அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை
Sat Jul 25, 2015 5:05 pm
வறுமையில் வாடும் கணவன் மனைவி. ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதற்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
மனைவிக்கு அழகான கருங்கூந்தல் உண்டு. அதனை சீவி முடிந்துக் கொண்டையிட ஒரு 'ப்ரூச்' இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைக்கிறாள் (ப்ரூச் என்பது ஒரு வகை விலையுயர்ந்த ஹேர் க்ளிப்). அதை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு தன் கணவரிடம் பணம் இல்லை என்று தெரிந்தும், 'ப்ரூச்'
வாங்கித் தருமாறு ஒருநாள் கேட்கிறாள்.
"நானே என் குடும்ப பாரம்பரியமான வாட்சுக்கு 'ஸ்ட்ராப்' போடுவதற்கு கூட பணமில்லாமல் அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.. ப்ரூச் வாங்க என்னிடம் பணமில்லை. பிறகு பார்க்கலாம்" என்கிறான்.
இருவரும் ஒருவரையொருவரின் நிலைமையைப் புரிந்துக் கொள்கின்றனர்.
ஒருநாள், பஜார் வழியாகச் சென்ற கணவர், அங்கு விதவிதமான 'ப்ரூச்' விற்பனைக்கு வைத்திருப்பதை பார்க்கிறான்.. அதை தன் மனைவிக்கு வாங்கிக்கொடுத்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள் என்று நினைக்கிறான். அதேநேரம் அவனின் மனைவியும், தன கணவரின் வாட்சுக்கு தங்க ஸ்ட்ராப் வாங்க காசில்லாமல் செய்வதறியாது நிற்கிறாள் ஒரு புறம்.
மாலை இருவரும் வீடு திரும்புகிறார்கள். மனைவி வாட்ச் 'ஸ்ட்ராப்'புடனும், கணவன் 'ப்ரூச்'சுடன் வருகிறார்கள். வீடு திரும்பிய இருவருமே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
கணவன் தன்னுடைய குடும்ப பாரம்பரியமான வாட்சை விற்று 'ப்ரூச்' வாங்கியிருக்கிறான். மனைவியோ தன் கணவருக்காக தனது அழகான நீண்ட கருங்கூந்தலை 'விக்' செய்யும் பார்லரில் விற்று, அந்தப் பணத்தில் வாட்ச்க்கு 'கோல்ட் ஸ்ட்ராப்' வாங்கியிருக்கிறாள்.
இருவருக்கும் புரிகிறது, தாங்கள் வாங்கி வந்தது இனிமேல் பயன்படாது என்று.. கண்களால் பேசியபடியே, மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, மார்போடு அணைத்து அவளை தேற்றுகிறான்..
Thanks: Ambuja Simi
Re: அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை
Sat Jul 25, 2015 6:08 pm
காதல்...
ஒரு காதல்ஜோடி திருமணம் செய்து கொண்டனர். வருடங்கள் உருண்டன. குழந்தை இல்லை. அதனால அவனுக்கு அவள் குழந்தையாகவும் அவளுக்கு அவன் குழந்தையாகவும் அன்போடு வாழ்ந்து வந்தனர். ஒருமுறை விடிந்தால் அவளது பிறந்தநாள் தன்ஆசை கணவன் தனக்காக எதாவது பரிசு வைத்திருப்பான் என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்தாள்
அவன் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு வந்து அவளது பிறந்தநாளை துளியும் ஞாபகம் இல்லாதுபோல் நடந்து கொண்டான். இது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. சரி நம்மளே ஞாபகபடுத்தலாமா என்றால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை தடுத்தது. மறுநாள் காலை எழுந்து இப்போதாவது வாழ்த்துனாச்சும் சொல்லுவானா என காத்திருந்தாள்
ஆனால் அவன் வழக்கத்துக்கு மாறாக பயங்கர டென்ஷனுடன் அவளை கடிந்துகொண்டே பணிக்கு செல்ல கிளம்பினான். அவள் எதிர்பார்ப்பு வீணாது. அவனிடம் தயங்கி தயங்கி சொல்ல நினைத்தாள். ஆனா அவனோ மிகுந்த கோபத்துடன் சனியனே வேலைக்கு போறப்ப எருமை மாடு மாதிரி எப்ப பாரு குறுக்கவே நிக்கறதுவழியை விடுன்னு கோபத்தில் கத்தினான்
இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் நொறுங்கி போனாள். நம் கணவன் ஒருநாள் கூட இப்பிடி பேசியதில்லை. இன்று இப்பிடி திட்டிவிட்டானே. பிறந்தநாள் அதுவுமா. அதுசரி பழகபழக பாலும் புளிக்கும் என்று சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்கள் என்று மன உளச்சலில் அந்த விபரீத முடிவு எடுத்தாள். அவன் வழியில் மட்டுமல்ல இனி அவன் வாழ்விலும் குறுக்கிட கூடாது என்றுவிஷம் அருந்திவிட்டாள். விஷம் தலைக்கேறியது மரணத்தை நிமிடங்களாக கணக்கிட தொடங்கினாள்
கடைசியாக தன் காதல் கணவன் முகம் கண்டு இறக்க வேண்டும் என்று திருமண புகைப்பட ஆல்பத்தை எடுத்தாள். அதில்அவன் கைபட எழுதிய கடிதம் கண்ணில் பட்டது
அதில்> அன்பே! என் வாழ்வில் வந்த வசந்தம் நீ! உன் பிறந்தநாளை நான் எப்பிடி மறவேன். இந்த பிறந்த நாளுக்கு நான் உனக்கு குடுக்க போகும் பரிசு எனது கோபம். ஆம்! எனது கோபத்தை நாளை ஒரு நாளோடு முடித்துக் கொள்வேன். நாளை ஒருநாள் மட்டும். என் கோபத்தை பொறுத்து கொள். நம் இருவரும் இன்னும் மகிழ்ச்சியான வாழ்க்கை தொடங்குவோம். மரணிக்கும் வேளையில் கூட உனக்கு ஒரு நிமிடம் முன்பாக நான் இறந்து விடுவேன். நீ இல்லாத இந்த உலகில் இருக்க மாட்டேன்" என்றுஎழுதியிருந்தது.
அவள் கண்களில் கண்ணீரோடு அவசரப்பட்டு விட்டோமே எனஇதயம் கடைசிநொடிகளை எண்ணும்போது... தொலைபேசி அழைத்தது.
"மேடம் உங்க கணவர் சென்ற இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது சம்பவ இடத்திலேயே உங்க கணவர் இறந்துவிட்டார்" என்றுகூறியது
இப்போது கண்ணீரோடு சேர்ந்து காதலும் கரைந்து உயிர் மட்டும் பிரிந்தது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum