விஞ்ஞானம் கூறும் உண்மை
Thu Jul 23, 2015 8:31 pm
தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்திலே சொல்லிக்கொள்கிறான். - சங்கீதம் 14:1
தேவன் இல்லையென்கிறது விஞ்ஞான உலகம். கடவுள் இல்லை, இல்லவே இல்லை
என்ற வார்த்தைகள் எங்கும் தொனிக்கின்றன. தேவன் இல்லை என்பதை நிரூபிக்க
அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பல பெரிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
தேவன் இல்லையென்கிறது விஞ்ஞான உலகம். கடவுள் இல்லை, இல்லவே இல்லை
என்ற வார்த்தைகள் எங்கும் தொனிக்கின்றன. தேவன் இல்லை என்பதை நிரூபிக்க
அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பல பெரிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
உண்மையிலேயே கடவுள் இல்லையென்றால் அவர் இல்லை என்பதை நிரூபிக்க
இத்தனை ஹிமாலய முயற்சிகள் தேவையில்லை. இல்லாத ஒன்றை இல்லை என்று
நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க எடுக்கப்படும்
முயற்சிகளே கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.
"Laws of Cause and Effect" என்ற விஞ்ஞான விதி என்ன கூறுகிறதென்றால், எல்லா
விளைவுகளுக்கும் அவ்விளைவுகளுக்குப் பின்னால் அதற்கான காரணம் ஒன்று உண்டு
என்பதாகும்.
உலகில் பல விதமான கடிகாரங்கள் (Quartz, Electronic) வந்துள்ளன.
விஞ்ஞானிகள் வானவியல் கடிகாரத்தை உபயோகிக்கின்றனர். இந்த கடிகாரம் பூமி
சுழல்வதைப் பொறுத்து செயல்படும். இந்த கடிகாரங்கள் எல்லாம் மனிதரால்
உருவாக்கப்பட்டவை. எந்த கடிகாரமும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளாது.
உலக கடிகாரங்களை எல்லாம் நிர்வாகிக்கின்ற பூமி என்ற பெரிய கடிகாரத்தை உருவாக்க
நிச்சயமாக ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். As the earth is an effect there should
have seen a .cause. that made it..
.
Effect cannot be greater than the cause
மனிதன் கம்ப்யூட்டர்களையும்
ராக்கெட்டுகளையும் கண்டுபிடித்தாலும் தன்னை விட பெரிதான எதையும் அவன்
கண்டுபிடிக்கவில்லை. படைப்புகளில் உயர்ந்தவன் மனிதன். மனிதனுக்கு எப்படி உயிரும்
ஆள்தத்துவமும், உணர்ச்சிகளும் உள்ளதோ அது போலவே அவனை உருவாக்கிய சக்தியும்
மனிதனை விட உயர்ந்ததாக, உயிர் உணர்ச்சி ஆள்தத்துவம் உள்ளதாக இருந்திருக்க
வேண்டும். அந்த சக்தியே எல்லாவற்றிற்கும் மூல காரணர். He is the principal cause
for all the effect.
24 மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னை சுற்றும் உலகம், இரவு பகல்,
பருவகாலங்கள், குறிப்பிட்ட பாதையில் ஓடும் கிரகங்கள் எல்லாம் ஒரு திட்டத்தைக்
காட்டுகின்றன. திட்டம் ஒன்று உண்டென்றால் அதை திட்டமிடுபவரும் நிச்சயம் இருக்க
வேண்டும். If there is a design there has to be a designer..
மர தச்சன் இல்லாமல்
நாற்காலி உருவாவதில்லை.
எந்த பொருளும் கீழே பூமியை நோக்கித்தான் விழுகின்றன. வானை நோக்கி
செல்வதில்லை. இது இயற்கையில் நாம் காணும் சட்டம். சட்டம் இருக்கிறதென்றால்
சட்டத்தை உருவாக்கியவரும் இருக்கத்தான் வேண்டும். If there is a law there has to
be a Law giver.
.
தேவன் இல்லையென்று சொல்பவன் நாஸ்திகன். இவன் எப்போதும் தெய்வத்தைப்
பற்றியே நினைக்கிறான். இல்லாத ஒன்றை பற்றி ஏன் எப்போதும் நினைக்க வேண்டும்?
இதுவும் தேவன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகும்.
தொடக்கம் இல்லாமல் எதுவும் உருவாக முடியாது. பல மில்லியன் வருடங்களுக்கு
முன் சுழன்றுக் கொண்டிருந்த வாயுக் கோளத்தில் இருந்து தான் எல்லா கிரகங்களும்
வந்தது என்று வைத்துக் கொண்டாலும் (விஞ்ஞானம் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறது);
அந்த வாயுக்கோளம் எப்படி, எங்கிருந்து வந்தது? தொடக்கம் இல்லாமல் எவ்விதம் உருவாக
முடியும்?
மனிதன் சிந்திக்கிறான். சிந்தனையின் முடிவில் அறிவுப்பூர்வமான அதிர்ச்சி
அடைகிறான். தேவன் உலகத்தை உருவாக்கினார் என்பதை சோதனைச் சாலையில்
நிரூபிக்க முடியாது என்பதால் குழப்பத்தின் எல்லைக்கு சென்று Darwin Theory
போன்றகொள்கைகளை ஏற்படுத்துகிறான். கடவுளை நம்புபவன் முட்டாள் என்று விஞ்ஞான உலகம்
சென்று கொண்டிருப்பதால்; தேவன் இந்த உலகை சிருஷ்டித்தார் என்ற உண்மையை
மனிதனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த குழப்பமெல்லாம்.
------------------------------------------------------------------------
மூலம்;http://unmaiselvam.blogspot.in/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum