மனதை மயக்கும் மஷ்ரூம் கபாப்!
Sat Jul 25, 2015 5:16 pm
பார்லி பிரிஞ்சால் சூப்
தேவையானவை: கத்திரிக்காய் - 400 கிராம், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பற்கள், மிளகு - ஒரு டீஸ்பூன், பார்லி - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: விதை இல்லாத கத்திரிக்காயாக தேர்ந்தெடுத்து காம்புடன் நெருப்பில் சுட்டு... தோல், காம்பு நீக்கி மசித்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். பார்லியை வறுத்து மாவாக அரைக்கவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு, நுரைத்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். பின்னர் மசித்த கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும். பார்லியை நீர்விட்டு கரைத்துச் சேர்க்கவும். இதை ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பரிமாறும் முன்பு தேங்காய்ப் பால் சேர்த்துசூடுபடுத்தி, ஜவ்வரிசியை பொரித்துச் சேர்க்கவும்.
- பூர்ணிமா, பெங்களூரு
மஷ்ரூம் கபாப்
தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - கால் கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), சோள மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். அத்துடன் வெங்காயத்தை சேர்த்து அரைத்து எடுக்கவும். அரைத்த மாவுடன், மஷ்ரூம், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து... ஓர் அங்குல கனம், விரல் நீளத்துக்கு உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் தீயைக் குறைத்து, உருட்டி வைத்துள்ள 'கபாப்’களை சோள மாவில் (கார்ன் ஃப்ளார்) புரட்டி எடுத்து, இரண்டு மூன்றாக போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுத்தாங்கல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum