மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் உணவுகள்
Mon Mar 18, 2013 5:06 pm
சிலரது மனநிலை புத்துணர்ச்சியுடன் இல்லாமல் இருப்பதற்கு அதிகப்படியான வேலைப்பளுவும், கோபமும் தான் காரணம்.
மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹோர்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும்.
இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும்
ஹோர்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன்
மூலம் சரிசெய்து விடலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது.
மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
வாழைப்பழம்
ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
அதுமட்டுமின்றி இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை
இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை
சீராக பாய வைக்கும்.
அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.
மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தக்காளி
தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற
உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை
தடுக்கும்.
டார்க் சொக்லெட்
இதில் உள்ள அனடாமைன் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும்.
மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.
முட்டை
முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது.
இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது.
அந்த அமினோ ஆசிட்டுகள் உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும்
அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை
சாப்பிடலாம்.
தேங்காய்
தேங்காயில் நடுத்தர சங்கிலியான
ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால் அவை
மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது.
நன்றி: நலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum