முறையற்ற உணர்வு காதல் அல்ல
Tue Mar 18, 2014 6:20 pm
ஒரு முனிவருக்கு மாம்பழம் ஒன்று கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.
மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.
அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன் ஆசை நாயகனான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.
குதிரைக்காரனோ, அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை தன் மனைவியிடம் கொடுத்தான்.
அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.
மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன் கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான். தன் மனைவியின் செயலை தெரிந்துக்கொண்டான். அடுத்த நாள் அவன் யாரிடமும் எதுவும் கூறாமல் சன்யாசம் பூண்டான்.
காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.
"உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்." நீதிமொழிகள் 5:15,18,19,20,21
நன்றி: சி.ஜேஷீபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum