தேவனின் மகிமையைக் கூறும் – எசேக்கியேல்
Sat Feb 13, 2016 9:05 am
☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் யெச்சேஸ்குவேல் (Yehezqel) என்னும் பெயர் கொண்டுள்ளது. ☀ கிரேக்கத்தில் Iezekiel என்றும், இலத்தீனில் Ezechiel என்றும் இந்நூல் பெயர்கொண்டுள்ளது. ☀ எசேக்கியேல் என்பதற்கு "தேவன் பெலப்படுகிறார்" என்று அர்த்தம். ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 26-வது புத்தகமாக வருகிறது. ☀ இப்புத்தகத்தின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் எசேக்கியேலால் உரைக்கப்பட்டதாகவே இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. (1:3, 24:24).
☀ இப்புத்தகமெங்கும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் “நான்” என்ற வார்த்தையும், எழுத்து நடையும் எசேக்கியேல் மாத்திரமே இப்புத்தகத்தை எழுதியிருக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுகிறது. ☀ தீர்க்கதரிசனங்கள் ஒரு ஒழுங்கான தேதி முறையில் எழுதப்பட்டிருப்பதால் அவனது தீர்க்கதரிசனங்களைக் காலம் குறிப்பிட வசதியாகவுள்ளது. கி.மு. 593 ஜூலையில் தொடக்கப்பட்ட எசேக்கியேலின் ஊழியம் கி.மு. 571 ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கடைசி தீர்க்கதரிசனம் வரை தொடர்ந்து உரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
☀ எசேக்கியேல் ஒரு ஆசாரிய வகுப்பைச் சார்ந்தவர். இவர் சாதோக் வகுப்பைச் சார்ந்த பூசி என்பவனுடைய மகன். ☀ தனது 30 வது வயதில் ஆசாரிய ஊழியத்தைப் பெற பயிற்சி பெற்றவர். முடிவில் தீர்க்கதரிசியாக நியமிக்கப்படுகின்றார். இதேப் போல் எரேமியா, சகரியா போன்றவர்களும் ஆசாரிய வகுப்பைச் சார்ந்தவர்களாயிருந்தும் தீர்க்கதரிசியாக தேவனால் நியமிக்கப்பட்டவர்கள். ☀ கி.மு.598 மூன்றாம் நாடு கடத்தலில் எசேக்கியேல் பாபிலோனுக்கு சிறைக்கைதியாகக் கொண்டு போகப்பட்டிருக்கலாம்.
☀ முதல் சிறையிருப்பில் போன தானியேலும், எசேக்கியேலும் ஏறத்தாழ சமவயது அதாவது 17 வயதை உடையவராக இருந்திருக்கலாம். ☀ எசேக்கியேல் தனது 25 வயதில் பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டு, 30 வயதில் ஊழியத்தைப் பெற்றார். கி.மு. 593-570 வரை ஏறத்தாழ 22 ஆண்டுகள் இவர் தனது ஊழியத்தை செய்தார். கி.மு. 586-யில் எருசலேமின் அழிவுக்கு முன் 7 ஆண்டுகளும், பின்னர் 15 ஆண்டுகளும் இவர் ஊழியம் செய்தார். ☀ நேபுகாத்நேச்சார் எருசலேம் மீது கடைசி முற்றுகையை தொடங்கின நாளிலேயே அவருடைய மனைவி மரித்துவிட்டாள். (24:2,18) ☀ எசேக்கியேலின் 7 வருட ஊழியத்தின் தீர்க்க தரிசனங்கள் (1-32 அதி.) எசேக்கியேலின் 15 வருட ஊழியத்தின் தீர்க்க தரிசனங்கள் (33-48 அதி.)
☀ இந்தப் புத்தகம் இயல்பாகவே மூன்று பகுதிகளாக பிரிகிறது. 1). 1 - 24 அதிகாரங்கள் அடங்கிய முதல் பகுதியில் எருசலேமிற்கு அழிவு நிச்சயம் என்ற எச்சரிக்கைகள் அடங்கியுள்ளன. 2). 25 - 32 அதிகாரங்கள் அடங்கிய இரண்டாவது பகுதியில் பல புறமத தேசங்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்புக்குரிய தீர்க்கதரிசனங்கள் உள்ளன. 3). 33 - 48 அதிகாரங்கள் உள்ள கடைசி பகுதியில் திரும்ப நிலை நாட்டப்படுவது பற்றிய தீர்க்கதரிசனங்கள் அடங்கியுள்ளன; ஒரு புதிய ஆலயத்தையும் பரிசுத்த நகரத்தையும் பற்றிய தீர்க்கதரிசனத்தோடு அந்தப் பகுதி முடிவடைகிறது. ☀ இந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் காலவரிசைப்படியும் பொருளுக்கேற்பவும் அமைக்கப்பட்டுள்ளன.
☀ மொத்தம் 48 அதிகாரங்களும், 1273 வசனங்களையும் கொண்டுள்ளது. ☀ 16-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 15-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ இரண்டு வேறுபடுத்திக் காண்பிக்கும் மென்மையான சொற்றொடர்கள் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. “நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்” இது 65 இடத்திலும் “தேவ மகிமை” என்று வார்த்தை 19 இடத்திலும் வருகிறது. ☀ மனுபுத்திரன், காவல்காரன், ஜாமக்காரன் போன்ற வார்த்தைகள் தீர்க்கதரிசிக்கு தேவனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
☀ இது யூதாவின் மீட்பின் சம்பவம் (உலர்ந்த எலும்பு உயிரடைதல்) மிக அழகாக கூறப்பட்டுள்ளது மட்டுமல்ல ஆலயத்திலிருந்து புறப்படும் ஆறு தரிசனம் சிறந்தவை. ☀ ஒரு மனிதன் தேவனை தரிசிப்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. ஆவியின் நிறைவு மற்றும் ஆவியில் எடுத்துச் செல்லப்படுதல் போன்ற அனுபவங்கள் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன.
☀ அநேக கள்ள மேய்ப்பர்கள் பற்றியும், நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவைப் பற்றியும் கூறப்பட்ட பகுதி (34 அதிகாரம்) கள்ள மேய்ப்பர்கள், நல்மேய்ப்பராகிய கிறிஸ்து அ. அவர்கள் மந்தைகளைப் போஷிப்பதற்கு பதிலாக தங்களையே போஷித்தார்கள் (34:2,3) இஸ்ரவேல் மலைகளில் அவர்களைப் போஷிப்பார் (34:14) ஆ. அவர்கள் நசல் கொண்டதை குணப்படுத்தாமலும், எலும்பு முறிந்தவைகளை காயம் கட்டாமலும், காணாமல் போனதைத் தேடாமலும் இருந்தார்கள் (34:5) அவர் காணாமல் போன ஆடுகளைத் தேடுவார். அவர் எலும்பு முறிந்ததைக் காயம் கட்டி குணப்படுத்துவார் (34:11,16) இ. அவர்கள் மேய்ப்பன் ஸ்தானத்திலிருந்து தள்ளுண்டு போவார்கள் (34:10) அவர்களுடன் நித்திய உடன்படிக்கை செய்வார் (34:25)
☀ தேவாலயத்தின் இரண்டு தரிசனங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அ) சீர்க்கேடடைந்து அழிவுக்குக் காத்திருக்கும் தேவாலயம் (8-11 அதி.) ஆ) பரிசுத்தமாக்கப்பட்டு, பரிபூரணமாய்ப் புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் (40-48 அதி.) ☀ மற்ற தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் அதிகமான கிரியைகளை தன் வாழ்க்கையிலேயே காண்பிக்கும் புத்தகம். ☀ ஆயிர வருட அரசாட்சியின் தேவாலயத்தையும், எருசலேமையும் மகிமையோடு கூறும் புத்தகம். புதிய வானம், புதிய பூமியை படம் பிடித்துக் காட்டும் ஏசாயாவைப் போல் ஆயிர வருட அரசாட்சியின் தேவாலயம், ஆசாரியன் நிலை, எருசலேமின் நிலை போன்றவற்றை கிரமமாக அறிந்து கொள்ள முடிகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum