மஷ்ரூம் சாண்ட்விச்
Thu Jun 16, 2016 9:48 am
மஷ்ரூம் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் - 50g
வெங்காயம் - 10
தக்காளி - 2
இஞ்சி , பூண்டு விழுது -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பாண் துண்டுகள் - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை
காளானை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம் ,தக்காளி சேர்த்து வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
இறுதியாக உப்பு ,மிளகாய்த்தூள் , கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.
இக்கலவையை பாண்துண்டில் வைத்து பேக் செய்யவும். / தோசைத்தட்டில் வைத்து சூடாக்கி இறக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum