இனியாவது உணர்வு அடைவாயா ?
Fri Jul 17, 2015 10:32 pm
ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் நிறைய ரூபாய் நோட்டுகளும் , சில்லறைக் காசுகளுமாகக் குவிந்து கிடந்தன . ஒரு நாள் அவற்றுக்குள் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆயிரம் ரூபாய் நோட்டு சொன்னது ,
" இருக்கிற நோட்டுலேயே பெரிய நோட்டு நான்தான். எனவே நான்தான் பெரியவன் ".
ஐநூறு ரூபாய் நோட்டு சொன்னது, " நீ மதிப்பில் உயர்ந்தவனாக இருந்தாலும், அதிகமாய்ப் புழக்கத்தில் இருப்பது நான்தான். எனவே நானே பெரியவன்".
இப்போது நூறு ரூபாயும், ஐம்பது ரூபாயும் ஒன்று கூடிக் கூவின , " கல்யாண வீட்டிலும், மற்ற விசேஷங்களிலும் அதிகமாக பயன்படுவது நாங்க தானே?
நல்லது கெட்டதுகளில் முக்கியமான எங்களை விடவா நீங்கள் பெரியவர்கள்? ".
இப்போது பத்து ரூபாயும், இருபது ரூபாயும் வாய்திறந்தன. " ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுக்கு நாங்கள் தேவை. டீக்கடையிலும் , பஸ்ஸிலும் ஆயிரமும், ஐநூறும் சில சமயங்களில் நூறும், ஐம்பதும் கூட மறுக்கப்படலாம். எனவே அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் ".
இப்போது கல்லாப் பெட்டியில் பலத்த சிரிப்பு சத்தம். சத்தம் வந்த திசையை நோக்கி எல்லாம் திரும்பிப் பார்த்தன. கேலியாக சிரித்தது சில்லறைக் காசுகளும், செல்லாத நோட்டுகளும்தான்.
சிரிப்புக்கு நடுவில் அவை சொல்லின ,
" நீங்களெல்லாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும் மனிதர்களிடம்தான் அடிமைப்பட்டுக் கிடப்பீர்கள். ஆனால் சில்லரைக் காசுகளும், செல்லாத நோட்டுகளுமாகிய எங்களுக்குத்தான் மனிதர்கள் முக்கியத்துவம் கொடுத்து கடவுளின் காணிக்கைப் பெட்டியில் போடுவார்கள்.
இப்ப சொல்லுங்க. அதிக அளவில் கடவுளின் காணிக்கைப் பெட்டியில் போய்ச் சேரும் எங்களைவிடவா நீங்க எல்லாரும் உசத்தி? "
என்று கேட்டன. மற்ற ரூபாய் நோட்டுகள் ஒன்றும் பேசமுடியாமல் மௌனமாயின.
செல்லமே!
" இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.
மல்கியா 1 :13
உணர்வு அடைவாயா இனியாவது?
John Saravanan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum