகளுக்கு தன் இறப்பினால் ஒரு எச்சரிக்கை மணி அடித்த உத்தமருக்கு, ஒவ்வொரு இந்தியனின் சார்பாகவும் கோடானு கோடி நமஸ்காரங்கள்.
ஜெய் ஹிந்த்.  
-டிமி
Sponsored content

இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார் Empty Re: இந்திய ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் - காலமானார்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum